Nayagi Serial: செத்த மாதிரி நடிச்சு ஓடி ஒளியறது சாத்தியமா?.. குழப்புதுங்க!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை ரேட்டிங்கில் முதல் இடம்தான். என்றாலும் நம்ப முடியாத காட்சிகள், திகில் என்று மக்களை குழப்புவது போல இருக்கிறது சீரியல்.
திருவின் மேல் ஆசைப்படும் அனன்யா செத்துட்ட மாதிரி நடிச்சு பின்னர் உயிரோட தலைமறைவா இருந்து வெளிநாட்டுக்கு போலி பாஸ்போர்ட்டில் போவது என்பது எப்படி சாத்தியம்?
அப்படியே இருந்தாலும் வெளிநாட்டில் அனன்யா எத்தனை நாட்கள் வாழ்ந்து விட முடியும்? அங்கிருந்து திருவை கூப்பிட்டால் மட்டும் ஆனந்தியை விட்டுட்டு அவன் அங்கே வந்துருவானா?

மலைக் கோயிலில்
ஆனந்தி அந்த கோயிலுக்கு வருவாள் என்று எதிர்பார்த்து, ஒரு திட்டத்தோடு அவளிடம் வம்பிழுக்க வருகிறாள் அனன்யா. எதிர்பார்த்த மாதிரி வந்த அவளும், மலையின் கல்லில் அவளுடன் நின்று கொண்டு வாதம் செய்கிறாள் .ஆனந்தி கழுத்தை அனன்யா பிடிக்க, அங்கே வேடிக்கை பார்க்க மக்கள் சூழ்ந்து விடுகிறார்கள்.

ஆனந்தி அனன்யாவை
அனன்யாவை ஆனந்தி கீழே தள்ளிவிடுவது போல, அனன்யா நடித்து ஆ என்று கத்தி மலை மேல் இருந்து கீழே விழுந்து விடுகிறாள்., பார்த்த மக்கள் போலீஸுக்கு தகவல் சொல்லி, சாட்சியும் சொல்லி ஆனந்தியை போலீசிடம் ஒப்படைக்கிறார். எப்போதுமே இறந்தவர்கள் இறந்தவர்கள்தான். உயிரோடு இருப்பது என்பது சாத்தியமில்லை. ஆனால், இங்கு இறந்ததாக டிராமா போடுகிறார்கள்.

எதையும் சாதிக்கலாமா?
பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பது போல ஆரம்பத்திலிருந்தே கதை நகர்கிறது. இப்போது செத்த மாதிரி நடிச்சு, உயிர் பிழைத்து வாழலாம். ஆனால், மற்றவர்கள் அதை கொலை போல சித்தரித்து, நிரபராதியை ஜெயிலில் தள்ளி கொடுமை படுத்தலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

மார்ச்சுவரி பிணம்
மார்ச்சுவரியில் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஒரு பிணத்தை வாங்கி வந்து மலையில் போட்டு இதுதான் செத்துட்ட அனன்யான்னு நிரூபிக்கறாங்க. இதுதான் அனன்யான்னு டாக்டரும் சான்றிதழ் கொடுக்கிறார்.கடைசியில் அவரும் திருவிடம் மாற்றிக் கொண்டு பொய் சொல்லாத தெரியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்.
தற்கொலை, கொலை, கொள்ளை,களவு என்று சினிமாவை விட குறிப்பா இந்த சீரியலில் வன்முறை அதிகமாகத்தான் இருக்கிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications