நீயா நானாவில் கலந்து கொண்டது தப்பா? போட்டு கொடுத்துட்டாங்களே! கோபிநாத் கூட இப்படி சொல்லிட்டாரு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் இரவு உணவை கொண்டாட்டமாக மாற்றுபவர்களும் அதை விமர்சிக்கிறவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் தைரியமாக கலந்து கொண்ட ஒரு இளைஞர் மொக்கை வாங்கிய காட்சிகள் தான் இப்போது இணையத்தில் பலரால் கலாய்க்கப்பட்டு வருகிறது.
பொதுவாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஒரு சிலர் திடீரென்று பிரபலங்களாக மாறிவிடுகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை சொல்லவே வேண்டாம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல பேர் பெரிய அளவில் பிரபலங்களாக பேசப்பட்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மொக்கை வாங்கியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதே நேரத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் கலகலப்பான தருணங்களில் இருந்து விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த வாரத்தில் கூட இரவு உணவிற்காக கொண்டாட்டமாக மாற்றுபவர்களும் அது தவறு என்று சொல்பவர்களும் கலந்து கொள்கிறார்கள். பொதுவாக இரவில் அளவுக்கதிகமாக சாப்பிடுவது தவறு என்று பல மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இரவு தூங்குவதற்கு முன்பு குறைந்த பட்சமாக மூன்று மணி நேரத்திற்கு முன்பு எல்லோரும் சாப்பாட்டை முடித்து விட வேண்டும். சாப்பிட்டுவிட்டு உடனே தூங்குவதால் பட உடல்நிலை பிரச்சினைகள் ஏற்படுகிறது என்று மருத்துவர்கள் அறிவுரை கூறி வருகிறார்கள். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஒரு சிலர் இரவு நேரத்தில் தான் வீதி வீதியாக திரிந்து பிரியாணி, பரோட்டா, பர்கர், தோசை என்று விதவிதமான உணவை ருசி பார்த்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த வார எபிசோடின் முதல் ப்ரோமோவில் ஒரு நபர் "தோன்றல்" என்று ஒரு உணவை பற்றி சொன்னாங்க.. அது நல்லா இருக்கும் என்று சொன்னதால நானும் 15 கிலோமீட்டர் ட்ராவல் செய்து போய் சாப்பிட்டு வருவோம் என்று சொல்லிக் கொண்டிருக்க, எதிர் தரப்பில் இருந்த ஒரு அம்மா தோன்றல் வீட்டில் சாப்பிட்டாலே அரை மணி நேரம் கம்மென்று இருக்கும். அதை போய் இவங்க நைட்ல சாப்பிட்டா எப்படி ஜீரணமாகும் என்று கோபப்பட,
முதலில் பேசிய அந்த இளைஞர் சார் நான் பேசியதை டிவியில் போடுவீங்களா? சார் என்று கோபிநாத்திடம் கேட்க, அதற்கு கோபிநாத் ஆமா போடுவோம் என்று சொன்னதும் உடனே பக்கத்தில் இருப்பவரிடம் மைக்கை கொடுத்து விடுகிறார். அதற்கு கோபிநாத் என்னய்யா ஏன் பக்கத்துல மைக்கை கொடுத்துட்டே என்று கேட்க, அதற்கு அந்த இளைஞர் நான் எங்க அம்மாவுக்கு தெரியாம தான் சார் இரவு சாப்பிடப் போவேன்.
இப்போ நான் பேசியதை டிவியில் போட்டா அவங்களுக்கு தெரிந்திருமே என்று பயந்தபடி சொல்ல, அங்கிருந்த அனைவரும் கலகலவென சிரிக்கின்றனர். பார்க்கும் ரசிகர்களையும் இந்த ப்ரோமோ சிரிக்க வைத்திருக்கிறது. அதற்கு கோபிநாத் இதைத்தான் ப்ரோமோவில் போட போறாங்க நீ வேணா பாரு என்று ரகசியத்தை உடைக்க அவர் சொன்னது போலவே இப்போது ப்ரோமோவில் இந்த வீடியோ வந்திருக்கிறது.
நீயா நானா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அங்கு கண்டென்ட் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அதிகமான போக்கஸ் இருக்கும். அந்த காட்சிகளைத் தான் ப்ரோமோவில் போடுவார்கள். இது தெரியாமல் எப்போது அந்த இளைஞர் போய் சிக்கிக்கொண்டார் போல.. தன்னுடைய அம்மாவுக்கு தெரியாமல் அவர் ரகசியமாய் இரவு நேரத்தில் போய் சாப்பிட்டு வரும் ரகசியம் இப்போது அம்பலமாக்கப்பட்டிருக்கிறது. இனி வீட்டில் அவருடைய நிலைமை என்னவாக இருக்கும் என்று பார்க்கும் ரசிகர்களையும் யோசிக்க வைக்கிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications