Nayagi serial: அம்மாடி கண்மணி அக்கம் பக்கம் பார்த்து பேசப்படாதா?
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரொம்ப தந்திரம் மிகுந்த சீரியலாக ஒளிபரப்பாகி வருது. அனன்யா, அவளின் அப்பா துரையரசன்.திருவின் அப்பா கலிவரதன் இவர்கள் செய்யும் சூழ்ச்சிகள் ரொம்ப கொடுமை.
அமெரிக்காவில் திருவின் உயிர் அணுக்களை சேமித்து வச்சு, தனது வயிற்றில் கருவாக்கினது சுத்த பைத்திய காரத்தனமாக இருக்கிறது. இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்று . ரொம்ப யோசனை வருதுங்க.
இப்படியான சில விஷயங்களை தவிர்த்தால் நாயகி முழுதும் குடும்ப சீரியலாக இருந்திருக்கும். ஆனால், அப்படி கொண்டு போக கதை இல்லை என்பதுதான் உண்மை.

சற்குணம் கண்மணி
கண்மணியை ஒரு காலத்தில் செழியன் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது கணவனைப்பற்றி அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் தவறாக பேச, தான் கர்ப்பமாக இருப்பது போன்று நடிக்கிறாள் கண்மணி. இதனால்,சற்குணம் இன்னும் கண்மணி மேல் பாசமா இருக்காங்க. ஆனால், அதற்குள் செழியனை வழிக்கு கொண்டு வந்து உண்மையாக கர்ப்பமாகிடலாம் என்று பார்த்தால் அவன் சுகாசினி பேச்சை கேட்டுக்கொண்டு கண்மணியை வெறுக்கிறான்.

செழியன் சுகாசினி
சுகாசினியின் சதி வேலைகள்தான் இதுன்னு தெரிஞ்சுக்கிட்ட செழியன் திருந்தி,கண்மணியை ஏத்துக்கறான்.ஆனால், அதற்குள் பொய்யாக உண்டான குழந்தை கண்மணி கீழே விழுந்து கலைஞ்சு போச்சுன்னு சற்குணம் அம்மாவை நம்ப வச்சுடறாங்க. அவங்களும், வருத்தப்பட்டு கண்மணிக்கும் ஆறுதல் சொல்றாங்க. இதை செழியன் தம்பி கோபியால் பொறுத்துக்க முடியலை.

அம்மாவுக்கு நடிப்பை
கண்மணி குடும்பத்தின் கர்ப்பவதி நாடகத்தை அம்மாவிடம் சொல்லியே ஆக வேண்டும் என்று சுகாசினியுடன் சேர்ந்து கண்மணியின் அப்பாவுக்கு தண்ணி வாங்கிக் குடுத்து,உண்மையை அவர் வாயாலே வாங்கி கொள்கிறான். அம்மா கோயில் தர்மகர்த்தா பதவிக்கு போட்டியிட கண்மணியை பரிந்துரைக்கையில் யாரையோ வச்சு இதை போட்டு காமிக்க ஏற்பாடு செய்யறான். இதைப் பார்த்த சற்குணத்தமமா செழியன், கண்மணியை தனி சமையல் செய்துக்க சொல்றாங்க.

பொய் மீண்டும்
கீழே மாமியார் சற்குணம் அம்மா இருக்க, மாடியில் இருந்து ஆ ன்னு சத்தம்.கண்மணி என்று சற்குணம் அம்மா மாடி ஏறிப்போயி பார்க்க அங்கே கண்மணி கீழே விழுந்து கிடக்கா.என்னடி ஆச்சு..பார்த்து வேலை செய்ய மாட்டியான்னு கேட்டுட்டு பார்த்து ஜாக்கிரதையா வேலை செய்யுன்னு சொல்லிட்டு போயிடறாங்க.
அத்தை பேசிட்டாங்க...இந்த கண்மணி சாமர்த்தியம் அப்படி.. நான் நடிச்சேன்..அத்தை உண்மையாவே பதறிப்போய் என்னை கை கொடுத்து தூக்கிவிட்டாங்கன்னு பேசிகிட்டு இருக்கும்போதே பர்ஸை எடுக்க வந்த சற்குணம் சீ... வாயைத் திறந்தாலே பொய்...தூன்னு துப்பிட்டு போறாங்க.
இதுக்குத்தான் அக்கம் பக்கம் பார்த்துட்டு பேசணும்னு சொல்றது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications