நீயா நானாவில் வெளிவந்த ஒரு பெண்ணின் அவல கதை! இப்படியும் ஒரு நல்ல மாமியார் இருக்கிறாரே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான 'நீயா நானா' நிகழ்ச்சியில், ஆதரவற்றோர் இல்லங்களில் வளர்ந்து திருமண வாழ்க்கை அமைத்துக் கொண்டவர்கள் பற்றிய விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற ஒரு பெண்ணின் கதை, நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கோபிநாத் உட்பட, பார்வையாளர்கள் அனைவரையும் கண் கலங்க வைத்தது.
சின்ன வயதிலேயே ஆதரவின்றி ஆசிரமத்தில் வளர்ந்த அந்தப் பெண்மணி, அருகில் உள்ள பிள்ளைகளைப் பார்க்க அவர்களின் சொந்தக்காரர்கள் வரும்போது, தான் மட்டும் கேட் பக்கத்திலேயே ஏக்கத்துடன் பார்ப்பாராம். ஆனால், தனக்காக யாரும் வரவே மாட்டார்கள் என்று கண்ணீருடன் அவர் தனது பால்யத்தைக் கூறினார்.

ஒரு மாத சந்தோஷம்
படிப்பை முடித்த பிறகு, ஒருவருடன் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. ஆண் வீட்டின் முழுச் சம்மதத்துடன் திருமணமும் இனிதே நடந்தது. அவருடைய கணவர், பாசத்திற்குக் கிடைத்த பொக்கிஷம் போல, மிகவும் நன்றாகப் பார்த்துக்கொண்டாராம். ஆனால், அந்தச் சந்தோஷமான வாழ்க்கை ஒன்றரை மாதத்திலேயே முடிவுக்கு வந்தது. கணவர் ஒரு விபத்தில் அகால மரணமடைந்தார்.
சின்ன வயதில் பாசத்திற்காக ஏங்கியவருக்கு, அளவுகடந்த அன்பு கிடைத்தபோது, அதுவும் பாதிலேயே பறிபோனதால், அந்தப் பெண் உடைந்து போய்விட்டாராம்.
அந்தப் பெண் சிறுவயதில் இருக்கும் போது அவருடைய அம்மா இறந்து போயிருக்கிறார். பிறகு அவருடைய தந்தை ஒரு ஆதரவற்றோர் ஆசிரமத்தில் கொண்டு விட்டிருக்கிறார். அடுத்த சில மாதங்களில் அவருடைய தந்தையும் இறந்து விட்டாராம். இவரை கவனித்து வந்த தாத்தா பாட்டி மற்றும் தம்பி எல்லோருமே அடுத்தடுத்து சில வருடங்களுக்குள் இறந்து போயிருக்கிறார்கள். பிறகு திருமணம் முடிந்ததும் கணவரும் இறந்து போயிருக்கிறார்
மாமியார் கொடுத்த பாசம்
வாழ்க்கை அவரை இன்னமும் துரத்தியது. அவர் வாக்கப்பட்டுப் போனது ஒரு கிராமம். அங்கே இருந்த மக்கள், அந்தப் பெண்ணின் வாழ்க்கையைப் பற்றி அபசகுனமாகப் பேசத் தொடங்கினர். "இந்தப் பொண்ணு பொறந்த கொஞ்ச நாள்லேயே அம்மா, அப்பா, தம்பிய விழுங்கிட்டா. இப்போ புருஷனையும் விழுங்கிட்டு நிக்கிறா. இவளை எங்கயாவது அனுப்பிடுங்க!" என்று மோசமாகப் பேசியிருக்கிறார்கள்.
ஆனால், அந்த இக்கட்டான சூழ்நிலையில், அந்தப் பெண்ணின் மாமியார் தான் அவருக்கு அறன் போல நின்றுள்ளார். "இவ எங்க வீட்டுக்கு வாழ வந்த பொண்ணு. இவளை நாங்கதான் பார்த்துக்கணும்" என்று கிராமத்துக்காரர்களின் பேச்சை மீறி, தன் மகளைப் போலப் பாதுகாத்துள்ளார்.
இறந்துபோன தன் கணவரின் தம்பியே, "இவங்களை எங்கும் அனுப்ப வேண்டாம், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று சொல்லி, அவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, இன்றுவரை மரியாதையாகவும், பாசத்துடனும் பார்த்து வருகிறார். இன்று அந்தப் பெண்மணி ஒரு டான்ஸ் டீச்சராக நல்ல நிலையில் இருக்கிறார்.
மாமியாருக்கு கிடைத்த பாராட்டு
அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி ஒன்பது வருடங்கள் ஆகியும் இன்னும் குழந்தை இல்லை. இதற்கும் ஊர்க்காரர்கள் நிறையப் பேசியிருக்கின்றனர். அப்போதும், அந்த மாமியார், "உனக்குச் சீக்கிரமாகக் குழந்தை பிறக்கும். அப்படிப் பிறக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. நாங்க இருக்கோம் உனக்காக" என்று ஆறுதல் கூறியுள்ளார்.
கிராமத்தில், அம்மா அப்பா இல்லாத ஒரு பெண்ணை, வரதட்சணை ஏதுமில்லாமல் தன் முதல் மகனுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்து, ஒன்றரை மாதத்திலேயே மகனைப் பறிகொடுத்தும், அந்தப் பெண்ணைப் பழிக்காமல், தன் சொந்தப் பெண்ணைப் போலவே பார்த்துக் கொண்ட அந்த மாமியாருக்கு, கோபிநாத் நிகழ்ச்சியின் பாதியிலேயே எழுந்து சென்று கிஃப்ட் வவுச்சர் கொடுத்து கௌரவித்தார். அந்த மாமியார் காட்டிய அன்புதான், அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மீட்டெடுத்துள்ளது.
இரண்டாவது கணவர் காட்டும் மரியாதையையும், மாமியார் காட்டும் பாசத்தையும் உணர்ந்து, அந்தப் பெண் தனது முதல் கணவரின் நினைவில் இருந்து வெளியே வந்து, நிகழ்கால வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தான் பலருடைய மனதிலும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications