நயன்தாரா கண்ணகியா சாபம் விடுவதற்கு? தனுஷை பற்றி பேசறதுக்கு தகுதியே கிடையாது.. சீறும் பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எப்போதும் வியாபார பார்வை உடைய நயன்தாரா, 8-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவருகிறார்.. எப்போதும் பணமே பிரதானம் என்ற நினைப்பில் இருக்கக்கூடியவர்... சினிமாவில் 4 பேரை காதலித்துவிட்டு, 5வது நபரை திருமணம் செய்திருக்கும் நயன்தாரா என்ன கண்ணகியா?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

பியாண்ட் தி ஃபேரிடேல் என்ற ஆவணப் படத்தில் "நானும் ரவுடி தான்" படப்பிடிப்பின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளார் நயன்தாரா..

television nayanthara dhanush

நஷ்ட ஈடு: இதையடுத்து, அந்த படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ், நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவனிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.. அதில், 10 கோடி நஷ்டஈடு கேட்டிருந்தார். இதற்கு நயன்தாரா தந்திருந்த பதில் பரபரப்பாக பேசப்பட்டது.

இன்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த ஆவணப்படம் ரிலீஸாகியிருக்கிறது. இதையடுத்து, நயன்தாராவின் நடவடிக்கைகளை Metro Mail என்ற யூடியூப் சேனலுக்கு தந்த பேட்டியில், மூத்த பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் விமர்சித்திருக்கிறார்.

கல்யாண நிகழ்வுகள்: அதில், "தனுஷ்கிட்ட போய், எங்களால இவ்வளவு தான் தரமுடியும்ன்னு கேட்டிருந்தால், அவரு ஒத்துகிட்டு இருந்திருப்பாரு... 5 கோடி ரூபாய் நீ வாங்கும்போது, அதுல இருந்து தர வேண்டியதுதானே? வெறுமனே கல்யாண நிகழ்வுகளை போடுவதற்கு பதிலாக, பாட்டு சீன், படத்துல இருக்கிற காட்சிகளை சேர்க்கும்போது, பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.. பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.

பணத்தையே தராமல், 10 கோடி ரூபாய் கேட்கிறாரு, பழிக்குப்பழி வாங்குறாரு? என்றெல்லாம் சாபம் விட்டு பேசறார் நயன்தாரா.. எதுக்கு யாரை பழிக்கு பழி வாங்கணும்? தனுஷ் சம்பளம் தந்தார், நயன்தாரா நடிச்சாங்க.. இதுல என்ன பழிக்குப்பழி? உங்க காதலுக்கு தனுஷ் தடையாக நின்றாரா?

கல்யாணம்: நீங்க என்ன கண்ணகியா சாபம் விடறதுக்கு? 4 பேர காதலிச்சிட்டு, 5 பேர கல்யாணம் பண்ணிருக்கீங்க. பழிக்கு பழியெல்லாம் அபாண்டமான வார்த்தை, அபத்தமான வார்த்தை, அநியாயமான வார்த்தை.. அக்கிரமமான வார்த்தை, அத்துமீறலான வார்த்தை.. அதிகப்படியான வார்த்தை.. நா கொழுப்பு பிடித்த நடிகை.

இந்தம்மா மட்டும் அம்பானி குழுமத்தோடு சேர்ந்து, விளம்பர தூதராக இருந்து கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கலாம். அதையெல்லாம் யாரும் குறை சொல்லக் கூடாது. ஆனால், தனுஷ் காசு கேட்டால் உடனே குறை சொல்லணுமா? நடிகர், பாடலாசிரியர், டைரக்டர், பாடகர் என இவ்வளவுதான் தனுஷ் செய்து கொண்டிருக்கும் தொழில்.

ஆனால், எத்தனை தொழில் இன்னைக்கு நயன்தாராவுக்கு இருக்கு? கேர்ஃபீரீ விளம்பரம், டீ ஷாப்ஸ் நிறைய வெச்சிருக்கிறாங்க.. அம்பானியின் பெரிய நிறுவனத்துடன் பெரிய பார்ட்னராக சேர்ந்திருக்காங்க.. இப்படி கோடிக்கணக்கான பணம் வெச்சிட்டு என்ன சேட்டை இது? குடியிருந்த பிளாட்டில் யாருடனும் சரியான இணக்கமான போக்கு நயன்தாராவுக்கு இல்லை.. வீட்டு மெயின்டென்ஸ்கூட தராமல், அந்த பிளாட்டில் சண்டித்தனம் செய்தவர்.

ரஜினிகாந்த்: தனுஷ் தமிழ்ப்பட நடிகர்.. ரஜினியின் மருமகன்.. தனுஷ் தயாரிப்பு அலுவலகம் அல்லது ரஜினிகிட்டயே இதை பேசியிருக்கலாமே? யாரையாவது வைத்து சமாதானம் பேசியிருக்கலாமே? 2 வருட கால தாமதம் செய்தது நெட்பிளிக்ஸ்தான்.. பாடலை நீக்காமல், முரண்டு பிடிச்சது நயன்தாராதானே?

ரெயின்போ காலனியில் இருந்து, படிப்படியாக முன்னேறி டைரக்டரானவர் கஸ்தூரிராஜா.. கஷ்டப்பட்டு மகளை எம்எபிபிஎஸ் படிக்க வெச்சாரு.. இதெல்லாம் சொல்றதுக்கு நயன்தாரா யாரு?

மோகன்லாலுவுடன் கிசுகிசுக்கப்பட்டதுக்கு அப்பறம்தானே சினிமாவுல நடிக்கவே வந்தே? நீ ஏன் கிறிஸ்தவ மதத்தை விட்டு இந்துவா மாறுன? நாங்க யாராவது கேட்டோமா? மரியன் குரியன் தானே உன் பேரு? ஏன் நயன்தாரான்னு மாத்துன? ஏன் இந்து பெண் என்று சொல்றே? மதமாற்றம் ஏன் செய்தே? பிரபுதேவாவுக்காகத்தானே மதம் மாறினே?

விருதுகள் : வல்லவன் படத்துல சிம்பு உன் உதட்ட கடிச்சு இழுப்பாறே.. அவ்வளவு மோசமா நீ நடிச்சே? நயன்தாரா சொல்றதால தனுஷ் கேரக்டர் கெட்டுப்போய்டுமா? தனுஷ் இந்தி படத்துல நடிச்சிட்டாரு. ஆங்கில படத்துல நடிச்சிட்டாரு. இப்பவும் டைரக்டர் பண்ணிட்டு இருக்காரு. எத்தனை விருதுகள் வாங்கியிருக்காரு.. பல சமூக விழிப்புணர்வு படங்களில் நடித்தவர். அவரை குறை சொல்றதுக்கு நயன்தாராவுக்கு தகுதியே கிடையாது" என்றெல்லாம் கடுமையாக பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+