இன்னும் 4 மாசம் இருக்கு.. என் மகனுக்காக நான் எடுத்த முடிவு! 6 மாசம் முடிஞ்சிடுச்சு! நெப்போலியன் நெகழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் ஜப்பானில் வைத்து திருமணம் நடத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது மலேசியா சிங்கப்பூரில் சுற்றுலா சென்றிருக்கும் நெப்போலியன் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடந்த ஆறு மாதமாக தான் செய்து வரும் செயல்கள் குறித்து நெப்போலியன் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

நடிகர் நெப்போலியனை சினிமா ரசிகர்கள் பலருக்கும் தெரிந்திருக்கும். 80ஸ் காலகட்டத்தில் இறுதியில் சினிமாவில் அறிமுகமானார். புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் தான் இவர் அறிமுகம். அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கு 27 வயது தான். ஆனால் அந்த திரைப்படத்தில் 60 வயது மதிக்கத்தக்க வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

Napoleon

நெப்போலியன் நடித்த முதல் படம்

முதல் படமே இவரே எதிர்பார்க்காத அளவிற்கு இவருக்கு பிரபலத்தை கொடுத்து விட்டது. ஒரு திரைப்படத்தில் ஒரு நடிகர் என்ன மாதிரி நடிக்கிறாரோ அதேபோலத்தான் தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்பு வரும் என்று சொல்வார்கள். அது போல தான் நெப்போலியனுக்கும் முதல் படத்தில் அதிக வயதுடைய வில்லன் கேரக்டரில் நடித்ததால் அதைத் தொடர்ந்து அதே போலவே சில வருடங்களாகவே நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனாலும் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் நெப்போலியன் அந்த கேரக்டரில் எல்லாம் நடித்து தன்னுடைய நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், கன்னடம், பெங்காலி என பலமொழிகளிலும் நெப்போலியன் நடித்திருக்கிறார். அதிலும் இவருக்கு தமிழைப் போலவே கேரளாவிலும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள்.

எட்டுப்பட்டி ராசா

ஆரம்பத்தில் வில்லனாக நடித்தாலும் பிறகு கதாநாயகனாக மாறிவிட்டார். அதிலும் எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்கள் எல்லாம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கியது. எப்போதும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடல்களில் இந்த படத்தில் உள்ள பாடல்கள் இடம் பிடித்திருக்கும். அதுபோல சினிமாவில் மட்டுமல்லாமல் நெப்போலியன் அரசியலிலும் கலக்கி இருக்கிறார்.

அரசியல் பிரபலம் நெப்போலியன்

முதல் திரைப்படத்தில் அவர் நடிப்பதற்கு முன்பே தன்னுடைய மாமா கேஎன் நேருவிடம் உதவியாளராக இருந்திருக்கிறார். பிறகு நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலிலும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் எம்எல்ஏவாக தேர்வாகியிருந்தார். அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சராகவும் பணியாற்றி இருக்கிறார்.

Napoleon

நெப்போலியன் குடும்பம்

சினிமா அரசியல் என்று பிஸியாக இருந்த நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கும் தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகன் தனுஷுக்கு நான்கு வயதிலேயே தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருக்கிறது. 10 வயதிற்கு மேலே அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை வந்திருக்கிறது.

நடிப்பு மற்றும் அரசியல்

தன்னுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு அரசியல் சினிமாவையும் பார்த்து வந்த நெப்போலியன் ஒரு கட்டத்தில் தன்னுடைய மகனுக்காக அரசியல் மற்றும் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் இருந்தபடியே தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் சில வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

மகனின் ஆசை

அதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெப்போலியன் தன்னுடைய மகனின் திருமணத்தை அறிவித்திருந்தார். அந்த செய்தி பெரிய அளவில் இணையத்தில் பேசப்பட்டது. சிலர் பாராட்டினாலும் சிலர் விமர்சித்து வந்தனர். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத நெப்போலியன் தன்னுடைய மகன் ஆசைப்பட்ட மாதிரியே ஜப்பானுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.

நெப்போலியன் மகன் திருமணம்

அங்கு வைத்து தன் மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்தி முடித்து இருந்தார். திருமணத்திற்கு பிறகும் மூன்று மாதங்கள் ஜப்பானிலேயே இருந்துவிட்டு இப்போது அமெரிக்காவிற்காக பயணத்தை தொடங்கி இருக்கிறார்கள். இந்த நிலையில் நெப்போலியன் பேசிய வீடியோ ஒன்றை நெப்போலியன் நண்பர் ஜீவன் தன்னோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

தசை சிதைவு நோய்

அந்த வீடியோவில் நெப்போலியன் பேசுகையில், என்னுடைய மகனுக்கு தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதனால் என்னுடைய மகனை முடக்கி வீட்டிலேயே வைக்க கூடாது என்று நான் நினைத்தேன். என்னுடைய மகனுக்கு சுற்றி பார்ப்பது ரொம்பவும் பிடிக்கும்.

மகனின் ஆசை

அதனால் அவனுக்கு உலகத்தை காட்ட வேண்டும் என்று நினைத்திருந்தேன். அவன் ரொம்ப நாளாக ஜப்பானை பார்க்கணும் என்று கேட்டுக் கொண்டே இருந்தான். ஆனால் டாக்டர் அவன் விமானத்தில் பயணிக்க கூடாது என்று சொல்லிவிட்டார். அதனால் நாங்கள் 10 மாத காலத்திற்கு பிளான் பண்ணி ஜப்பானுக்கு தரைவழி பயணத்தை மேற்கொள்ள நினைத்தோம்.

சுற்றுப்பயணம்

ஜப்பானுக்கு போவதற்கு மூன்று மாதம் ஆனது. பிறகு என்னுடைய மகன் திருமணத்தையும் ஜப்பானிலேயே நடத்தி முடித்துவிட்டு அங்கேயே மூன்று மாதம் இருந்தோம். இன்றோடு ஆறு மாதம் முடிவடைகிறது. இப்போது மலேசியா சிங்கப்பூர் என எல்லா இடத்திலும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் அமெரிக்காவிற்கு போய் சேர்வதற்கு நான்கு மாதம் ஆகும்.

நெப்போலியன் நடித்த படங்கள்

என்னுடைய ஆசை ஒன்றே ஒன்றுதான். குடும்பத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் எல்லாவற்றையும் விட்டுக் கொடுத்துவிட்டு ஆரம்பத்தில் நடிகராக 150 படங்களில் நடித்து இருக்கிறேன். தமிழில் மட்டுமல்ல பல மொழிகளிலும் நடித்திருக்கிறேன் பிறகு எம்எல்ஏவாக அமைச்சராக பணியாற்றி இருக்கிறேன்.

Napoleon

நெப்போலியன் ஆசை

என்னால் எந்த அளவிற்கு சேவை செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து முடித்து விட்டேன். இப்போ என்னுடைய குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காக தானே இத்தனை நாட்களாக ஓடிக் கொண்டிருந்தோம். அவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதற்காக நான் முடிவெடுத்திருக்கிறேன். இதே போல எல்லோரும் தங்களுடைய குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று அந்த நிகழ்ச்சியில் நெப்போலியன் பேசியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+