நீயா நானாவில் கோபிநாத் முன்பே வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்.. குழந்தைகள் வைத்து நடந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டது என்று ஒருத்தரப்பினரும், இன்றைய தாய்மார்கள் சின்ன பிரச்சினையை பெரிதாக பேசுகிறார்கள் என்று இன்னொரு தரப்பினரும் வாதிடுகின்றனர். அப்போது குழந்தைகள் குறித்து இரண்டு தரப்பினருக்கும் கோபிநாத் முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ப்ரோமோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகள் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் பசை போல ஒட்டி இருக்கிறது. அதிலும் விஜய் டிவிக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை சொல்லவே வேண்டாம். இந்த நிகழ்ச்சி 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோபிநாத் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதம் நடைபெறுகிறது. அதனால் இங்கே விவாதங்களும் வாக்குவாதங்களும் பல வெடிக்கிறது. அதே நேரத்தில் கோபிநாத் இரண்டு தரப்பினர்களின் கருத்துக்களை கேட்டு மக்களின் குரலோடு இவரும் தனித்துவமான கருத்துக்களை சொல்லி பலரையும் வியக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் சிலர் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமும் அடைந்து விடுகிறார்கள். ஒரு சில தலைப்புகளில் விவாதம் நடைபெறும் போது அந்த தலைப்புகள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் குழந்தை பிறந்த பிறகு பெண்களின் தினசரி வாழ்க்கை டென்ஷன் மிகுந்ததாக மாறி உள்ளது என்று இளம் தாய்மார்களும், அதை மறுத்து... அப்படி இல்லவே இல்லை இப்போதுள்ள பெண்கள் சின்ன பிரச்சனையையும் பெரிதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தங்களுடைய அனுபவத்தை பகிரும் தலைமுறையினர்களும் விவாதிக்கிறார்கள்.
அதில் பல பெண்கள் குழந்தைகள் வளர்ப்பில் தாங்கள் படும் கஷ்டங்கள் குறித்து சொல்லிக் கொண்டிருக்கையில் இன்றைய தாய்மார்கள் சாதாரண விஷயத்தை பெரிதாக்குகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒரு பெண் நான் என்னுடைய மகனை ஒன்றரை வருஷமா என் கூடவே வைத்து வளர்த்துட்டு வரேன்.

நான் கிச்சனில் எந்தெந்த பொருட்களை தொடக்கூடாது என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவன் தொடவே மாட்டான் என்று சொல்ல, அதற்கு எதிர்தரப்பில் குழந்தைகள் பிறந்த பிறகு வாழ்க்கை டென்ஷன் ஆகிறது என்று சொல்லும் அருகில் இருந்த ஒரு பெண் ஆவேசமாக கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், எங்க சொந்தக்காரங்களிலேயே நிறைய குழந்தைகள் பாலை எல்லாம் எடுத்து கொட்டிக்குவாங்க, குக்கரில் கை வைத்த கேஸ் எல்லாம் இருக்கு... அதனால் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் கிச்சனுக்குள் அனுமதிக்கவே கூடாது. நாம் பக்கத்தில் இருக்கும்போது அவர்களிடம் சொல்லும்போது எல்லாம் சரியாக இருக்கும் ஆனால் நாம் இல்லாத நேரத்தில் அந்த குழந்தைகள் அதில் என்னதான் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க தொடங்கும் அப்போது ஆபத்து ஏற்படுகிறது.
இது நான் என்னுடைய குழந்தைகளுக்காக மட்டுமல்ல எல்லா குழந்தைகளுக்காகவும் தான் பேசுகிறேன் என்று கோபமாக பேசுகிறார். அதோடு யாராவது என்னோடு விவாதம் பண்ணுறதா இருந்தா பண்ணுங்க என்று அவர் சவால் விடும் தொனியில் பேச அப்போது கோபிநாத் அமைதியாக இருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications