நீயா நானா "சர்ச்சை”.. இப்படி பண்ணலாமா..? இது நம்புற மாதிரியா இருக்கு.? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அதற்குக் காரணம் இந்த வாரம் நிகழ்ச்சியில் ட்ரெண்டிங் தாத்தா பாட்டிகள் மற்றும் இந்த கால இளைஞர்கள் கலந்து கொண்ட எபிசோடு தான்.

அதில் ட்ரெண்டிங் தாத்தா பாட்டிகள் என்று கூறிக்கொண்டு நிஜத்தில் தாத்தா பாட்டி இல்லாதவர்களை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தொடர்ச்சியாக பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். அதனாலேயே இந்த நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட பத்து வருடங்களை தாண்டி இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு குறைந்ததில்லை.

காரணம் இந்த நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும் தலைப்பு. அதாவது சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை பற்றியதாகவே இந்த நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத் ரசிகர்களின் மத்தியில் நன்றாகவே பிரபலம் அடைந்து விட்டார்
இரண்டு தரப்பு போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும், அவர்கள் இருவருடைய கருத்தையும் கேட்டு அதில் சரியான தீர்ப்பை கூறி அதில் சரியாக பேசுபவர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் தன்னுடைய பாராட்டையும் வழங்குவதில் கோபிநாத்துக்கு நிகர் கோபிநாத் தான் என்று சொல்லும் அளவிற்கு அதிகமான பாராட்டுகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்.

அதுபோல நீயா நானா நிகழ்ச்சி பல நேரங்களில் வைரல் ஆகி விடுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் நிகழ்ச்சி என்று ஒரு சிலர் இப்போதும் கூறிக் கொண்டிருக்கின்றனர். அதுபோல்தான் தற்போது இந்த வாரம் நிகழ்ச்சியில், ட்ரெண்டிங் தாத்தா பாட்டி மற்றும் இந்த கால இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் இரண்டு தரப்பினர்களும் தங்களுடைய கருத்துக்களை கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த வாரத்திற்கான எபிசோட்க்கு நான்கு ப்ரமோ வெளியாகி இருக்கிறது. ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் இந்த வாரம் தலைப்பு சரியாக இல்லை என்று கூறுகிறார்கள். இன்னும் ஒரு சிலர் நீங்க பொய் சொல்லி ஏமாத்தறீங்க.

இதுல கலந்து கொண்டவர்கள் யாருமே தாத்தா பாட்டி ஆக இல்லை. அந்த பக்கத்தில் இருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த பக்கத்தில் இருப்பவர்கள் அம்மா, அப்பா போலத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மேக்கப் போட்டு நீங்கள் தாத்தா பாட்டி என்று கூறுகிறீர்களா? என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

-
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications