குழந்தையை குடுத்துட்டு குழந்தை மாதிரி தூங்கறானே!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தி எல்லா சொத்துக்கும் வாரிசு என்றாலும், உண்மை தெரியாத நிலையில் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கா.
திரு கூட காதல் கல்யாணம் செய்து, வயித்துல குழந்தையும் உருவான நிலையில, திருவுக்கு மண்டையில அடிபட்டு கடந்த 5 வருஷத்து நினைவு இல்லாம போயிருது.

இதை காரணம் காமிச்சு, பணக்கார நண்பர் துரையின் பொண்ணு அனன்யாவை கல்யாணம் செய்து வச்சுடலாம்.. ஆனந்தியை தீர்த்து கட்டலாம்னு முடிவு செய்து திருவோட அப்பாவும், நண்பர் குடும்பமும் சதி வேலையை செய்யறாங்க.
கடைசியில திரு வீட்டுக்கே திருவோட கெஸ்ட்டா ஆனந்தி வந்து தங்கற மாதிரி சூழ்நிலை உருவாகுது. ஆனந்தி சந்தோஷமா இருக்கா.திரு அம்மாவும் சந்தோஷமா இருக்காங்க.

ஆனந்தி தங்கள் குடும்ப வாரிசை சுமப்பது திருவோட அம்மாவுக்கு சந்தோஷமா இருந்தாலும், அவன் நினைவில் இல்லாத போது, இதை யாரிடம் சொல்றதுன்னு சொல்லாம இருக்காங்க.
திரு போரடிக்குதுன்னு வெளியில போறேன்னு சொல்றான். உனக்கு வழி தெரியாது..தனியா போகாதப்பான்னு அம்மா சொல்ல, ஆனந்தியை அழைச்சுக்கிட்டு போறேன்மான்னு திரு சொல்ல, இருவருக்கும் சந்தோசம்.

வழியில ஆனந்தி வாமிட் எடுக்க, ஆஸ்பத்திரிக்கு போயி ஆகணும்னு திரு அடம் புடிக்கறான்.சரின்னு ஆஸ்பத்திரிக்கு போக, அங்க மாமியாருக்கு எஸ்.எம்.எஸ் பண்றா ஆனந்தி. அவங்களும் வந்துட ஒரு வழியா ஆனந்தி தப்பிச்சுக்கறா.
வீட்டுக்கு வந்த உடனே, திரு அம்மா தலை வலிக்குது.. எனக்கு தைலம் தேய்ச்சு விடுங்கன்னு சொல்றான். திரு நீ மேல உன் ரூம்ல இரு.. நான் ஆனந்தியை அனுப்பி வைக்கறேன்னு சொல்றாங்க.
ஆனந்தியை திருவின் ரூமில் விட்டு, ஆனந்தி இதமா, பதமா தைலத்தை தேய்ச்சு விட்டுட்டு. திரு தூங்கி எழுந்தா சரியாகிடும்னு சொல்றாங்க. அவங்க போயிட, ஆனந்தி திருவுக்கு தைலம் தேய்க்க தேய்க்க அவன் தூங்கிடறான்.
தூக்கத்தில் புரண்டு படுத்தவன், ஆனந்தியின் மடியில படுத்துக்கறான். பாவம் ஆனந்தி அப்போதுதான் மனம் திறந்து பேசறா.என் வயித்துல உங்க குழந்தை வளருது திரு. நீங்க குழந்தை மாதிரி என் மடியில் தூங்கறீங்க.

உருகி உருகி காதலிச்சு கல்யாணம் செய்துகொட்டோம்.. உங்களுக்கு எதுவுமே நினைவுல இல்லியே திரு. என் வயித்துல இருக்கும் குழந்தை இப்போதுதான் கருவா இருக்கு. இருந்தாலும் தொட்டு பாருங்க திரு.. அப்பான்னு உங்களை புரிஞ்சுக்கும்னு கண்ணீரோடு பேசறா.
திருவின் கையை எடுத்து, தன் வயிற்றில் வச்சு கண்ணீர் வடிக்கறா. மனம் உருகும் காட்சியா இது இருந்துச்சு.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications