அத்தை மருமகள் உறவு பலத்துக்கான அற்புத ஊடல்... அருமையான ஃபீலிங்!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் அத்தை மருமகள் உறவில் ஊடல் வருவதை மிக அருமையாக அற்புதமான காட்சியாக பதிவு செய்திருக்காங்க..
ஆனந்தியை காதலிச்சு அப்பாவை எதிர்த்து கல்யாணம் செய்துக்கிட்டவன் திருமுருகன். இருவரையும் சேர்ந்து வாழவிடாம மாமனார் சதி செய்துகிட்டே இருந்த காலக்கட்டத்தில் தந்திரம் செய்து சாந்தி முகூர்த்தம் நடந்துடுது.
இது நடந்த ஓரிரு நாட்களில் ஆனந்தியை கொல்ல செய்த சதி வலையில் மகன் திருவே வீழ்ந்து அவனுக்கு தலையில் பலத்த அடி பட்டுடுது. அமெரிக்காவில் போய் ட்ரீட்மென்ட் பார்த்துட்டு வர்றாங்க.ஆனாலும், திருவுக்கு 5 வருடங்களில் நடந்தவை நினைவில் இல்லை.ஆனந்தியை கல்யாணம் செய்துக்கிட்டது சுத்தமாகவே நினைவில்லை.

கர்ப்பமான ஆனந்தி
திருவுக்கும், ஆனந்திக்கு பிறக்கும் குழந்தையால் மாமனாருக்கு ஆபத்து வரும்னு குருஜி சொன்னதைக் கேட்டு, இருவரையும் பிரிச்சுட சதி செய்துவந்த கலிவரதனுக்கு இப்போ நிம்மதி.மகனுக்குத்தான் கல்யாணம் செய்துக்கிட்டதே நினைவில்லையே... ஆனா, திரு அமெரிக்கா போய்ட்டு வந்தப்பவே ஆனந்தி கர்ப்பம்.

கர்ப்பத்தை கண்மணியிடம்
தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் கண்மணிக்கு மட்டுமே தெரிகிறது. இப்போதைக்கு யாரிடமும் சொல்ல வேணாம்.. திருவுக்கு என்னை நினைவே இல்லை.. அப்பா இதைக் கேட்டா கதறி அழுவார்..யாரும் இப்போ சந்தோஷப்பட மாட்டாங்கன்னு கர்ப்ப விஷயத்தை சொல்லாம இருக்க முடிவு செய்யறாங்க.

வீட்டில் அடைக்கலம்.
ஆனந்திக்கு கலிவரதன் ஆட்களால் தொல்லை வருது. அப்போது திரு வந்து காப்பாத்தறான். தொடர்ந்து அவன் பார்வையில் ஆனந்தி இருக்கணும்னு அத்தையும், பெரிய அத்தை சற்குணமும் சேர்ந்து, வீட்டில் ரவுடிகள் கல் அடிப்பது போல செட்டப் செய்யறாங்க.அப்போ யதேச்சையாக வருவது போல திருமுருகனை அத்தை அனுப்ப, அவன் கையோடு ஆனந்தியை தன் வீட்டுக்கு கெஸ்ட்டாக கூட்டிட்டு போயிடறான்.

மசக்கை வாந்தி
சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே ஒரு நாள் வாந்தி எடுக்கறா ஆனந்தி. என்ன பிரச்சனை ஆனந்தி..ஆர் யூ ஓகேன்னு கேட்கறான் திரு. உன் குழந்தையை வயித்துல சுமந்துக்கிட்டு இருக்கேன்னு எப்படி சொல்வேன் திருன்னு மனசுக்குள்ள உருக்கமா நினைக்கறா ஆனந்தி.

கொல்ல சதி
ஆனந்தியை கொல்ல அவளது அறையின் ஏசியில் நச்சு காற்று வரும்படி செட் செய்துவிடறாங்க கலிவரதன் ஆட்கள். ஆனால், இது தெரியாம திருவின் தங்கை அனு, ஆனந்தியை வெளியில அனுப்பிட்டு அவள் படுத்துக்கறா. இதனால்,அவள் அறையில் தவறி விழுந்து மண்டையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடக்கறா.

ஆனந்தி நோ
அனுவுக்கு அரியவகை ரத்தம் தேவைப்படுது. அந்த வகை ரத்தம்தான் ஆனந்திக்குன்னாலும் அவ ரத்தம் தர மறுக்கறா.எல்லாருக்குமே கோபம் வருது. அனு உங்ககிட்ட எப்பவும் வெறுப்பா பேசுவான்னு ரத்தம் தர மாட்றீங்களா ஆனந்தின்னு திருவே சொல்ற அளவுக்கு நிலைமை இருந்தாலும், ஆனந்திதான் அனுவுக்கு தேவையான ரத்தத்தை வரவழைச்சு அவ உயிரை காப்பாத்துறா.

மனசு ஆறலை
அனு பிழைச்சுட்டாலும், ஆனந்தி அனுவுக்கு ரத்தம் தராதது திருவின் அம்மா ஆனந்தியின் அத்தையை ரொம்ப யோசிக்க வைக்குது. நீ பழி வாங்கற ஆள் இல்லைன்னு நான் நினைச்சேன்.. ஆனா, இப்படி பண்ணிட்டியே ஆனந்தி.. உன்னை ரொம்ப நம்பி ஏமாந்துட்டேன். எப்படியோ ரத்தம் ஏன் கொடுக்கலைன்னு உண்மையை என்கிட்டே சொல்ல மாட்ட..என் பொண்ணு அனுவை காப்பாத்தி குடுத்ததுக்கு ரொம்ப நன்றின்னு கை எடுத்து கும்பிடறாங்க.

இழுத்து
கோபத்தில் போன அத்தையின் கையை பிடிச்சுக்கறா ஆனந்தி..துரோகிக்கு கூட நான் தீங்கு செய்ய மாட்டேன் அத்தை.. உண்மையை சொல்லிடறேன்னு சொல்லிட்டு திரும்பி நிக்கறா. இப்பவும் பாரு சொல்றேன்னுட்டு சொல்லாம நிக்கறேன்னு அத்தை கேட்க, சடாரெனெ அத்தையின் கையை எடுத்து தனது வயித்துல வைக்கறா ஆனந்தி. ஒரு நொடி உடல் சிலிர்க்க, ஆனந்தியின் முகத்தை பார்த்து ம்ம்ம் என்று கண்களால் கேட்க...ம்ம்ம் என்று ஆனந்தியும் கண்களால் பதில் சொல்றா.
இந்த காட்சி ரொம்ப அழுத்தமா மனசுல பதிய வைக்கற மாதிரி அழகா மனதை நெகிழ்விக்கற மாதிரி எடுத்திருக்காங்க..
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications