நீயா நானா: பெண் உடைத்த ரகசியம்.. பேச முடியாமல் திணறிய கோபிநாத்.. இவருக்கே இந்த நிலைமையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார எபிசோடில் "சொன்னாதான் செய்வியா என கேட்கும் மனைவிகள் Vs சொன்னாதானே எங்களுக்கு தெரியும்" என்று சொல்லும் கணவர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. அதில் ஒரு மனைவி தன்னுடைய கணவர் குறித்து பேசிய விஷயங்களை கேட்டு கோபிநாத் பதில் பேச முடியாமல் திணறிப் போய் இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் பலர் ஃபாஸ்ட் லைப்க்கு தகுந்தபடி வாழ்க்கையில் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் கணவன் மனைவிக்குள் புரிதல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கிறது. பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் ஒரு சில மாதங்களுக்குள் கருத்து வேறுபாடால் பிரிந்து நீதிமன்ற வாசலில் அந்தப் பக்கமாகவும் இந்த பக்கமாகவும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நிற்பதை காண முடிகிறது.

இதற்கு காரணம் என்னவென்று புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் பல பெற்றோர்களும் இருக்கிறார்கள். பெற்றோர்கள் இப்போது தங்களுடைய பிள்ளைகளின் ஆசைக்கு தகுந்தபடி திருமணத்தை நடத்தி வைக்கலாம் என்று இறங்கி வந்திருக்கின்றனர். ஆனாலும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும் அதிகமாக இப்போது விவாகரத்து செய்வது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
இப்படியான நிலையில் கடந்த வாரத்தில் ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியிலும் பல மனைவிகளின் ஆசைகள் கேட்கும் போது விசித்திரமாகத் தான் இருந்தது. எனக்கு இப்போது என்ன பிடிக்கிறது என்று எதையும் நானாக சொல்லமாட்டேன். ஆனால் கணவர்கள் என்னுடைய ஆசை, கனவை புரிந்து கொண்டு அவர்களாக அதை நிறைவேற்ற வேண்டும். அதே நேரத்தில் எனக்கு என்ன தேவை என்பதை என்னாலேயே சொல்ல முடியாது என்றும் சில மனைவிகள் வினோதமாக பேசிக் கொண்டிருந்தனர்.

இப்படியான நிலையில் தான் ஒரு பெண் தன்னுடைய கணவர் குறித்து பேசியது இப்போது இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. அதில் அந்த பெண்ணுக்கு திருமணமாகி சில மாதங்கள் தான் ஆகிறது. ஆனால் திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவர் குறைந்த பட்சமாக 5 மாதமாக என்னோடு தூங்குவது கிடையாது. இரவு நேரத்தில் பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல, அதைக் கேட்டு கோபிநாத் இதில் நான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
எப்படி இவருக்கு புரிய வைக்கிறது... என்று திணறி இருக்கிறார். பிறகு அவருடைய கணவரிடம் ஏன் இப்படி பண்ணுறீங்க? உங்களுக்கு திருமணம் ஆகி கொஞ்ச நாட்கள் தான் ஆகியிருக்கிறது. குழந்தை இல்லை. உங்கள் மனைவி நீங்க பக்கத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது தப்பு இல்லையே? என்று சொல்ல, அதற்கு அந்தப் பெண் நானும் என்னுடைய கணவரும் எட்டு வருஷமா காதலிச்சு தான் கல்யாணம் பண்ணுனோம்.

ஒரே ஸ்கூல் காலேஜில் படித்தோம். இப்போ ஒன்றாக வேலை பார்க்கிறோம். அதனால எல்லா நேரமும் உன்கூட தானே இருக்கிறேன் என்று இரவு நேரத்தில் நண்பர்களோடு பப்ஜி விளையாடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்ல, இதுதான் பலருக்கு பிரச்சனையாக இருக்கிறது. நண்பர்களாக இருக்கும் போது என்னைப் பற்றி எல்லாமே என்னுடைய துணைக்கு தெரியும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டு இருக்கலாம்.
ஆனால் திருமணம் முடிந்த பிறகு அவர்களுக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் மற்றும் பாசத்தை கண்டிப்பாக கொடுத்து ஆக வேண்டும். நட்பாக இருக்கும்போது என்னைப் பற்றி எல்லாம் தெரியும் நான் இப்படித்தான் என்பது அவள் புரிந்து நடந்து கொள்வாள் என்று நாமாக நினைத்துக் கொள்வதால் தான் பல வீட்டில் பிரச்சனை நடக்கிறது என்று கோபிநாத் அட்வைஸ் செய்ய அதற்கு அந்தப் பெண்ணின் கணவரும் நான் இனி என்னை மாற்றிக் கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications