மாமனாரை கண்கலங்க வைத்த மருமகள்..நீயா நானாவில் கோபிநாத் கேட்ட கேள்வி..உணர்வு பூர்வமான தருணம்
சென்னை: நீயா நானா நிகழ்ச்சியின் ஜூன் நான்காம் தேதி எபிசோட் காண ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகள்களும் அவர்களுடைய மாமனாரும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒரு மாமனார் தன்னுடைய மருமகள் கேட்ட கேள்விக்கு தனியே போய் அழுததாக அதில் கூறி இருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சி சமூகத்தில் நிலவும் அடிப்படை பிரச்சனைகளை பற்றிய தலைப்புகளின் அடிப்படையில் இருந்து வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு வாரமும் என்ன மாதிரி விவாதிக்கப்படுகிறது என்று எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருக்கிறது.
அந்த வகையில் இந்த வாரம் காதலித்து திருமணம் செய்து கொண்ட மருமகள்களும் அவர்களுடைய மாமனாரும் கலந்து கொண்டிருக்கின்றனர். இதில் தாங்கள் ஆரம்பத்தில் காதலை ஏற்றுக் கொள்ளாமல் சொன்ன வார்த்தை பிறகு அவர்களைப் புரிந்து கொண்டதைப் பற்றியும் கூறி இருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு மாமனார் தன்னுடைய மருமகள் பற்றி உருக்கமாக பேசியிருக்கிறார். அதில் என்னை இதுவரைக்கும் சாப்பிட்டியா? என்று யாரும் கேட்டது கிடையாது. ஆனால் இந்த பிள்ளை என்னை பாத்து கேட்டுச்சு. மாமா இட்லி இருக்கு எடுத்துட்டு வரட்டுமான்னு கேட்டுச்சு அதை என்னால மறக்க முடியாது.
அந்தப் பிள்ளை அதை கேட்டுட்டு போன பிறகு நான் ரூமுக்குள்ள போய் அழுதேன். ஆனால் ஆரம்பத்தில் நான் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன். பிறகு அதை கௌரவ படுத்த வேண்டும் என்றுதான் கல்யாணம் செஞ்சு வச்சேன். ஆனால் காதல் திருமணத்திற்குள் இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு அப்ப தெரியல என்று கூறியிருக்கிறார்.
இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று வருகிறது. இதற்கு ரசிகர்கள் அதிகமானோர் பாராட்டியும் வருகின்றனர். இந்த மாதிரி மாமனார் மருமகள் உறவு அழகானது தான். அது பல பேருக்கு கிடைப்பதில்லை. சிலருக்கு கிடைத்தாலும் புரிந்து கொண்டு சரியாக வாழ்வதில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
கருப்பு படத்தில் ஆர்ஜே பாலாஜி ஸ்கேம் பண்ணிட்டாரா? "இந்த” சீரியலின் 30 நிமிட கதை தான் முழு படமா? ரசிகர்கள் ட்ரோல் -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
விஜயாவை அவமானப்படுத்திய மீனா.. ஸ்ருதியை பழிவாங்க நீத்து பிளான்! ரோகிணி வைத்த செக்.. சிறகடிக்க ஆசையில் பரபரப்பு -
சிறகடிக்க ஆசையில் அதிரடி ட்விஸ்ட்... வீட்டையே அதிர வைத்த விஜயாவின் முடிவு... புது சிக்கலில் சிக்கிய முத்து! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications