நீயா நானாவில் கண்கலங்கி அழுத நபர்.. கோபிநாத் கேட்ட வார்த்தை.. ஆறுதல் "அது”தானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் இந்த வார விவாதம் இளையராஜா ரசிகர்களுள் சீனியர் மற்றும் ஜூனியர்களுக்கிடையே நடைபெற்றுள்ளது. அதற்கான இரண்டாவது ப்ரமோ வெளியாகி நிகழ்ச்சி மீதான ஹைப்பை கொஞ்சம் கூட்டியுள்ளது.

ப்ரமோ வைப் பார்த்த இளையராஜா ரசிகர்கள் பாத்தீங்களா எங்க இசைக்கடவுளின் அருமை பெருமை என்று கமெண்ட் பாக்ஸ்களில் சில்லறைகளை சிதற விட்டு வருகின்றனர்.

சமூகத்திற்கு கருத்து சொல்லி போர் அடித்து விட்டது போல விஜய் டிவிக்கு, இந்த வாரம் பொழுதுபோக்காக இளையராஜாவின் ரசிகர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது.வேறு வேறு இசையமைப்பாளர்கள் ரசிகர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தினால் ஏதேனும் பிரச்சினையாகி விடும் என்று நினைத்தார்களோ என்னவோ..

ஒரே இசையமைப்பாளர் ரசிகர்களில் சீனியர் ஜூனியர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கின்றனர். பொதுவாக இளையராஜா பாடல்கள் அந்தக் காலத்தில் பலதரப்பட்ட மக்களின் உணர்வோடும் உயிரோடும் கலந்து இருந்தது. அதை இந்த நிகழ்ச்சியில் ஓவ்வொரு ரசிகர்களும் அவர்களது உணர்வுபூர்வமான வார்த்தைகளால் விவரித்து இருக்கின்றனர்.

Neeya Naana 2023 July 2nd promo A blind fan cry Ilayaraja Song that gave comfort

பலர் தங்களுடைய இழப்பு மற்றும் தங்களுக்கு ஏற்பட்ட தோல்வி போன்றவற்றை மறப்பதற்கும்,தங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி எடுத்து செல்வதற்கும் இளையராஜா பாடல்கள் தான் உந்துதலாய் இருந்தது என்று பல பேட்டிகளில் பலர் சொல்ல கேட்டிருப்போம் பார்த்திருப்போம்.அப்படித்தான் தற்பொழுது வெளிவந்துள்ள நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரமோவில் பார்வையற்ற ஒரு ரசிகர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார்.

தனக்கு ஆரம்பத்தில் சின்ன ஒளி போன்று தான் கண் தெரியும் என்றும் நாளடைவில் சுத்தமாக அதுவும் தெரியவில்லை என்றும் சாதாரணமாக கூறியுள்ள அவர் அந்த நேரத்தில் வாழ்க்கை படத்தில் இளையராஜா பாடிய 'மனமே நீ துடிக்காதே.. விழியே நீ நனையாதே'என்ற பாடல் தான் நான் சோர்ந்து விடாமல் இப்பவும் இந்த வாழ்க்கை உற்சாகமாக வாழ்வதற்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி அச்சு அசலாக இளையராஜா குரலிலேயே அந்தப் பாடலையும் பாடி காட்டி நிகழ்ச்சியின் போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் கண்ணீரால் நெகிழ வைத்திருக்கிறார். கொஞ்ச நாட்களாக தன்னுடைய மேடைப்பேச்சுகளாலும் சமூகவலைதளங்களில் தான் தெரிவிக்கும் கருத்துகளாலும் எதிர்மறையான பல விமர்சனங்களை சந்தித்து சோசியல் மீடியாக்களில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார் இளையராஜா.

இந்த சமயத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட விஜய் டிவி இளையராஜா பெயரிலே அவர் ரசிகர்களை வைத்து ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் பாடப்படும் பாடல்களுக்கு இளையராஜா ராயல்டி கேட்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பலர் விஜய் டிவிக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். சில சேட்டைக்காரர்கள் இளையராஜா பாடலை பலமுறை கேட்கலாம் ஆனால் அவர் பேசுவதை ஒரு முறை கூட கேட்க முடியாது என்றும் நக்கலா கமெண்ட் செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+