Neeya Naana: விஜய் டிவியும், கோபிநாத்தும் மக்கள் மனதில் விஷத்தை ஊத்துறாங்க! நீயா நானாவால் நடிகை சந்தியா ஆவேசம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சி, தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் என இருதரப்பினரிடையே நடந்த விவாதம், இப்போது சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது. நாய்களுக்கு ஆதரவாகப் பேசியவர்களை, ஒரு கூட்டம் கிண்டல் செய்து, மீம்களையும், ட்ரால்களையும் போட்டு வருகிறது. இதைப்பார்த்த நடிகை சந்தியா ஜாகர்லமுடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு, ட்ரால் செய்பவர்களை ஆவேசமாகச் சாடியிருக்கிறார்.

விவாதமும், வைரல் டிராலும்
'நீயா நானா'வில் நடந்த விவாதம், தெரு நாய்கள் ஒரு பொதுப் பிரச்சனையா அல்லது அன்பு காட்ட வேண்டிய உயிர்களா? என்ற கேள்வியை எழுப்பியது. ஒரு பக்கம், நாய்களை ஆதரிப்பவர்கள், "அவை அப்பாவி உயிர்கள்; அவற்றுக்கு உணவளிப்பது ஒரு மனிதநேயப் பணி" என்று பேசினர். ஆனால், இவர்களைக் கிண்டல் செய்து, சமூக வலைதளங்களில் பல மீம்கள் பரவத் தொடங்கின. நாய்களைக் கண்டால் பயப்படுபவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், ஆதரவாளர்கள் பேசுவதுபோல பல கிண்டல் பதிவுகள் பகிரப்பட்டன.
சந்தியாவின் ஆவேசம்
இந்த ட்ரால்களால் கோபமடைந்த நடிகை சந்தியா, உடனே ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ஆவேசமாகப் பேசிய அவர், "என்னப்பா இது? ஒருத்தவங்களுக்கு அன்பு காட்டுனா, அது தப்பா? அந்த அன்பை வெச்சு, ஏன் இப்படி ட்ரால் பண்றீங்க?" என்று ட்ரால் செய்பவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பினார்.
சந்தியா தனது பேச்சில், "ஒரு நாய்க்கு உணவளிப்பது, அதுக்கு உதவுறதுன்னு பேசினவங்களை நீங்க ஏன் இப்படி அவமானப்படுத்துறீங்க? அவங்க ஒன்னும் தப்பு பண்ணலையே. தெரு நாய்களால் உங்களுக்குப் பயம் இருக்கலாம். ஆனா, அதுக்காக அந்த உயிர்களை நேசிக்கிறவங்களை ஏன் இப்படி கேலி செய்யணும்? அன்பு காட்டுறது ஒரு தப்பான விஷயமா? தயவுசெய்து இந்த மாதிரி ட்ரால் பண்றதை நிறுத்துங்க. இது அவங்க மனசை ரொம்பக் காயப்படுத்தும்" என்று மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசினார்.
சந்தியாவின் வீடியோ
அதோடு சமுதாயத்தில் இப்போது நாய் பிரச்சனையை பெரிதுபடுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் விஜய் டிவி நாய் பற்றிய ஹார்ட் டாப்பிக்கை எடுத்திருக்கிறார்கள். ஆனால் இது அவர்களுடைய டிஆர்பிக்காக எடுத்த முயற்சி தான். இந்த நீயா நானா நிகழ்ச்சியில் தெரு நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தெரு நாய்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்பவர்களை வைத்து விவாதிக்கிறார்கள் இந்த நீயா நானா டாபிக்கே தப்பாக இருக்கிறது.
தெரு நாய் பாதுகாக்க வேண்டும் என்பவர்கள் யாரும் தெரு நாய் கடித்தவர்களை பார்த்து உங்களுக்கு இன்னும் வேண்டும், இன்னும் கொஞ்சம் கடிச்சு இருக்கணும் என்று சொல்லவில்லையே? நாங்களும் அவங்களை பார்த்து பரிதாபம்தான் படுகிறோம். அதே பரிதாபம் எங்களுக்கு நாய்கள் மீதும் இருக்கிறது, அவ்வளவுதான். ஒரு நாய் கடித்ததற்காக ஒட்டுமொத்த நாய்களையும் அழிக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?
நாய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி கேட்க வேண்டியது கார்ப்பரேஷன்காரங்களை தான். அவங்களை தான் காலரை பிடித்து கேள்வி கேட்கணும். எதற்காக நீங்க நாய்களுக்கு சரியான தடுப்பூசி போடல? அவங்களுடைய இனப்பெருக்கம் குறைப்பதற்கு என்ன செஞ்சீங்க? என்று கேள்வி கேட்கணும். அனிமல் சப்போர்ட்டர்ஸ் நாங்க மனிதர்களுக்கும் சப்போர்ட் செய்கிறோம். நாங்கள் எங்களுடைய கை காசை போட்டு தான் நாய்களுக்கு தடுப்பூசி முதல் தேவையானதை செய்கிறோம்.
நீயா நானா நிகழ்ச்சி மூலமாக பப்ளிக் மனதில் விஷத்தை ஊற்றி வளர விடுவதற்காக உங்க சார்பாக என்ன செய்யனுமோ அதை நீங்க செய்றீங்க. நீயா நானா நிகழ்ச்சியை நடத்தும் சேனலும் சரி தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத்தும் சரி நீங்க நினைச்சது தான் இனி நடக்க போகுது. நீங்க அனிமல் லவ்வர்ஸ்ஸை ஒரு விரோதி போல மக்கள் மனதில் சித்தரிக்கிறீங்க என்று கோபமாக பேசியிருக்கிறார்.
Neeya Naana: நான் பேசியது வேறு, எடிட் பண்ணிட்டாங்க! நீயா நானாவில் சர்ச்சை பேச்சு! மன்னிப்பு கோரிய படவா கோபி
சந்தியாவின் இந்த வீடியோ, இணையத்தில் பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது. "அன்பை ட்ரால் செய்வதை நிறுத்த வேண்டும்" என்று அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சந்தியா ஜாகர்லமுடி, சின்னத்திரையில் நடிகையாகப் பணியாற்றி, தற்போது சமூக வலைதளங்களில் இதுபோன்ற முக்கியப் பிரச்சினைகள் குறித்துத் தைரியமாகப் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications