நீயா நானா: நீ மட்டும் தான் இந்தியனா? கோபிநாத் முன்பு கோபத்தில் கிரிக்கெட் பிரபலம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் அக்டோபர் 8ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் இந்த வாரம் இந்திய அணி உலக கோப்பை வெல்லப்போவது உறுதி என்றும் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்றும் விவாதம் நடைபெறுகிறது.

அதில் கிரிக்கெட் பிரபலமான பத்ரிநாத் மற்றும் கிரிக்கெட் கமெண்ட்ரி நானி மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் போன்றோர் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த வகையில் விஜய் டிவியில் கிட்டத்தட்ட 10 வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நீயா? நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் மத்தியில் அமோகமான வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தான் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு பெரிய அளவில் காரணமாக இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி ஆரம்ப காலகட்டத்தில் சனி மற்றும் ஞாயிறு என இரண்டு நாட்கள் ஒளிபரப்பாகி வந்தது. இப்போது ஞாயிற்றுக்கிழமை 12.30 மணிக்கு மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் பற்றிய விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் இந்திய அணி உலக கோப்பையை வெல்லப்போவது உறுதி VS இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை என்றும் விவாதம் நடைபெற்று இருக்கிறது.
அதில் பிரபல கிரிக்கெட்டர் பத்ரிநாத், கிரிக்கெட் கமெண்ட்ரியன் நானி மற்றும் ஸ்ரீகாந்த் என மூன்று பேரும் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் மூன்று பெரும் தங்களுடைய கருத்துக்களை காரசாரமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான பிரமோவில் நானி, "நானே டோர்னமெண்ட் ஆடுறேனா அந்த டோர்னமெண்ட்ல யாரு பெஸ்ட் அதை தான் நாம பாக்கணும். எல்லாத்துலையும் இந்தியா இஸ் தி பெஸ்ட் எக்கியூப், சைடு இந்தியா இஸ் தி வின்னிங்" என்று பேசிக் கொண்டிருக்கும் போதே இடைமறித்த ஸ்ரீகாந்த் டேய்... என்று சொல்லிக் கொண்டு நக்கல் செய்கிறார்.

அதோடு இவன் எப்பவுமே இப்படித்தான் நீயா நானா நானி இதுதான் இந்த ஷோ என்று கலாய்க்கிறார். கூடவே நான் தான் இந்தியன் என்று அவன் காமிச்சுக்கிட்டு இருக்கிறான். புடலங்காய் நீ மட்டும் தான் இந்தியனா என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் ஸ்ரீகாந்த் கிரிக்கெட் கமெண்ட்ரி நன்றாகவே கொடுத்தாலும் இந்த மாதிரி மரியாதை இல்லாமல் பேசுவது சரி இல்லை என்று கருத்து கூறி வருகிறார்கள்.
அதே நேரத்தில் இந்த பிரமோவில் கோபிநாத் எந்த வார்த்தையும் பேசாமல் பதில் பேச முடியாமல் அமைதியாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் கோபிநாத்துக்கே இந்த நிலைமையா? இவர்கள் இடையில் என்ன பேசுவது என்று தெரியாமல் யோசித்துக் கொண்டிருக்கிறாரா? அல்லது இந்த மாதிரி நாமும் பேசி ஸ்ரீகாந்திடம் மாட்டிக்கொள்வோமோ என்று முழித்துக் கொண்டு இருக்கிறாரா? என்று அவரையும் விட்டு வைக்காமல் ரசிகர்கள் கலாய்க்கிறாரகள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications