நீயா நானாவில் பரபரப்பு.. மாமியாரை நான் பாக்கணுமா? அவங்க பாக்கணுமா? கண்ணீரோடு கேள்வி கேட்ட மருமகள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் செப்டம்பர் 24 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் மருமகள்களும் மாமியார் நாத்தனாரும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒரு மருமகள் என்னுடைய மாமியாரை நான் பார்க்க வேண்டுமா? அல்லது அவருடைய மகள் பார்க்க வேண்டுமா? என்று சில காரணங்களை கூறி கோபிநாத்திடம் விவாதம் செய்கிறார்.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளின் தலைப்புகளிலே விவாதங்கள் நடைபெற்று வரும். ஒரு சில நேரங்களில் நீயா நானா நிகழ்ச்சி யாரும் எதிர்பார்க்காத அளவில் பெரிய அளவில் பிரபலம் அடைந்ததும் உண்டு. அது போல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் பிரபலம் அடைந்திருக்கின்றனர்.
அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு பலர் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் மருமகள்கள் ஒரு பக்கமும் அவர்களுக்கு எதிராக மாமியாரும் நாத்தனார் ஒரே அணியாக இருக்கின்றனர். அவர்களில் குடும்பத்திற்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள், சந்தோஷங்கள் எல்லாவற்றையும் நீயா நானா நிகழ்ச்சியில் பேசி இருக்கின்றனர்.
அந்த வகையில் கோபிநாத் மருமகள்களிடம் இப்படி கூட என்னுடைய மாமியாரை நான் பார்த்துக் கொள்வேன் என்று சொல்வதென்றால் நீங்கள் என்ன சொல்வீங்க என்று கேட்க, அதற்கு ஒரு பெண் நான் என்னுடைய கணவரை எப்படி பார்த்துக் கொல்வேனோ அப்படித்தான் என்னுடைய மாமியாரையும் பார்த்துக் கொள்வேன். ஏன்னா அவங்க ஏன் கணவரை பெத்தவங்க. அதனால நான் அவங்கள இன்னொரு படி மேல தான் பாப்பேன் என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து இன்னொரு பெண், பெண்கள் எப்போதுமே அம்மா கிட்ட நிறைய வேலை வாங்கிக்கிட்டே இருப்பாங்க. ஆனா அவங்களுக்கு ரெஸ்ட் வேணும்னா அவங்க மருமகள் கிட்ட தான் இருக்கணும். அதனால நான் பார்க்கணுமா? ஏன் நாத்தனார் பார்க்கணுமா? மாமியார் என்கூட இருந்தா தானே நான் அவங்கள நல்லா பாத்துக்க முடியும். அவங்க மகள் கூட இருந்தா அவங்க வேலை செய்ய சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க என்று அந்த பெண் கோபிநாத்திடம் கேள்வி கேட்கிறார்.

அதை தொடர்ந்து இன்னொரு பெண் குரல் தழுதழுக்க நான் என்னுடைய அம்மாவுக்கு என்னவெல்லாம் பண்ணனும் நினைக்கிறானோ அதை என்னுடைய மாமியாருக்கு பண்ணனும்னு நினைக்கிறேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டு அந்த பெண்ணின் மாமியாரும் கண் கலங்கினார். இப்படியாக தற்போது இந்த வாரத்திற்கான மூன்றாவது பிரமோ வெளியாகி இருக்கிறது. இதற்கு அதிகமான ரசிகர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதில் ஒரு கமெண்டில் ஒரு பெண் தன்னுடைய கஷ்டத்தை பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் தான் ஒரு மருமகள் என்று கூறியிருக்கிறார். அதில் "நன்றி கெட்ட உலகம் இது. என் மாமியாரை மாமனாரை நான் நல்லா பார்த்துகிட்டேன். ஆனா அவங்க என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க. அவங்க பையன் பண்ற தப்ப நான் எடுத்து கேள்வி கேட்டேன்னு அவங்க இந்த மாதிரி முடிவெடுத்துட்டாங்க" என்று தன்னுடைய கவலையை பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல இன்னொரு பெண் தன்னுடைய கணவர் குடும்பத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் அந்த பிரமோவுக்கான கமெண்டில் "என்னுடைய நாத்தனார், மாமியார், மாமனார் மூன்று பேரும் சேர்ந்து என்னுடைய வளைகாப்புல சண்டை போட்டு நாடகம் ஆடி என்னையும் என்னுடைய புருஷனையும் பிரிச்சிட்டாங்க. இப்போ குழந்தை பிறந்து நாலு வருஷம் ஆகப்போகுது. இப்ப வரைக்கும் என் புருஷனை பார்க்க விடல, பேசவும் விடல. அவரோட போன் நம்பரை கூட மாத்திட்டாங்க. பெண் குழந்தை பிறந்ததிலிருந்து நாலு வருஷம் பார்க்க விடாம வச்சிருக்காங்க என்று தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதுபோல இன்னொரு கமெண்டில் மருமகள் தான் கணவனின் குடும்பத்தை தன் குடும்ப சொந்தமாக நினைக்கிறார். ஆனால் அவர்கள் எப்பவும் எதை கிளறலாம் என்று தான் இருப்பாங்க. என் மாமியார் என்ன பேசினாலும் நான் வாயை திறக்க மாட்டேன். அமைதியா ரெஸ்ட் ரூம் உள்ளே போயிடுவேன். அவங்க பேசறது கேட்டா தான் எனக்கு கோபம் வரும் என்று பல மருமகள்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார். இப்படியாக பல கருத்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு உங்களுடைய கருத்துக்கள் என்ன என்பதை தெரிவியுங்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications