நீயா நானா: நடுரோட்டில் தீ வைத்து கொளுத்த வந்தாங்க.. கதறிய கணவர்.. கோபிநாத் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் ஆகஸ்ட் பதினொன்றாம் தேதிக்கான எபிசோடில் இந்த வாரம் பத்து வருடம் காதலித்து திருமணம் செய்தவர்களும், அது எப்படி என்று ஆச்சரியப்படும் 2கே கிட்ஸ்களும் கலந்து விவாதிக்கிறார்கள். அப்போது ஒரு தம்பதி தாங்கள் காதல் விஷயம் வீட்டில் தெரிய வந்ததும் தங்களை நடுரோட்டில் வைத்து தீ வைத்து கொளுத்த வந்த விஷயத்தை பற்றி பேசி இருக்கின்றனர்.
நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்தே ஒவ்வொரு வாரமும் விவாதம் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வாரம் பலரும் வியந்து போகும் வகையில்தான் ஒரு விவாதம் நடக்கப்போகிறது. அதாவது பத்து வருடங்களாக காதலித்து திருமணம் செய்த 90ஸ் மற்றும் 80ஸ் தம்பதிகளும், எப்படி இவ்வளவு வருடங்கள் காதலித்து திருமணம் செய்தார்கள் என்று ஆச்சரியப்படும் 2கே கிட்ஸ்களும் கலந்து கொள்கிறார்கள்.

அதில் பல போராட்டங்களுக்குப் பிறகு திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் 90ஸ் தம்பதிகள் தங்களுடைய திருமண வாழ்க்கையில் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார்கள். பொதுவாக காதலுக்கு இப்போது உள்ள சூழ்நிலையில் கூட ஒரு சில வீட்டில் உடனே சம்மதம் சொல்லி விடுகிறார்கள். ஆனால் சில வருடங்களுக்கு முன்பெல்லாம் நிலைமை அப்படி கிடையாது.
காதல் என்ற வார்த்தையை கேட்டாலே யார் எவரை காதலிக்கிறார்கள் என்று கூட கேட்காமல் போட்டு அடித்து பின்னி பெடல் எடுத்தவர்கள் ஏராளம். எப்போதும் காதலுக்காக பல ஆணவ கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சட்டங்கள் கடுமையாக ஆகிக்கொண்டு இருந்தாலும் காதலுக்கு எதிர்ப்பு மற்றும் கொலைகள் குறைந்த பாடு இல்லை.
இந்த நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு தம்பதி தங்களுடைய காதல் கதையை பற்றி சொல்லி இருக்கின்றனர். அதில் நாங்கள் 10 வருடங்களாக காதலித்தோம். எங்களுடைய காதல் விஷயம் தெரிய வந்ததும் என்னுடைய மனைவியின் அப்பா மண்எண்ணெய் வாங்கிட்டு வந்து நடு ரோட்டில் வைத்து எங்களைக் கொழுத்த வந்து விட்டார். அந்த அளவிற்கு எங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் எதிர் தரப்பில் இருந்த 2k கிட்ஸ்களிடம் நீங்கள் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை வந்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார்.
அதற்கு 2k கிட்ஸ்களின் வரிசையில் இருந்த ஒரு பெண், இவங்க அவங்க லவ்வுக்காக நின்றது ஆச்சரியமா இருக்கு. நாங்க எல்லாம் இருந்திருந்தால் அப்பா அம்மா பேச்சையே கேட்டு இருப்போம். இவ்வளவு ரிஸ்க்கெல்லாம் நாங்க எடுக்க மாட்டோம். உயிர் ரொம்ப முக்கியம் இல்லையா சார்... என்று சிரித்தபடியே சொல்கிறார்.
அதைத் தொடர்ந்து கோபிநாத் உங்களுடைய குழந்தைகள் காதலிக்கிறார்கள் என்று தெரிந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று தந்தை தீ கொளுத்த வந்த பெண்ணிடம் கேட்க, அதற்கு அந்தப் பெண் நான் பெற்றோரா என்னுடைய குழந்தையிடம் உன்னுடைய கேரியரை ச்சூஸ் பண்ணு என்று தான் சொல்லுவேன் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் இப்போ எனக்கு புரியல உங்க அப்பா மண்ணெண்ணெய் ஊத்த வந்தாரே அப்போ அவரும் இதுபோல தானே நினைத்திருப்பார் என்று மடக்கி கேள்வி கேட்டிருக்கிறார். இந்த ப்ரமோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications