நீயா நானாவில் கோட் போட்ட காரணமே இதுதான்.. முதல் முறையாக ரகசியத்தை வெளிப்படையாக பேசிய கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு அவர் போடும் கோட் பிரபலம் ஆகி இருக்கிறது. எப்போதும் விதவிதமான கோட் போட்டு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் எதற்காக தான் அந்த நிகழ்ச்சியில் கோட் போட்டேன் என்று முதல்முறையாக கோபிநாத் பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகள் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு நிகழ்ச்சி தான் நீயா நானா நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட பத்து வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தான் ஆரம்பத்தில் இருந்தே தொகுத்து வழங்கி வருகிறார். கோபிநாத் விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு முன்பு ஆரம்பத்தில் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தார்.

அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பார்த்து தான் நீயா நானா நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மக்கள் மற்றும் பிரபலங்களால் விரும்பப்படும் நபராக கோபிநாத் இருந்து வருகிறார். மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து ஒவ்வொரு வாரமும் நீயா நானா நிகழ்ச்சி விவாதிக்கப்பட்டு வருகிறது. நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலே பிரபலம் ஆகிவிடலாம் என்று பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியை ரியாலிட்டி நிகழ்ச்சி தானா அல்லது ஸ்கிரிப்ட் படி தான் இதில் கலந்து கொண்டவர்கள் பேசுகிறார்களா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் மீண்டும் மீண்டும் வெவ்வேறு தலைப்புகளில் கலந்துகொண்டு பேசுகிறார்கள் என்பதும் பலருடைய வாதமாக இருக்கிறது. எது எப்படியோ இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சுவாரசியமாக போய்க் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் கோபிநாத் இந்த நிகழ்ச்சியின் மூலம் எவ்வளவு பிரபலம் அடைந்தாரோ அந்த அளவிற்கு அவர் போடும் கோட் மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அதனால் இவருக்கு கோட் போட்ட நாட்டாமை என்ற ஒரு செல்லப்பெயரும் இருக்கிறது. கோபிநாத் விஜய் டிவியில் மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது இதுபோன்று கோட்டு போடவில்லை என்றாலும் இந்த நிகழ்ச்சியில் அதிகமாக கோட்டு போட்டு கொண்டு தான் வருகிறார்.
இது குறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நீயா நானா நிகழ்ச்சி தொடங்கிய புதியதில் இரண்டு பேட்டரியை மாட்டிக்கொண்டு ஒர்க் பண்ண வேண்டி இருக்கும். சட்டை மட்டும் போட்டுக்கொண்டு அந்த மாதிரி மைக்கை மாட்டிக்கொண்டு கேமரா முன்பு அங்கேயும் இங்கும் அலையும் போது ஏதோ மனித வெடிகுண்டு போல தெரிவோம். அதை மறைப்பதற்காக தான் முதல் முதலாக கோட்டு கொடுத்தாங்க. இப்ப என்னன்னா நான் கழட்டனும்னு நெனச்சா கூட கழட்ட முடியாதபடி இந்த நிகழ்ச்சியோட ஒரு அங்கமா மாறிடுச்சு என்று கோபிநாத் அந்த நிகழ்ச்சியில் கலகலப்பாக பேசி இருக்கிறார்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications