இலங்கை விமான நிலையத்தில் சாப்பிட சென்ற நாஞ்சில் விஜயனுக்கு கிடைத்த அதிர்ச்சி.. எமோஷனல் வீடியோ
சென்னை: விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த நாஞ்சில் விஜயன் தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதாவது இலங்கைக்கு தான் போயிருந்த நேரத்தில் தனக்கு ஹோட்டலில் கிடைத்த எதிர்பாராத அதிர்ச்சி குறித்து அதில் பேசியிருக்கிறார்.
பயங்கரமான பசியில் இருந்த தனக்கு இலங்கை ஏர்போர்ட்டில் ஒரு கிண்ணத்தில் சோறும் அதில் வெறும் பச்சை மிளகாய் மற்றும் மல்லி தூள் போட்ட குழம்பு வைத்து சாப்பாடு தந்து 900 ரூபாய் வாங்கிவிட்டனர் என்று வருத்தத்தோடு பேசி இருக்கிறார்.

நடிகர் நாஞ்சில் விஜயன் விஜய் டிவி பிரபலமாக மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி டிக் டாக் வீடியோக்கள் மூலம் இணையதளத்தை பயன்படுத்தும் ரசிகர்களுக்கு பரிச்சயமாக இருக்கிறார். அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான அது இது எது, கலக்கப்போவது யாரு போன்ற காமெடி நிகழ்ச்சிகளில் தன்னுடைய காமெடி பேச்சு மற்றும் உடல் மொழி போன்றவற்றால் பலரை சிரிக்க வைத்திருக்கிறார்.
பெண் வேடமிட்டு நாஞ்சில் விஜயன் பெரும்பாலான விஜய் டிவி நிகழ்ச்சிகளில் நடித்திருப்பார். இவருடைய நடிப்பு பலரையும் கவர்ந்திருக்கும். அதுபோல தனியாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் அடிக்கடி சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு.
https://tamil.oneindia.com/television/actress-bhuvneshwari-talks-about-her-mental-confusion-after-she-was-arrested-in-a-prostitution-case-563505.html
குறிப்பாக 2020 ஆம் ஆண்டில் டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி மற்றும் நடிகை வனிதா இடையே பிரச்சனை ஏற்பட்டது. அந்த பிரச்சனையில் வனிதாவுக்கு ஆதரவாக நாஞ்சில் விஜயன் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது. சூர்யா தேவி நாஞ்சில் விஜயன் மீது போலீஸ் புகார் அளிக்க அவர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு தொடங்கப்பட்டது.
இந்த வழக்கிற்காக நாஞ்சில் விஜயன் ஆஜராகாத காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் தான் சிறையில் இருந்து விடுதலையான அவருக்கு திருமணமும் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு தன்னுடைய மனைவியோடு சமூக வலைத்தளத்தில் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக நீயா நானா நிகழ்ச்சியிலும் நாஞ்சில் விஜயன் கலந்து கொண்டிருந்தார்.
https://tamil.oneindia.com/television/bigg-boss-tamil-season-7-december-6th-promo-1-and-fans-reaction-563489.html
இப்படியான நிலையில் தான் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவத௫ நாஞ்சில் விஜயன் இலங்கைக்கு சென்றிருக்கிறாராம். அங்கு தனக்கு சரியான பசியாக இருக்கும் போது விமான நிலையத்தில் உள்ளே ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக போயிருக்கிறார்.
அங்கு ஒரு கிண்ணம் நிறைய வெறும் சோறும், வெறும் மிளகாய்கள் வெட்டி போட்டு மல்லி பொடி மட்டுமே போடப்பட்ட ஒரு குழம்பு கொடுத்திருக்கிறார்கள். அதற்கு 900 ரூபாய் வாங்கி விட்டார்கள் என்று புலம்பி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications