Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த நடிகர் தான் என்னுடைய அப்பா..அதுக்காக இப்படி சொல்லாதீங்க..கண்ணீரோடு நீங்கள் கேட்டவை பார்த்தசாரதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் 90ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்த நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த விஜய சாரதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் தன்னுடைய தந்தை பழம்பெரும் நடிகர் சசிகுமார் தான் என்றும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்தும் அதற்கு பிறகு தன்னை பற்றி வந்த வதந்திகளுக்கும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

neengal ketta padal vj Parthasarathy who is father

அதோடு இனிமேல் யாரும் எதுவும் தெரியாமல் தவறாக செய்திகளை பரப்பாதீர்கள் என்று வேதனையோடு பார்த்தசாரதி வேண்டுகோள் வைத்திருக்கும் நிலையில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வகையில் 90ஸ் ஹிட்ஸ்களின் பேவரைட் நிகழ்ச்சிகள் இப்போதும் பலருடைய மனங்களில் அடிக்கடி அசைபோடும் வகையில் ஒரு சில நிகழ்ச்சிகள் இருக்கின்றது. அந்த வரிசையில் நீங்கள் கேட்ட பாடல் பலருடைய மனம் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பார்த்தசாரதியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஊர் ஊராக சென்று நேயர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு விருப்பமான பாடல்களை கேட்டு தொலைக்காட்சியில் அதை ஒளிபரப்பு செய்து வந்த பார்த்தசாரதி கலகலப்பாக ரசிகர்களோடு கலந்துரையாடிக் கொண்டிருப்பார்.

பார்த்தசாரதி தொலைக்காட்சி தொகுப்பாளர்களில் பலருக்கும் சீனியராக இருந்த நிலையில் இவருக்கு பல சீரியல்களிலும் படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. புகழின் உச்சத்தில் இருக்கும் போது திடீரென்று காணாமல் போன இவர் அதைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சைத்தான் என்ற திரைப்படத்தில் ஆட்டோ டிரைவராக நடித்திருந்தார்.

neengal ketta padal vj Parthasarathy who is father

பிறகு பெரியதாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் பார்த்தசாரதி சமூக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் youtube சேனல் நடத்தும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள். என்னைப் பற்றி எழுதுவது, விசாரிப்பது எல்லாம் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

90 கிட்ஸ்களிலிருந்து 2கே கிட்ஸ் வர எல்லோரும் என்னை நினைவில் கொண்டு இருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது. அதுபோல மறைந்த நடிகர் சசிக்குமாருடைய மகன் தான் நான். என்னுடைய அப்பாவும் அம்மாவும் 1974 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி வீட்டில் நடந்த தீ விபத்தில் இறந்து விட்டார்கள். அப்போது நானும் என்னுடைய அக்காவும் ரொம்ப சின்ன பிள்ளைகள். எங்களை பாட்டி தான் வளர்த்தார்கள்.

ரொம்ப வருஷத்துக்கு பிறகு தான் எங்க அம்மா அப்பா இறந்ததை நாங்கள் உணர்ந்தோம். ஆனால் சோசியல் மீடியாவில் என்னுடைய அம்மா அப்பா இறப்பு குறித்து சிலருக்கு தோன்றுவதை எல்லாம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதை பார்க்கும்போது எனக்கு கஷ்டமாக இருக்கிறது. தயவு செய்து இந்த மாதிரி எழுதாதீர்கள். இதை பார்க்கும் போதெல்லாம் மனது வலிக்கிறது. இதை ஏன் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. உங்களுடைய சேனல் பிரபலத்திற்காக அடுத்தவர்களுடைய உணர்வில் விளையாடாதீர்கள்.

neengal ketta padal vj Parthasarathy who is father

எதிர்நீச்சல் கிருஷ்ணாக்கு கிடைத்த புது வாய்ப்பு.. ஆரம்பமே அசத்தல்தான் போங்க.. குவியும் வாழ்த்துக்கள்
அதோடு மட்டுமல்லாமல் சில நடிகர் சங்கம் தான் சசிகுமார் உடைய மகள், மகனை வளர்ப்பது என்று கூறி இருக்கிறார்கள். இந்த மாதிரி பேசுபவர்களுக்கு நான் ஒரு விஷயத்தை சொல்லி ஆகணும். என்னுடைய அக்காவையும் என்னையும் வளர்த்து படிக்க வைத்தது என்னுடைய அம்மாவுடைய அம்மாதான். அதாவது பாட்டியிடம் தான் வளர்ந்தோம். வேறு யாரும் ஒரு பைசா கூட எங்களுக்கு செலவு செய்தது கிடையாது.

நாங்களும் யாரிடமும் எதையும் எதிர்பார்க்கவும் இல்லை. எங்களுடைய பாட்டியும் யார்கிட்டயும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் எங்களை வளர்த்தார்கள். ஆனால் தேவையில்லாமல் சிலர் சமூக வலைத்தளத்தில் எதையும் தெரியாமல் சொல்லாதீர்கள் என்று அந்த வீடியோவில் பார்த்தசாரதி பேசியிருக்கிறார். தற்போது இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+