நீயா நானா: மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கிட்டு.. இப்படி பேச கேவலமா இல்லையா? பிரபலத்தை கிழித்த கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் "அரசியல் மோசம் என்று சொல்பவர்களும், அரசியல் மோசம் என்று சொல்வது தவறு என்று சொல்பவர்களும்" விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த எபிசோடின் இரண்டாவது ப்ரோமோவில் ஒரு நபரிடம் கோபிநாத் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அன்றாட பிரச்சனைகள் மற்றும் சமூகத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகள் குறித்த தலைப்பிலேயே விவாதங்கள் நடைபெறுகிறது. அதிலும் கடந்த வாரத்தில் "தத்துவ பாடல்கள் ரசிகர்கள் ஒரு பக்கமும், பாடகர்கள்" ஒரு பக்கமும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றி இருந்தனர். அந்த வகையில் இந்த வாரம் "அரசியல் மோசம் என்று சொல்பவர்கள் ஒரு பக்கமும், அரசியல் மோசம் என சொல்வது தவறானது என்று சொல்பவர்கள் ஒரு பக்கமும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்"
அந்த வகையில் தற்போது லோக்சபா தேர்தல் களைக்கட்டி இருக்கிறது. வரும் ஏப்ரல் 19ஆம் தேதிக்கு வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதை பொறுத்து இந்த வாரம் அரசியல் பேசும் நீயா நானாவில் ஒரு நபர், ஃப்ரீ எதுக்காக கொடுக்கணும்? மக்களிடையே வாழ்வாதாரத்தை தானே இம்ப்ரூவ் பண்ணனும். அதுதான் ஒரு அரசியல்வாதியின் கடமை. அதை சரியா செய்யாமல் ஃப்ரீயா கொடுத்து வாய் அடைகிறதா அரசியல்வாதியின் கடமை என்று கேட்க,
அதற்கு எதிர் அணியில் இருக்கும் ஒரு நபர் இங்கு நடப்பது தான் அடுத்த ஸ்டேட்டில் நடக்கிறது. ஆனால் அதை எல்லோரும் பாராட்டுறாங்க. இங்கே நடப்பதை எல்லோரும் குறை சொல்றாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க, முதலில் பேசிய சிவப்பு சட்டை போட்ட நபரிடம் கோபிநாத் உங்களுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்க அதற்கு அவர், ஒன்னேகால் லட்சம் என்று சொல்கிறார். அதற்கு கோபிநாத் உங்களுக்கு பென்ஷன் உண்டா என்று கேட்க, அதற்கு அந்த நபரும் ஆமாம் என்று சொல்கிறார்.
நீங்க ட்ரைனில் போகும்போது உங்களுக்கு ட்ரெயின் டிக்கெட் ப்ரீ தானே என்று கேட்க அதற்கு ஆமாம் டிரெயின் ஃப்ரீ தான் என்று சிவப்பு சட்டை நபர் சொல்கிறார். அதற்கு கோபிநாத் ஒரு டிக்கெட்டை காசு கொடுத்து வாங்கிட்டு போக வழி இல்லாமல் இருக்கீங்களா? என்று கேட்க, அதற்கு அந்த நபர் அது எங்களுக்கு கொடுக்கிற அடிப்படை உரிமை. அதை நான் எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்? என்று கேட்க,
அதற்கு கோபிநாத் அதை எதுக்கு நீங்க ஃப்ரீயா வாங்குறீங்க? நீங்க என்ன எனக்கு பிச்சை போடுறீங்களா என்று கேட்க வேண்டியது தானே? என்னுடைய உரிமை... என்னுடைய உரிமை என்று நீங்க சொல்லலாமா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த ப்ரோமோ வெளியானதும் ரசிகர்கள் இதற்கு அதிகமான கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதிலும் ஒரு ரசிகர் ரயிலில் இலவசம் இது சலுகையாம்..

ஆனால் கல்வி கட்டணம் கட்ட வேண்டியது என்பது இது உரிமை பறிப்பு... இது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதுபோல இன்னொரு ரசிகர் இலவசம் என்பது மேல் தட்டு மக்களின் மத்தியில் பிச்சையாக தெரிகிறது. ஆனால் அது கீழ்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கிறது. அதோடு இந்த வாரம் சரியான சரியான அரசியல் வாக்குவாதம் இருக்கப் போகிறது என்று ரசிகர்களும் ஆர்வத்தோடு காத்திருப்பதாக கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications