நயன்தாராவின் நச்சரிப்பு? இதுக்குதான் பாலாஜி ஓடிட்டாரா? மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்: பிரபலம் பொளேர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவுக்கு ஏகப்பட்ட பிசினஸ்களிலிருந்து காசு கொட்டுகிறது.. சென்னையில் மட்டும் அவருக்கு 70 ஓட்டல்கள் இருக்கின்றன.. இந்த காபி ஷாப்களிலிருந்தும் பணம் வருகிறது.. அதேபோல, பொட்டிக், சானிடரி நாப்கின், இன்னர் வியர் போன்ற பிசினஸ்களிலிருந்தும் பணம் வருகிறது. இதைத்தவிர துபாயில் பெட்ரோல் பங்கில் ஷேர் ஹோல்டராக இருக்கிறார். 10 கோடி சம்பளம் கிடைத்தால்தான் நடிப்பேன் என்கிறார்" என்றெல்லாம் மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

King Voice யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், "நயன்தாரா தன்னுடைய திருமண நிகழ்வை, நெட்பிளிக்ஸுக்கு 20 கோடி ரூபாய்க்கு விற்றிருந்தார்.. 20 கோடி சம்பளம் தந்த நெட்பிளிக்ஸ் நிறுவனம், டெஸ்ட் என்ற படத்தை சொந்தமாக எடுக்கிறது. இந்த படத்தின் முன்னோட்டத்தக்கு நயன்தாரா வரவில்லை..

Television Nayanthara Mookuthi Amman 2 2

இப்படிப்பட்ட நயன்தாரா, தான் நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜைக்கு வந்திருந்தார். ஏனென்றால், அந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.. டப்பு பார்ட்டி.. கல்வி வள்ளல் ஆவார்.

ஆடு - சிங்கம் - மீனா பதிலடி

விழா மேடையில் குஷ்பு, மீனா என்ற சீனியர் நடிகைகள் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த நயன்தாரா இவர்களிடம் பேசவேயில்லை. இது அகங்காரத்தின் உச்சமாகும்.. "எவ்வளவுதான் ஆடு கத்தினாலும், சிங்கம் இருக்கும்போது, ஆடு ஒன்றுமே செய்ய முடியாது" என்று மீனாவும் இதற்கு கமெண்ட் பதிவிட்டிருந்தார்..

முதல் நாள் ஷூட்டிங்கின்போது, காஸ்ட்யூமர், அம்மன் டிரஸ்ஸை எடுத்து வந்து நயன்தாராவிடம் தந்துள்ளார்.. ஆனால் அதை பார்த்ததுமே நயன்தாரா அணிந்து கொள்ள மாட்டேன் என்று சொல்லி உள்ளார். "அம்மன் வேடத்துக்கு இதுதான் டிரஸ் மேடம்" என்று அந்த காஸ்ட்யூமர் சொல்லியும், அதை அணிய முடியாது என்று சொல்லி உள்ளார்.. அத்துடன், உதவி இயக்குனரையும் கன்னாபின்னாவென்று திட்டிவிட்டார் நயன்தாரா.

சர்ச்சைகளின் உச்சம்

உடனே உதவி இயக்குனர், சுந்தர் சியிடம் விஷயத்தை கொண்டு சென்றுள்ளார்.. இதைக்கேட்ட சுந்தர் சி, நயன்தாராவிடம், "எதுக்காக உதவி இயக்குனரை திட்ட வேண்டும்? உதவி இயக்குனரை திட்டுவது தன்னை திட்டுவதாகவே அர்த்தம்.. இல்லாவிட்டால் ஹீரோயினாக தமன்னாவை புக் செய்துவிடுவேன்" என்று டோஸ் விட்டுள்ளார். இப்படி சர்ச்சைகளின் உச்சம்தான் நயன்தாரா.

பொள்ளாச்சியில் உள்ள கோயில்களில் ஷூட்டிங் நடத்துவதற்காக முன்கூட்டியே சுந்தர் சி அதற்கான அனுமதியை பெற்றிருந்தார்.
ஆனால் நயன்தாரா, "பொள்ளாச்சிக்கு வரமுடியாது, அது தனக்கு ஆண்ட்டி-சென்ட்டிமென்ட்., அதனால் சென்னையிலேயே ஷூட்டிங் எடுங்க" என்று சொன்னாராம். இதனால் சுந்தர் சி, பொள்ளாச்சி ஷூட்டிங்கை கேன்சல் வைத்துவிட்டு, சென்னையிலேயே கோயில்களில் ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்தார். ஆனால், அன்றைக்கும் நயன்தாரா வரவில்லை..


படப்பிடிப்பு தொடர்ந்து தாமதம்?

அதேபோல, நடிகை ஊர்வசிக்கு மூட்டு வலி என்பதால், அவரது கால்ஷீட்டும் இதுவரை கிடைக்கவில்லையாம்.. அந்த படத்தில் நடித்த ஒரு முக்கியமான நடிகர், "நீங்கள் ஷூட்டிங் தேதிகளை மாற்றிக் கொண்டே இருக்கீங்க, நான் இப்போதைக்கு பிஸியாக இருக்கிறேன்" என்று சொல்லிவிட்டாராம்.. இதனால், மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

வடிவேலு காம்போவில் உருவாகியுள்ள 'கேங்கர்ஸ்' படம் வரும் ஏப்ரல் 24-ம் தேதி ரிலீஸ் என்பதால், அந்த பிஸியில் சுந்தர் சி தற்போது ஈடுபட்டு வருகிறார்.. எனவே, மூக்குத்தி அம்மன் 2 பட ஷூட்டிங் நடத்துவதற்கு இன்னும் ஓரிரு மாத காலம் ஆகலாம் என தெரிகிறது.


டார்ச்சரில் தப்பி ஓடிய பாலாஜி

முதல் பாகத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் இயக்கப்படாததற்கு காரணமே நயன்தாராதான் என்கிறார்கள்.. முதல் பாகத்தில் அந்த அளவுக்கு டார்ச்சர் தந்துவிட்டாராம்.. அதனால் 2ம் பாகத்திலிருந்து ஒதுங்கி, சூர்யாவின் படத்தை இயக்கி கொண்டிருக்கிறார் ஆர்ஜே பாலாஜி.

நயன்தாராவுக்கு ஏகப்பட்ட பிசினஸ்களிலிருந்து காசு கொட்டுகிறது.. சென்னையில் மட்டும் அவருக்கு 70 ஓட்டல்கள் இருக்கின்றன.. பொட்டிக், சானிடரி நாப்கின், இன்னர் வியர் போன்ற பிசினஸ்களிலிருந்தும் பணம் வருகிறது. இதைத்தவிர துபாயில் பெட்ரோல் பங்கில் ஷேர் ஹோல்டராக இருக்கிறார். 10 கோடி சம்பளம் கிடைத்தால்தான் நடிப்பேன் என்கிறார்.

3வது தலைமுறை அம்மன்

அன்று கேஆர் விஜயா, பிறகு மீனா அம்மன் வேடங்களில் நடித்தனர்.. இப்போது 3வது தலைமுறையாக நயன்தாரா அம்மனாக நடிக்கிறார்.. முதல் பாகம் அவருக்கு நன்றாக ஓடியதால், 2ம் பாகமும் ஓடும் என்ற நம்பிக்கையில், நயன்தாரா இதில் புக செய்யப்பட்டுள்ளார்..

ஆனால், தன்னுடைய கணவரின் படம் என்பதால், "மூக்குத்தி அம்மன் 2 ஷூட்டிங்கில் எந்த சர்ச்சையும் நடக்கவில்லை" என்று, குஷ்பு முட்டுக்கொடுத்து பேசியிருக்கிறார்.. ஆரம்பத்தில் சலசலப்பு இருந்தது, ஆனால், அது தற்போது சரியாகிவிட்டதால், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்றும் குஷ்பு சொல்லியிருக்கிறார். அதை நாமும் நம்புவோம்" என்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+