நீயா நானாவில் கோபிநாத் கேட்ட கேள்வி.. சட்டென்று உடைந்து அழுத பெண்.. இது பலருக்கு பாடம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் மே 4ம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் இந்த வாரம் விவாகரத்து வரை சென்று மீண்டும் இணைந்த தம்பதிகள் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். அதில் சிலர் தாங்கள் எதற்காக விவாகரத்து செய்ய முடிவு எடுத்தோம், பிறகு எதனால் சேர்ந்தோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோபிநாத் கேட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே பெண் ஒருவர் கண்கலங்கி அழுதிருக்கிறார். இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீயா நானா நிகழ்ச்சியில் பல சுவாரசியமான தலைப்புகளில் விவாதம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரத்தில் நகரத்து ஆண்களை திருமணம் செய்ய விரும்பும் கிராமத்து பெண்களும், அதை தவறு என்று சொல்லும் கிராமத்து இளைஞர்களின் அம்மாக்களும் கலந்து கொண்டு விவாதித்தனார். அப்போது பட்டியலின பெண்ணை தன்னுடைய வீட்டிற்கு மருமகளாக ஆக்குவதற்கு ஒரு பெண் யோசித்தார்.

கோபிநாத் கேள்வி
அதே பட்டியலின ஆணை திருமணம் செய்வதற்கு கங்கு இருப்பவர்கள் யாரேனும் தயாராக இருக்கிறீர்களா? என்று கோபிநாத் கேட்டபோது இளம்பெண்கள் யாரும் முன் வரவில்லை. இதுகுறித்து கோபிநாத் இளம் பெண்களிடம் மாற்றம் வேண்டும் என்று நினைக்கும் நீங்கள் இன்னும் மாற்றத்தை மனதிற்குள் கொண்டு வரவில்லை உங்கள் மனதிற்குள்ளேயே அந்த மாற்றம் நடைபெறாத போது நீங்கள் கிராமத்தில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் ஒன்றுதான் என்று பேசி இருந்தார். இது இணையத்தில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
விவாதம்
கோபிநாத் பேசியது சரி என்று ஒரு சிலர் கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் கோபிநாத் பேசியது தவறு என்று கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த வாரமும் உணர்வு பூர்வமான ஒரு தலைப்பில்தான் விவாதம் வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது மனமுறிவு வரை சென்று மீண்டும் இணைந்த தம்பதிகள் விவாதிக்கிறார்கள். அதில் பலர் தங்களுக்குள் எதனால் விவாகரத்து நடந்தது என்று உருக்கமாக பேசி இருக்கிறார்கள்.

தம்பதிகளின் வருத்தம்
பல பெண்கள் தங்களுடைய கணவர் தங்களை அடித்து துன்புறுத்தினார்கள் அதனால் நாங்கள் விவாகரத்து செய்ய முடிவெடுத்தோம். ஆனால் குழந்தைகளுக்காக மீண்டும் சேர்ந்தோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அது போல சில ஆண் தன் மனைவியை அடித்து துன்புறுத்தினாலும் அதற்கு மன்னிப்பு கூட இதுவரைக்கும் கேட்டதில்லை என்று மனைவி வருத்தத்தை பகிர்ந்ததும் நீயா நானா நிகழ்ச்சியிலேயே மனைவியிடம் மன்னிப்பு கேட்டிருந்தனர்.

கதறி அழுத பெண்
அது போல ஒரு ப்ரோமோவில் ஒரு பெண் பேசும் போது நாங்கள் இருவரும் பேசினாலே சண்டை தான் வரும் அதனால் ஒரு கட்டத்தில் நாங்கள் டைவர்ஸ் பண்ணிக்கலாம் என்று முடிவு எடுத்தோம் என்று சொல்கிறார். அப்போது கோபிநாத் நீங்க ஐந்து வருஷம் கழிச்சு மீண்டும் எப்படி சேர்ந்தீங்க என்று கேட்கிறார். அதற்கு அந்தப் பெண் எங்களுடைய குழந்தைகள் என்னிடம் அம்மா நீ அப்பாவை பிரிஞ்சி தனியா இருக்க என்று சொல்லி பசங்க எல்லாம் என்கிட்ட வம்பு இழுக்கிறாங்கனு சொன்னாங்க. அப்போ எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு. நாம தனியா இருக்கிறதுனால தானே ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்னா சொல்றாங்க, நம்ம பிள்ளைங்களுக்காக எவ்வளவு சண்டையா இருந்தாலும் நாம சேர்ந்து இருந்துக்கலாம்னு அப்போ முடிவு எடுத்தோம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே அழுது விடுகிறார். அவருடைய கணவரும் அதே போல அழுது கொண்டிருக்கிறார்.
நீயா நானா ப்ரோமோ
இந்த ப்ரோமோ இணையத்தில் வரும் நிலையில் இது தற்போதைய சூழ்நிலையில் பலருக்கு பாடம் என்று பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் ஈகோ பிரச்சனையாலேயே பலருக்கு இதுபோன்று விவாகரத்து நடக்கிறது. தாம்பத்திய வாழ்க்கையில் கணவன் மனைவி இருவருமே விட்டுக் கொடுத்து செல்வதால் தான் அது சிறப்பாக இருக்கும். ஒருவர் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்ற சூழ்நிலை ஒரு குடும்பத்தில் இருந்தால் அது சந்தோஷமாக இருக்காது நரகமாகத்தான் இருக்கும்.
குழந்தைகளுக்கும் பாதிப்பு
கணவனாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்பை பரிமாறிக் கொள்ளும் போது தான் அங்கு சந்தோஷம் நிறைந்திருக்கும். ஆனால் பல குடும்பங்களில் இப்போது அந்த சூழ்நிலையை பார்க்க முடிவதில்லை. பலருக்கு வேலை பளு, பணக்கஷ்டம் காரணமாக கணவன் மனைவி மீது வெறுப்பை காட்டுவதும், மனைவி கணவன் மீது வெறுப்பை காட்டுவதும் காண முடிகிறது. இது கணவன் மனைவிக்குள் மட்டுமல்ல அவர்களுடைய குழந்தைகளுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று இந்த ப்ரோமோ காட்டுகிறது.












Click it and Unblock the Notifications