National Award: அப்போ சாப்பாட்டுக்கே வழியில்லை! இப்போ உழைப்புக்கு பலன் ! எம்எஸ் பாஸ்கர் பற்றி நெகிழ்ந்த பார்த்திபன்
சென்னை: நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், 'பார்க்கிங்' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்றுள்ளார். அவரது இந்த வெற்றிக்கு திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த வரிசையில், நடிகர் பார்த்திபன் தனது நெருங்கிய நண்பரான எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து, இருவரும் இணைந்து கஷ்டப்பட்ட காலத்தை நினைவு கூர்ந்தது, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

சாப்பாட்டுக்கு வழியில்லாமல் திணறிய நாட்கள்
பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், எம்.எஸ்.பாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்து, தனது பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். "நானும் பாஸ்கரும் சாப்பாட்டுக்கு வழியில்லாம, திறமையை வெளிக்காட்ட திணறிட்டு இருந்தோம். அப்போ, நாங்க ரெண்டு பேருமே எங்க திறமையை வெளிக்கொண்டு வர ரொம்பவே கஷ்டப்பட்டோம்," என்று அவர் கூறினார். இவ்வளவு கஷ்டங்களை கடந்து, தற்போது பாஸ்கர் தேசிய விருது வாங்கியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகப் பார்த்திபன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பார்த்திபனின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் பார்த்திபனின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, "கடின உழைப்புக்கு ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு பாஸ்கர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு," என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
எம்.எஸ்.பாஸ்கரின் நெகிழ்ச்சியான பேச்சு
தேசிய விருது கிடைத்த பிறகு பேட்டியளித்த எம்.எஸ்.பாஸ்கர், மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். "இந்த விருதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு கலைஞன் தனது நடிப்பை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் 'பார்க்கிங்' படத்தில் செய்தேன். எனது நடிப்பைப் பாராட்டி எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என்று கூறினார்.
எம்.எஸ்.பாஸ்கர், 'பார்க்கிங்' திரைப்படத்தில் தனது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரத்திற்காக நன்றி தெரிவித்தார். மேலும், இந்த விருது தனக்கு மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கும் ஊக்கத்தை அளிப்பதாகவும் கூறினார். தேசிய விருது கிடைத்த இந்த தருணத்தில், தான் வெற்றி பெற காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் நெகிழ்ச்சி
நடிகர் எம்எஸ் பாஸ்கர் ஆரம்பத்தில் சின்னத்திரை வெள்ளி திரையில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து இப்போது வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்த வருகிறார். சமீபத்தில் அவர் நடிக்கும் கேரக்டர்கள் அவருடைய நடிப்பை வெளிக்காட்டும் விதமாகவே இருக்கிறது. பார்க்கிங் இடத்தில் மட்டும் இல்லாமல் சமீபத்தில் வெளியாகி அதிகமான வெற்றி பெற்ற டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்திலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications