நீயா நானா: கோபிநாத் கோட் போடுறதுக்கு சிரிச்சாங்களே! இப்போ என்ன நடந்தது பார்த்தீங்களா? நெகிழ்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் ஏப்ரல் 21ஆம் தேதிக்கான எபிசோடில் "வசதியான சூழ்நிலையில் இருக்கும் தங்கைகளும், பொருளாதார போராட்டத்தில் இருக்கும் அண்ணன்களும்... இவர்களுக்குள் இருக்கும் பாச போராட்டங்களும்" தான் விவாதிக்கப்பட்டது.
அதில் எப்போதும் கோட் போட்ட நாட்டாமையாக வலம் வந்து கொண்டிருக்கும் கோபிநாத் தான் போட்டு இருந்த கோட்டை கழட்டி ஒரு அண்ணனுக்கு போட்டு அவரை பெருமைப்படுத்தி இருக்கிறார். இது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டும் பாராட்டப்படும் வருகிறது.

அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள் இருந்து வருகிறது. அதனால் இந்த நிகழ்ச்சிக்கு பலர் காத்திருக்கின்றனர். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியை பத்து வருடங்களுக்கு மேலாக தொகுத்து வழங்கி வரும் கோபிநாத்துக்கு சினிமா கதாநாயகர்களுக்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் தன் இந்த வாரத்தில் நடந்த நீயா நானா நிகழ்ச்சி அதிகமாக இணையத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது நேற்று 21ஆம் தேதிக்கான எபிசோடில் அண்ணன் தங்கைகளில் பாச போராட்டங்கள் தான் டாபிக்காக வைத்து விவாதிக்கப்பட்டது. அதில் வசதியான சூழ்நிலையில் இருக்கும் தங்கைகளும், பொருளாதார போராட்டத்தில் இருக்கும் அண்ணன்களும் என்ற தலைப்பில் விவாதிக்கப்பட்டது.
அப்போது ஒரு தங்கை தன்னுடைய அண்ணன் தனக்காக செய்த தியாகங்கள் குறித்து சொல்லி கொண்டிருந்தார். என்னுடைய அண்ணன் சின்ன வயசுல இருந்து எனக்காக தான் எல்லா கஷ்டங்களையும் பட்டிருக்கிறார். என்னை நன்றாக படிக்க வைத்து அவரே திருமணமும் செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் நான் திருமணத்திற்கு பிறகு நல்ல ஒரு குடும்பத்தில் செட்டில் ஆகி இருக்கிறேன்.
என்னால் நான் நினைத்ததை எல்லாம் வாங்க முடியும். ஹோட்டலுக்கு போகும்போது கூட நான் நினைச்ச சாப்பாட்டை வாங்கி சாப்பிடுகிறேன். ஆனால் எந்த அண்ணன் அப்படி கிடையாது. அதனால் எனக்கு எங்க அண்ணனுடைய நினைவுதான் ஹோட்டலுக்கு போகும்போதெல்லாம் வரும். அண்ணன் வீட்டில் இருக்கிறதை வச்சு சாப்பிட்டுக் கொள்வார். ஹோட்டலுக்கு போனா இவ்வளவு செலவாகுமே என்று யோசிப்பார்.
ஆனால் அவருக்கு உண்மையில் ஹோட்டலில் சாப்பிடுவது பிடிக்கும். ஆனால் பணத்திற்காக அவர் வீட்டில் இருக்கும் சோற்றில் தயிரை ஊற்றி சாப்பிட்டுக் கொள்ளுவார். எனக்கு குடும்பத்தோடு வெளியே வித விதமாக சாப்பிடும்போதெல்லாம் அண்ணனுடைய ஞாபகம் வரும். அதுபோல எங்க அண்ணன் நல்ல டிரஸ் எடுக்க மாட்டாரு. நான் குழந்தையா இருக்கும்போது இருந்தே எனக்கு விதவிதமாக டிரஸ் எடுத்து தந்து, நான் போடுறத அழகு பார்த்தாரு.

இப்போ நான் நல்ல நிலைமையில் இருக்கிறேன் ஆனால் எனது அண்ணா இன்னும் நல்ல டிரஸ் போட்டு நான் பார்த்ததே கிடையாது என்று அந்த பெண் பீல் பண்ண, அதற்கு கோபிநாத் உங்க அண்ணன் எந்த மாதிரி டிரஸ் போடணும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீங்க? என்று கேட்க அதற்கு அந்த பெண் எங்க அண்ணன் ராஜா மாதிரி டிரஸ் போடணும். உங்கள மாதிரி கோட் சூட் போடணும்னு ஆசை என்று சொன்னதும் கோபிநாத் தன்னுடைய கோட்டை கழட்டி அந்த பெண்ணின் அண்ணனுக்கு போட்டு அழகு பார்த்தார்.
அதோடு என்னுடைய கோட் உங்க சைஸுக்கு சரி இல்லை தான் கொஞ்சம் பெருசா தான் இருக்கு ஆனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க என்று கோபிநாத் சொல்ல, தன்னுடைய அண்ணன் கோட் போட்டு இருந்ததை பார்த்து அந்த பெண்ணும் சந்தோஷப்பட்டிருந்தார். இந்த எபிசோடு வெளியான பிறகு இதை வீடியோவாக வெளியிட்டு ரசிகர்கள் இத்தனை நாட்களும் கோபிநாத் கோட் போட்டு நாட்டாமை செய்கிறாரே என்று கிண்டல் செய்தீர்களே கோபிநாத் இப்படி யாருக்காவது உதவி என்றால் உடனே கழற்றி கொடுக்க தான் கோட் போட்டு இருக்கார் என்று அவரை கர்ணன் ரேஞ்சுக்கு சிலர் பாராட்டுகிறார்கள்.
ஒரு சிலர் நம்ம கைப்புள்ள கஷ்டம்னு வந்துட்டா போட்டு இருக்கிற டிரஸையும் கழட்டி கொடுத்துடுவாரு என்று வின்னர் திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் ரியாக்ஷனையும் மீம்ஸ்களாக வெளியிட்டு வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications