காசுக்காக குழந்தையை சுமக்கிறார்களா?.. வாடகைத் தாய் முறை வரமா? நீயா நானாவில் அனல் பறந்த விவாதம்
சென்னை: வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது வரமா சாபமா என்பது குறித்து விஜய் டிவியின் நீயா நானாவில் இன்று மதியம் அனல் பறக்கும் அளவிற்கு விவாதிக்கப்படுகிறது.
எத்தனையோ செல்வங்கள் கோடி கோடியாக கொட்டி கிடந்தாலும் ஒரு வீட்டில் குழந்தை செல்வம் இல்லாவிட்டால் அந்த வீட்டில் வெறுமையே நிலவும். மகிழ்ச்சி பொங்காது.. திருமண வாழ்க்கையை முழுமையாக்குவது குழந்தை செல்வம்தான்.
தந்தையின் உயிர், தாயின் கருப்பையில் கருவாக வளர்ந்து தாய், தந்தைக்கு அம்மா, அப்பா என புரமோஷன் கொடுக்கிறது. வாழ்க்கையின் அர்த்தம் சொல்வது குழந்தை செல்வம்தான். அத்தகைய குழந்தை செல்வங்கள் இயற்கையாக கிடைக்காமல் இன்று எத்தனையோ தம்பதி மருத்துவமனை வாசலில் குவிந்துள்ளார்கள்.

மருத்துவர்கள்
இவர்களுக்கு மருத்துவர்கள் படிப்படியாக சிகிச்சை அளித்து எந்த சிகிச்சையிலும் இருவரில் ஒருவரால் இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் கடைசி ஆப்ஷன் வாடகைத் தாய் முறையாகும். இது ஏதோ சினிமா, சீரியலில் காட்டுவது போல் பணத்திற்காக ஆசைப்பட்டு யாரோ ஒரு பெண் , ஒரு தம்பதிக்கு குழந்தை பெற்று கொடுப்பது கிடையாது.

பிரதிபலன்
குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத அந்த ஆணின் பெண் உறவினரோ அல்லது பெண்ணின் உறவினரோ வாடகைத் தாயாக எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்யும் உன்னதமான சேவை. கணவரின் விந்தணுவும் மனைவின் கருமுட்டையும் நவீன டெக்னாலஜி கொண்டு வளர்க்கப்பட்டு அவை முதிர்ச்சி அடைந்தவுடன் வேறு ஒரு பெண்ணின் கருப்பையில் வைத்து வளர்ப்பது ஆகும்.

கருப்பை
அதாவது ஒரு பெண் தனது கருப்பையில் வேறு தம்பதியின் குழந்தையை சுமக்கிறார். இதில் சிலர் முகம் சுளிக்கும் அளவுக்கு எந்த விஷயமும் இல்லை. தங்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு வர வேண்டும் என்பதற்காக கடைசி முயற்சியாக இந்த ஆப்ஷனை மருத்துவரின் பரிந்துரையுடன் தம்பதி தேர்வு செய்கிறார்கள். இந்த வாடகைத் தாய் (surrogacy) முறை மூலம் எத்தனையோ பிரபலங்கள் குழந்தை பெற்றுக் கொண்டாலும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இந்த முறையை தேர்வு செய்த போது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

வாடகைத் தாய் முறை
அப்போதுதான் இந்த வாடகைத் தாய் முறை குறித்து பரவலாக பேசப்பட்டது. இந்த வாடகைத் தாய் முறையில் குழந்தை பிறப்பது வரமா சாபமா என்பது குறித்து இந்த வார நீயா நானாவில் இன்றைய தினம் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து இரு புரோமோக்கள் வெளியாகியுள்ளன. அதில் வாடகைத் தாய் ஆதரிப்போர், வாடகைத் தாயை எதிர்ப்போர். இவர்கள் பேசுகையில் வாடகைத் தாய் முறை கேவலமான ஒரு சமுதாயத்தை உருவாக்குகிறது என நினைக்கிறேன் என்று ஒரு பெண் தெரிவித்தார்.

குழந்தையே இல்லாமல் வாழ வேண்டுமா?
வாடகைத் தாய் எனும் ஆப்ஷன் கிடைக்கும் போது அதை பயன்படுத்திக் கொள்ளாமல் ஒரு தம்பதி கடைசி வரை குழந்தையே இல்லாமல் வாழ வேண்டுமா என வாடகைத் தாய் முறையை ஆதரிக்கும் பெண் கேட்டார். அப்போது 10 ஆண்டுகள் திருமணம் ஆகி குழந்தை இல்லை என்பதற்காக வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது சரியான தீர்வல்ல என்கின்றனர் எதிரணியினர். நான் வாடகைத் தாயாக இருக்கிறேன் என எந்த பெண் ஒப்புக் கொள்வார், அப்படியே ஒப்புக் கொண்டாலும் காசுக்காகத்தான் ஒப்புக் கொள்வார்கள் என்கிறார் எதிரணியை சேர்ந்த இன்னொரு பெண்.

வாடகைத் தாய் வரம்
அதற்கு மறுமுனையில் இருந்து காசுக்காகவே அவர்கள் ஒப்புக் கொண்டாலும் அதில் என்ன தவறு இருக்கிறது என கேட்கிறார். பணம் பிரச்சினை இருக்கும் பெண்கள் , பணத்தேவையை சமாளிக்க தற்போது வாடகைத் தாயாகிவிடுகிறார்கள் என எதிரணி பெண் சொல்கிறார். அதற்கு இன்னொரு பெண் , வாடகைத் தாய் முறை என்பது ஒரு வரம். எனக்கு குழந்தை இல்லை என்பதை என்னை சுற்றியிருப்பவர்கள் எத்தனை வார்த்தைகளில் சொல்லியிருப்பார்கள்? இதை நான் ஏன் பயன்படுத்தக் கூடாது என்கிறார். இதற்கு எதிரணி பெண் ஒருவர், புரொபஷனால் குழந்தை பேற்றை தள்ளி போடுவதாக கூறுகிறீர்கள். குழந்தை பேறு என்பது நல்ல விஷயம்தானே, அதைவிட உங்கள் புரொபஷன் முக்கியமா என கேட்கிறார். இப்படியாக இந்த விவாதம் போகிறது. இது இன்று விஜய் டிவியில் நண்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒளிபரப்பாகும்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications