நீயா நானாவில் திடீர் கலவரம்.. அரசியலால் வெடித்த வாக்குவாதம்! திகைத்து நின்ற கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் "அரசியல் மோசம் என்று சொல்பவர்களும், அரசியல் மோசம் என்று சொல்வது தவறானது" என்று சொல்பவர்களும் இரண்டு அணியாக கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள்.
அந்த வகையில் மூன்றாவது ப்ரோமோவில் அரசாங்கத்தின் உதவியால் தான் நாங்கள் படித்து முன்னேறினோம். அரசாங்கம் இல்லாமல் எப்படி மக்களால் வாழ முடியும்? என்று சிலர் கேள்வி கேட்க அதற்கு எதிர் அணியில் இருந்தவர்கள் நீங்கள் சொந்தமாக படித்து முன்னேறினீர்கள்.. அதற்கு அரசாங்கத்தை எப்படி காரணம் என்று சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்ப இருக்கிறார்கள்.

தற்போது லோக்சபா தேர்தல் ஃபீவர் தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ஏப்ரல் மாத வெயிலில் உச்சத்திலும் கூட பலர் வேர்க்க விறுவிறுக்க பிரச்சாரத்தில் இறங்கி, தொண்டை தண்ணி போக கத்திக் கொண்டிருக்கின்றனர். இது போதாக்குறைக்கு நீயா நானா நிகழ்ச்சியிலும் இந்த வாரம் அரசியலை மையப்படுத்தி விவாதம் நடைபெறுகிறது.
ஏற்கனவே நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றிய தலைப்புகளிலேயே விவாதம் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த வாரம் அரசியல் மோசம் என்று சொல்பவர்களும், அரசியல் மோசம் என்று சொல்வது தவறானது என்று சொல்பவர்களும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு பக்கத்தினர் அரசியல் செய்பவர்களால் தான் மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்கிறது என்று பல எடுத்துக்காட்டுகளை கூறியிருக்கிறார்கள்.
அதுபோல எதிரணியில் இருப்பவர்கள் மக்களை அரசியல்வாதிகள் அவர்களுடைய லாபத்திற்காகவே இலவசங்களை கொடுத்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று மறுபக்கத்தில் பல எடுத்துக்காட்டுகளை கூறுகிறார்கள். இப்படியாக இவர்களுடைய விவாதத்தில் நடுவராக இருக்கும் கோபிநாத் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் பச்சை சட்டை போட்ட ஒரு நபர் சாப்பிடுற சாப்பாட்டில் இருந்து போடற துணி, படிக்கிற படிப்பு வரைக்கும் அரசியல் கொடுத்தது சார். இந்த அரசியல்வாதிகள் தான் என்னை 2007 இல் இன்ஜினியர் ஆக்குனாங்க என்று கோபமாக பேசிக் கொண்டிருக்க, எதிரணியில் வெள்ளை சட்டை போட்ட ஒரு நபர் அரசியல்வாதிகளால் நீங்க இன்ஜினராகவில்லை சார் நீங்க படிச்சதனால ஆனீங்க என்று சொல்ல,
எதிர்தரப்பில் இருந்த பிங்க் கலர் சுடிதார் போட்ட ஒரு பெண், நான் வந்து சாமானிய பொண்ணு நான். கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் படிச்சு, கவர்ன்மென்ட் காலேஜ் படிச்சேன். இப்ப சட்டக்கல்லூரி முடிச்சு வக்கீலா இருக்கேன். நான் எல்லாமே கவர்மெண்ட்ல தான் படிச்சேன் என்று சொல்ல கோபிநாத் எதிரணியில் இருப்பவர்களிடம் இதற்கு பதில் என்ன சொல்கிறீங்க என்று கையை நீட்டி வாய் பேசாமலே சைகையால் கேள்வி கேட்க,
அதற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த நபர் டாக்டர் இல்லாமல் எப்படி ஒரு ஹாஸ்பிடல் இருக்க முடியும்? அதுபோல கவர்மெண்ட் இல்லாமல் எப்படி ஒரு நாடு இருக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார். தற்போது இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. அதற்கு அதிகமானோர் அரசியல் அமைப்பு சரிதான்... ஆனால் அரசியல்வாதிகள் தான் தவறு என்று கூறுகிறார்கள்.

அதுபோல இன்னும் ஒரு சிலர், "எது எப்படியோ போகட்டும் என்று வேடிக்கை பார்ப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். எதுவும் சரியாக இல்லை என்று அவர்கள் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம் தான். ஆனால் ஏதேனும் நல்ல திட்டம் அல்லது சலுகைகள் கிடைத்தால் முதல் ஆளாக பயன்பாடுகளை அனுபவிக்க இவர்களே உரிமை கொண்டாடுவார்கள்" என்று கூறுகிறார்கள்.
அதுபோல இன்னும் ஒருவர், "அரசியல் என்பது வியாபாரம் இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், அரசியல்வாதிகளின் பினாமிகள் ஆக வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்று உண்மையை உடைத்திருக்கிறார். அதுபோல இந்த ப்ரோமோவிற்கு இன்னும் ஒரு ரசிகர், "படிச்சிட்டா வேலை கெடச்சிடுமா? நல்ல அரசு இருந்தால் தான் வேலை, தொழில், வியாபாரம், பணப்புழக்கம் எல்லாம் நடுத்தர வர்க்க குடும்பங்களில் உண்டாகும்."
"ஒரு அரசு சரியில்லை என்றால் இலங்கையில் நடந்தது போல அதாவது ஒரு கிலோ தக்காளி 250 ரூபாய்க்கு இங்கேயும் கிடைக்கும்" என்று சொல்லி இருக்கிறார். அவருக்கு "சமீபத்தில் ஒரு கிலோ வெங்காயம் 100 ரூபாயை தாண்டி போனது ஞாபகம் இல்லையா? என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்" இப்படியாக அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த ப்ரோமோவில் வாக்குவாதம் அதிகமாக இருப்பதால் நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.












Click it and Unblock the Notifications