Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க எல்லாம் சொத்து சேர்த்து என்னத்துக்கு? குழந்தை விஷயத்தில் இப்படியா? நீயா நானாவில் கோபிநாத் நறுக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நாளை டிசம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் திருமணமாகி குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாத கை நிறைய சம்பாதிக்கும் தம்பதிகளும், அதை எதிர்ப்பவர்களும் கலந்து கொள்கிறார்கள்.

நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பில் விவாதம் நடந்து வருகிறது. பத்து வருடங்களுக்கு மேலாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கோபிநாத் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார். இந்த வாரத்தில் கூட சுவாரசியமான தற்போது சமூகத்தில் ஒரு ட்ரெண்டாக மாறிவரும் தலைப்பில் தான் விவாதம் நடைபெறுகிறது.

television neeya naana vijay tv

அதாவது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாமல் கைநிறைய சம்பாதிக்கும் தம்பதிகளும், அதை எதிர்ப்பவர்களும் கலந்து கொண்டு விவாதிக்கிறார்கள். நம்முடைய தாத்தா காலத்தில் ஒரு குடும்பத்தில் 10, 12 பிள்ளைகள் சர்வ சாதாரணமாக பெற்றிருந்தார்கள். ஆனால் நம்முடைய அப்பா காலத்தில் காலம் மாறத் தொடங்கியது.

அப்போது நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கலாச்சாரம் வந்தது. அதை தொடர்ந்து நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று பின்பற்றப்பட்ட நிலையில், இப்போது நாம் இருவர் நமக்கு ஏன் இன்னொருவர் என்று பலர் கேள்வி கேட்கிறார்கள். அதிலும் படித்து நல்ல வேலையில் கை நிறைய சம்பாதிப்பவர்கள் தான் நாம் ஏன் இன்னொரு குழந்தையைப் பெற்று நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷத்தை கெடுத்துக்கொள்ள வேண்டும்?

இப்போதைக்கு நாம் சம்பாதிக்கிறோம் நாம் அதை என்ஜாய் பண்ணி கொள்ளுவோம் என்று ஒரு மனநிலையில் இருக்கிறார்கள். இந்த மனநிலை பலருக்கு விரிவடைந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த விவாதம் தான் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெறுகிறது. குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இரட்டை சம்பாத்தியத்தில் Dink லைப் ஸ்டைல் பின்பற்றுபவர்களிடம் கோபிநாத் இது நீங்கள் எதிலிருந்து இப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்கிறார்.

அதற்கு அவர்கள் நாங்கள் சம்பாதிக்கிறோம் எங்களுடைய வாழ்க்கையை என்ஜாய் பண்ண வேண்டும் என்று நினைக்கிறோம். இன்னொரு குழந்தை வந்தால் எங்களுக்கு பொறுப்புகள் வந்துவிடும். எங்களுடைய தூக்கத்தை நாங்கள் கெடுக்க வேண்டியது இருக்கும் என்று அடுக்கடுக்காக பல அதிரவைக்கும் காரணங்களை சொல்கிறார்கள். (இதே காரணங்களை இவர்களுடைய பெற்றோர்கள் நினைத்திருந்தால் இவர்கள் என்ன ஆகி இருப்பார்கள் என்று உங்கள் மனதிற்குள் வரும் சிந்தனை கேட்கிறது)

ஆனால் இவர்கள் சொல்லும் காரணங்களை கேட்டு எதிர்தரப்பில் இருப்பவர்கள் கடும் கோபம் அடைந்திருக்கிறார்கள். அதில் ஒரு பெண் இவர்களுடைய வயசு தான் சார் இவங்களை இப்படி பேச சொல்லுது, இவங்க 50 வயசில் இருக்கும் போது இதே மாதிரி வந்து பேசுவாங்களா? என்று கேள்வி கேட்கிறார்.

அதுபோல இன்னொரு பெண் ஒரு ஸ்டடி இருக்கிறது அதாவது Dink என்பது வந்து புது கான்செப்ட். டாப் ஒன் பிரசண்டேஜ் லைஃபில் வாழும் மக்கள் என்னெல்லாம் பண்ண முடியுமோ அதை எல்லாம் Dink லைஃப் ஸ்டைலை பாலோ பண்றவங்களால பண்ண முடியும் என்று விளக்கம் கொடுக்கிறார்.

அதற்கு கோபிநாத் இப்போ என்னுடைய கேள்வி என்னன்னா டாப் ஒன் பிரசன்டேஜ் மக்கள் செய்யக்கூடிய விஷயங்களை எல்லாம் உங்களால் செய்ய முடியும் என்று சொல்லுறீங்கல்ல, நான் என்ன கேட்கிறேன் என்றால் நீங்க அந்த இடத்துக்கு போயிட்டா உங்களால எல்லா விஷயத்தையும் பண்ண முடியுமே ஆனால் ஏன் பண்ண முடியல என்று கேட்கிறார்.

அதோடு கோபிநாத் டாப் 1% இருப்பவர்கள் எல்லாம் சொத்தை சேர்த்தாங்க. ஆனா நீங்க செலவு பண்ணிக்கிட்டே இருக்கீங்க. நீங்க யாரா இருக்கீங்கனா? நீங்க ஒன்னு ரெண்டு என்ஜாய் பண்றதுக்காக உங்க வாழ்க்கையை பிரிச்சு போட்டுக்கிட்டு இருக்கீங்க. இந்த சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டியது யாரு? படித்த, தொழில்நுட்பம் தெரிந்த, வெற்றியாளர்கள் எப்படியெல்லாம் வளர்ந்தார்கள் என்ற சூட்சமத்தை புரிந்த நீங்கள் தானே? இந்த சமூகத்தை அடுத்த ஸ்டேஜிக்கு கொண்டு போகணும்.

நாம மிடில் கிளாஸில் இருந்து அப்பர் மிடில் கிளாசுக்கு போகலாம். ஆனால் அப்பர் மிடில் கிளாஸில் இருந்து உச்சிக்குப் போகவே முடியாது. நாம எவ்வளவு நாளா அப்பர் மிடில் கிளாஸ்ல இருக்கிறோம் நம்மால் ஏன் மேல போக முடியல? காரணம் இப்போ ஒரு பேச்சு நிலவுவது நம்ம சொத்து சேர்க்க போறோமா? செலவு செய்ய போறோமா? என்று ஒரு நிலை மாறி வருகிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+