கோட் போட்ட நாட்டாமைக்கு பிறந்தநாள்.. குவியும் வாழ்த்துக்கள்.. சைக்கிள் கேப்பில் சொன்ன 4 அட்வைஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி மூலமாக கோட் போட்டு நாட்டாமை செய்து கொண்டிருக்கும் கோபிநாத்தின் பிறந்தநாளுக்கு சின்னத்திரை, வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். தன்னுடைய பிறந்த நாளில் தனக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்களுக்கு கோபிநாத் தன் ஸ்டைலில் நன்றி சொல்லி இருக்கிறார்.

பொதுவாக ரசிகர்களை பொறுத்தவரை சினிமாக்களில் நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் திறமையான நடிகர்களுக்கும், ஆளுமை மிக்கவர்களுக்கும் ஒரு தனி மரியாதை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோபிநாத் பலருக்கும் தெரிந்த நபராக இருந்து வருகிறார்.

Television Neeya Naana Vijay TV

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் இணையத்திலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அவருடைய உணர்ச்சி பூர்வமான வார்த்தைகளும், அவருக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய காமெடியான கருத்துக்கள் மூலமாகவே தன்னுடைய ரசிகர்களாக மாற்றி வைத்திருக்கிறார். அதுபோல இவருடைய எழுச்சி மிக்க கருத்துகளுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

1997 இல் டிவி நிகழ்ச்சிகளில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கிய கோபிநாத் விஜய் டிவி, ராஜ் டிவி, என்டிடிவி என பல டிவிகளில் பணிபுரிந்து இருக்கிறார். 2006 ஆம் ஆண்டில் இருந்து நீயா நானா நிகழ்ச்சியை இவர் தொகுத்து வழங்க ஆரம்பித்து இருக்கிறார். இப்ப வரைக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் அவரை தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக கொண்டு போக முடியாது என்கிற நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்.

கோபிநாத் தொகுப்பாளராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிக்கையாளர், விருந்தினர் பேச்சாளர் என்று பல திறமைகளை கொண்டுள்ளார். இதற்கெல்லாம் மேலே அவர் ஒரு குழந்தையின் அப்பா என்ற மதிப்பு தான் எனக்கு பெரிய பெருமை என்று பல பேட்டிகளில் தன்னுடைய மகள் வெண்பா குறித்து பெருமையாக பேசியிருக்கிறார்.

நீயா நானா நிகழ்ச்சியில் யாருக்கும் பாரபட்சம் காட்டாமல் நடுநிலைமையாக இவர் பேசும் கருத்துக்கள் பலருக்கும் பிடித்ததாக இருக்கிறது. அதுபோல கோபிநாத் பல புத்தகங்களையும் எழுதி வெளியிட்டு இருக்கிறார். அதில் தெருவெல்லாம் தேவதைகள், தயவுசெய்து இந்த புத்தகத்தை வாங்காதீங்க, நீயும் நானும், நேர்நேர் தேமா, கடவுச்சொல், நிமிர்ந்து நில், எல்லோருக்கும் வணக்கம், மண்ட பத்திரம் என்ற பல புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதிலும் "இந்த புத்தகத்தை வாங்காதீங்க" என்ற புத்தகம் ஆளுமை வளர்ச்சி அடிப்படையாகக் கொண்ட நூல் வரிசை தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. 4 லட்சத்திற்கு மேற்பட்ட பிரதிகளை விற்று தீர்த்து இருக்கிறது. அதுபோல விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளையும் கோபிநாத் தொகுத்து வழங்கி இருக்கிறார். நீயா நானா மட்டுமல்லாமல் மக்கள் யார் பக்கம், சிகரம் தொட்ட மனிதர்கள், நடந்தது என்ன, என் தேசம் என் மக்கள் என்று பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் இப்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார்.

அதுபோல சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். வாமணன், நிமிர்ந்து நில் போன்ற படங்களில் முக்கிய கேரக்டரில் கோபிநாத் நடித்திருக்கிறார். இப்படி பல திறமைகளை கொண்டுள்ள கோபிநாத்தின் பிறந்தநாளுக்கு சின்னத்திரை வெள்ளித்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல கோபிநாத் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடைசியாக வெளியிட்ட பதிவில் வழக்கமாக அவர் வெளியிடும் நல்லதா நாலு விஷயம் என்ற வீடியோவை வெளியேற்றி இருக்கிறார்.

அதில் முதலாவதாக, உங்கள் தகுதியை அல்லது சிறப்பை உணரும் தகுதி இல்லாதவர்களிடம் நான் யார் என்று விளக்கம் கொடுத்துட்டு இருக்கிறதால ஒன்னும் விளங்க போறது கிடையாது. இரண்டாவதாக, சொந்தக்காரங்க என்ன நினைச்சா நமக்கு என்னன்னு சொல்லுற நாமதான் யாரோ ஒருத்தங்க போடற கமெண்டுகெல்லாம் அப்செட் ஆகி முகத்தை தூக்கி வச்சிட்டு கவலையோட இருக்கிறோம். சரினா எடுத்துக்கணும் தப்புன்னா விட்டுட்டு போயிட்டே இருக்கணும்.

மூன்றாவதாக, பணக்காரங்க பெரிய மனுஷன் என்று அவர்களுடைய நம்பிக்கைக்கு உரியவராக இருக்க வேண்டும் என்று நாம கஷ்டப்படுவதை விட நம்மை நம்புற அன்புக்கு உரியவங்களுக்கு உண்மையா இருக்கணும். கடைசியாக அடுத்தவங்க நம்மளை எப்படி நம்புறாங்களோ அதுதான் நம்மளுடைய வேல்யூ என்று மத்தவங்கள இம்ப்ரஸ் பண்ற வேலையே பார்த்துக்கிட்டே இருக்காதிங்க. ஒரு கட்டத்தில் அது ஃபேக் ஆயிடும் உங்களுக்கு பிடிச்ச சந்தோஷமான வேலைகளை பாருங்க. வாழ்க்கை ஹாப்பியா இருக்கும் என்று கோபிநாத் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+