அப்போ பாவனா இப்போ கோபிநாத்.. விஜய் டிவியில் இருந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்! இனி நீயா நானா தொகுப்பாளர்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் கோபிநாத் விஜய் டிவியை விட்டு விலகப் போகிறார் என்று செய்தி இணையத்தில் பரவி வருகிறது‌. இது குறித்து கோபிநாத் சமீபத்தில் பிரபல சேனலுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் கோபிநாத் தான் விஜய் டிவி விட்டு எல்லாம் போகவில்லை ஆனால் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் ஐபிஎல் 2024க்கான கிரிக்கெட் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கப் போவதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

neeya naana gobinath joins IPL 2024 tamil cricket commentary panel

அந்த வகையில் கோபிநாத்துக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சி என்றால் நீயா நானா நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் கோபிநாத்தின் நடுநிலைமையான தீர்ப்பு பலரையும் கவர்ந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோபிநாத்துக்கு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் வந்த வண்ணமாகவே இருக்கிறது.

அதுபோல திரைப்பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் கோபிநாத் விஜய் டிவியில் மட்டுமல்லாமல் பல தனியார் சேனல்களிலும் பலரை பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார். முதல் அமைச்சர் முதல் சாதனை படைத்தவர்கள் வரை யாரை பேட்டி எடுக்க வேண்டும் என்றாலும் கோபிநாத்தை கூப்பிடுங்கள் என்று சொல்கிற மாதிரி கோபிநாத்தை தான் பலரும் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நிலையில் கோபிநாத் பற்றி சில செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதில் கோபிநாத் விஜய் டிவியை விட்டு விலகப் போகிறார். இனி நானா நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள்? என்ற கேள்விகள் அதிகமாக எழுப்பப்பட்டு வருகிறது. அதற்கு கோபிநாத் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

neeya naana gobinath joins IPL 2024 tamil cricket commentary panel

அதில் நான் சேனலை விட்டு எல்லாம் மாறல, வரப்போற ஐபிஎல் சீசன்ல இருந்து கிடைக்கப் போற ஒரு வித்தியாசமான அனுபவத்துக்காக தான் காத்திருக்கிறேன். முதல்முறையா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழில் கமெண்ட்ரி பேனலில் வர இருக்கிறேன். முற்றிலும் வேறு ஒரு களத்திலும் இறங்கி தான் பார்ப்போமே என்று கூலாக கூறி இருக்கிறார்.

ஏற்கனவே ஐபிஎல் போட்டிகளில் நடிகர் ஆர் ஜே பாலாஜியின் வர்ணனையை பார்த்திருப்போம். அவருடைய ஜாலியான கிண்டல் கேலி கலந்த பேச்சை கேட்டு இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பலர் காத்திருப்பது உண்டு. அதே நேரத்தில் பாலாஜி பேச்சுக்கு எதிர் கருத்து பேசுபவர்களும் உண்டு. இந்த நிலையில் கோபிநாத்தின் என்ட்ரி கிரிக்கெட் ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நீயா நானா நிகழ்ச்சியில் நடுநிலைமையோடு கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கும் கோபிநாத் இனி கிரிக்கெட் வர்ணனையாளராக எப்படி இருக்கப் போகிறார் என்று இன்னும் ஒரு சில நாட்களில் தெரியும் ஏற்கனவே விஜய் டிவியில் இருந்து விஜே பாவனா சில வருடங்களுக்கு முன்பே ஸ்டார் ஸ்போர்ட்ஸ்க்கு சென்று விட்டார்.

இப்போது கோபிநாத்தும் அங்கே சென்று இருக்கிறார். பாவனா இப்போது விஜய் டிவியை விட்டு முழுமையாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனயாளராக மாறி இருக்கும் நிலையில் கோபிநாத் எப்படி இருக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம். அதே நேரத்தில் இப்போதைக்கு நீயா நானா நிகழ்ச்சியில் தொடர்ந்து கோபிநாத் தான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+