Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அனு வச்ச பாயாசம்.. குடிப்பாரா சூர்யபிரகாஷ்.. ஆப்பு வைப்பாரா மீரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிவி சீரியல்களில் புதுப்புது கதைகளோடு புது சீரியல்கள் இந்த லாக்டோன் டைம்ல வந்திருந்தாலும் மக்களால் ரசித்து பார்க்கப்படும் சீரியல் தனி வரவேற்பு இருக்கிறது. அந்த மாதிரி தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நீதானே பொன்வசந்தம் சீரியல் பெரும் இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் வந்து விட்டது.

வித்தியாசமான கதை களத்தோடு இந்த சீரியல் இருப்பதால் இதற்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். 40 வயசு வரை காதலிக்க நேரம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் ஒரு ஆணுக்கும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த 20 வயது பெண்ணுக்கும் ஏற்படும் காதல் தான் இதன் கதை.

இந்தக் காதலால் அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை பற்றி தான் இந்த சீரியல் இருக்கிறது. அனைவராலும் வரவேற்கப்படும் குடும்பக் கதையாகவும் இது இருக்கிறது.

 சீரியல் நாயகன் ஜெய் ஆகாஷ்

சீரியல் நாயகன் ஜெய் ஆகாஷ்

இந்த சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்தவர் மற்றும் தமிழ் திரைப்படமான பிருந்தாவனம் படத்தில் முதன் முதலில் அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார். அந்த படத்தில் கார்த்திக் முதல் ஹீரோவாகவும் இவர் இரண்டாவது ஹீரோவாகவும் நடித்து இருப்பார்.

 முதலாளிக்கு கிடைத்த பிஏ

முதலாளிக்கு கிடைத்த பிஏ

இவர் இந்த சீரியலில் பணக்கார வீட்டு 40 வயசு சூரியபிரகாஷ் ஆக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. அலைபாயுதே படத்தில் முதலில் இவருக்கு தான் ஹீரோ சான்ஸ் கிடைத்ததாம் .அதன் பிறகு சில காரணங்களால் அந்த வாய்ப்பு தள்ளிப் போய்விட்டது. ஆனால் தற்போது படங்களில் நடித்ததை விடவும் இந்த சீரியல் மூலமாக தனது ரசிகர்கள் அதிகமாக கிடைத்திருக்கிறார்கள்.

 பாஸுடன் காதல்

பாஸுடன் காதல்

தமிழில் தனக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஜெய் ஆகாஷ். இந்த சீரியலில் கதாநாயகியாக தர்ஷனா நடித்துள்ளார். அவர் அனு என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். இவர் ஒரு பல் மருத்துவர் இவரின் தந்தை பல் மருத்துவராக ஒரு கிளினிக் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். அதனால்தான் தர்ஷனாவும் மருத்துவத்திற்கு படித்தாராம். இருந்தாலும் அவருக்கு மருத்துவத்தில் ஆர்வம் இல்லையாம். மாடலிங்கில் தான் ஆர்வம்.

 தர்ஷனாவின் அழகு

தர்ஷனாவின் அழகு

வீட்டில் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் மாடலிங்கில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இப்போ மாடலிங்கில் இருந்து தான் இவருக்கு இந்த சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலமாக முதல் முறையாக நடிப்பில் அறிமுகமாகி அசத்திக் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பு ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணாக நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு தங்கள் வீட்டுப் பெண் போன்ற உணர்வு ஏற்படுகிறது.

 ரசிகர்களைக் கவர்ந்த சீரியல்

ரசிகர்களைக் கவர்ந்த சீரியல்

நம் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியை போலவே இந்த சீரியலும் இருப்பதால் எல்லோருக்கும் இந்த சீரியலை பிடித்திருக்கிறது. இந்த லாக்டோன் காரணமாக இந்த சீரியலை தொடர்ந்து ஒளிபரப்ப முடியாமல் இருந்தது. ஆனால் தற்போது படப்பிடிப்பு ஆரம்பித்து விட்டதால் நேற்று 27ம் தேதி முதல் மீண்டும் சீரியல் வர ஆரம்பித்து விட்டது. சூரிய பிரகாஷ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார் அனு. அதுவும் சூரியபிரகாஷின் பெர்சனல் பி.ஏ .வாக.

 பொறாமை பிடிச்ச மீரா

பொறாமை பிடிச்ச மீரா

அனுவின் கேரக்டர் ஜெயப்பிரகாஷுக்குப் பிடித்து விட்டது. ஆனால் இதற்கு முன்பு வேலை பார்த்துக்கொண்டிருந்த மீராவிற்கு கொஞ்சம்கூட அனுவை பிடிக்கவில்லை. எப்படியாவது இந்த ஆபீஸில் இருந்து அவரை வெளியேற்றிவிட வேண்டும் என்று அனுவிடம் பைல் மாற்றி கொடுத்து விடுகிறார். அது தெரியாமல் அனுவும் அதை வாங்கிக்கொண்டு சூரியபிரகாஷ் உடன் சென்று விடுகிறார்.

 ஆகாஷுக்கு கோபம்

ஆகாஷுக்கு கோபம்

அவர்கள் இருவரும் வெளியே சென்ற பிறகுதான் அவர்கள் போக வேண்டிய கம்பெனிக்கு பதிலாக அவர்களின் வேறொரு கம்பெனிக்கு சென்று விடுகிறார்கள். இதுக்காக சூரியபிரகாஷ் அனுவை ரொம்ப திட்டி விடுகிறார். அனு பாவமாக காருக்குள் அழுது கொண்டிருக்கிறார். கோபத்தில் சூரியபிரகாஷ் கம்பெனிக்குள் காரை விடும்படி டிரைவரிடம் சொல்ல கார் கம்பெனிக்குள் செல்கிறது. கோபமாக கம்பெனிக்குள் செல்கிறார்.

 அனுவுக்கு சாதகம்

அனுவுக்கு சாதகம்

அந்த கம்பெனிக்குள் சென்ற பிறகுதான் தொழிலாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள் இவருக்கு தெரிகிறது. அவர்களுக்கு சாப்பிட கூட டைம் இல்லாமலும் மிஷின் போல வேலை வாங்குவதும் இவருக்கு தெரிகிறது. இதனால் இவர் கோபமடைந்து தன்னுடைய கம்பெனியில் தொழிலாளர்களுக்கு சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் கொடுக்கப்பட வேண்டும் என்று தொழிலாளர்களுக்காக பேசுகிறார். தொழிலாளர்கள் இவரை பாராட்டும்போது இந்த பாராட்டு எனக்கு இல்ல என்னை மாற்றி இங்க கூட்டிட்டு வந்த என்னோட புது பிஏ வுக்கு தான் என்று கூறுகிறார்.

 அனு வைத்த பாயாசம்

அனு வைத்த பாயாசம்

ஆக, மீரா, அனுவை கம்பெனியை விட்டு வெளியே போக வைக்கணும்னு எடுக்கிற முடிவு கடைசியில் அனுவிற்கு சாதகமாக முடிந்து விடுகிறது. அடுத்த நாள் சூரிய பிரகாஷுக்காக அனு பாயசம் செய்து கொண்டிருக்கிறார். அதுவும் பார்த்து பார்த்து செய்கிறார். சூரியபிரகாஷின் நல்ல குணத்தை அவங்க அம்மாவிடம் சொல்லிக் கொண்டே செய்து கொண்டிருக்கிறார். அத்தோடு கடைசி எபிசோட் முடிகிறது. அனு செய்த பாயசத்தை சூரியபிரகாஷ் குடித்தாரா இல்லை அதுக்கு முன்பாக மீரா ஏதாவது ஆப்பு வைக்கிறாரா.. பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+