Nayagi serial: அனன்யா பாவமா...இல்லை அவளை பெத்தவங்க பாவமா?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் மட்டும்தான் கிராமப் புறங்களில் பெண்களோ, ஆண்களோ சீரியல்களை விரும்பிப் பார்க்கிறார்கள்.அதற்குப் பிறகான நேரம் அவங்களுக்கு உறங்கப் போகும் நேரம்.
அதே மாலை ஒளிபரப்பாகும் சீரியல்களை சீரியல் விரும்பிகள் அவ்வளவாகப் பார்ப்பதில்லை. காரணம், குழந்தைகள் படிக்கும் நேரம் அது.
இதற்குப் பிறகான அரை மணி நேரம்தான் அவர்கள் விரும்பிப் பார்க்கும் சீரியலின் நேரம்.இந்த நேரத்தில்தான் நாயகியை அனைவரும் விரும்பிப் பார்க்கிறார்கள்.

அனன்யா பெற்றோர்
பெற்றோர் சொல்பேச்சு கேட்காமல் வளருவது, இதற்கு பெற்றோர்கள் சப்போர்ட் செய்வது என்று பணக்கார வீட்டுப்பெண்களை மிக மிக செல்லமாக வளர்ப்பது என்பது இயற்கைதான்.அதுக்குன்னு இப்படியா? மனநிலை பாதிக்கப்பட்டவள் போல கண்முன்னே பெத்த பெண் வளர்கிறாள்.இவளுக்கு ஆதரவாக பெற்றோரும், கலிவரதனும் இருப்பது என்பது ரொம்ப மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டு இருக்கிறது.

நாயகி சீரியலை
பள்ளிப் பிள்ளைகளும் நாயகி சீரியலை விரும்பிப் பார்க்கிறார்கள். இதில் அனன்யா திருவின் மேல் பைத்தியமாக இருப்பது, அவனை அடைய வேண்டும் என்று எந்த எல்லைக்கும் போவது, இல்லையா மன நிலை சரியில்லாதவள் போல நடந்துக் கொள்வது என்று மோசமான முன் உதாரண கதாபாத்திரமாக அனன்யா கதாபாத்திரம் இருக்கிறது.

எது சரி
எது தப்பு எது சரின்னே தெரியாமல், திருவின் உயிரணுக்களை எடுத்தும் அத்துடன் கூட அப்பா,அம்மா அனுமதி இல்லாமல் டெஸ்ட் டியூப் பேபியாக்கி, தன்னுடைய கருப்பையில் வைத்து வளர்ப்பது என்று எல்லாமே எல்லை மீறிய மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உச்சம் என்று தெரிகிறது.

இப்படிப்பட்ட கதைகள்
இப்படிப்பட்ட கதைகளில் ரேட்டிங் நம்பர் ஒன்றை பிடிப்பது என்பது எளிதான காரியம் இல்லை. அதற்காக, கிடைத்த அந்த நேரத்தை இப்படி கடுப்பேத்தும் அனன்யாவின் கதாபாத்திரத்தை சற்றே மாற்றி அமைக்கவும்.நிஜத்தில் இப்படிப்பட்ட பெண்கள் சமூகத்திலிருந்தால் அவர்களுக்கு மனசு சரியில்லை என்றுதான் அர்த்தம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications