நீயா நானா: எங்க அப்பா ஜாதி பார்க்கிறாங்க சார்.. அப்பாவை கதறவிட்ட மகன்.. கோபிநாத் சொன்ன வார்த்தை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியில் இன்று செப்டம்பர் எட்டாம் தேதிக்கான எபிசோடில் அப்பாவின் பாசத்தை புரிந்து கொள்ளாத மகன்களும் மகன்கள் மீது பாசத்தை வெளியே காட்டத் தெரியாத அப்பாக்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அப்போது ஒரு மகன் தன்னுடைய அப்பா ஜாதி பார்க்கிறார், அது என்னைமட்டுமல்ல என்னை போல இருக்கும் தலைமுறையினரையும் பாதிக்கும் என்று வெளிப்படையாக பேசி இருக்கிறார்.
நீயா நானா நிகழ்ச்சியில் சில தலைப்புகள் மக்களின் அன்றாட பிரச்சனைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இதனாலேயே இந்த நிகழ்ச்சிக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கிவரும் நிலையில் அவருடைய நடுநிலையான கருத்து மக்களை இந்த நிகழ்ச்சியை பற்றி பேச வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் ஒரு நெகிழ்ச்சியான தலைப்புதான் வைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இந்த வாரத்தில் அப்பாவின் பாசத்தை புரிந்து கொள்ளாத மகன்களும், மகன்களிடம் பாசத்தை வெளிப்படுத்தத் தெரியாத அப்பாக்களும் என்ற தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அதில் சில மகன்கள் தங்களுடைய அப்பாக்கள் தங்கள் மீது பாசம் வைத்திருக்கிறார்களா? இல்லையா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறார்கள். அதில் ஒரு மகன் என்னுடைய அப்பா நான் வீட்டிற்கு வந்து விட்டேனா என்று என்னுடைய அம்மாவிற்கு அக்காவிற்கு ஃபோன் போட்டு விசாரிக்கிறார்.
அவர் ஏன் எனக்கு ஒரு போன் செய்து என்னிடம் கேட்கக்கூடாது என்று சொல்கிறார். அதுபோல இன்னொரு மகன் என்னுடைய அப்பா எப்போது போன் செய்தாலும் பணம் பற்றி மட்டும்தான் பேசுகிறார். நீ எப்படி இருக்கிறாய்? சாப்பிட்டியானு கூட ஒரு வார்த்தை கேட்கல என்று ஆதங்கத்தை கொட்டுகிறார். இதற்கு அந்த மகன்களின் தந்தைகள் பேசுகையில் என்னுடைய மகன் என்னை வேலைக்கு போக வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.
நானும் இப்போ போகவில்லை ஆனால் 21ஆம் தேதிக்கு மேலே ஆகிவிட்ட பிறகும் பணம் வரவில்லை. எனக்குன்னு இருக்குற செலவுகளுக்கு நான் யாரிடம் கேட்பது என்று கேள்வி கேட்கிறார். அதுபோல இன்னொரு மகன் தன்னுடைய தந்தை பற்றி பேசியதுதான் இப்போது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுகிறது. அதாவது இந்த நிகழ்ச்சியில் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. தங்களுடைய தந்தைகளிடம் ஒரு கடிதம் எழுதி
மகன்கள் பல வருடங்களாக மனதில் வைத்திருக்கும் கேள்விகளை கேட்கலாம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதில் ஒரு மகன் தன்னுடைய தந்தைக்காக கடிதம் எழுதி இருக்கிறார். அப்போது என்னை உங்களுக்கு பிடிக்குமா? இல்லையா? என்று தெரியவில்லை. என்னை ஏன் நீங்கள் பெற்றீர்கள்? என்று எப்போதாவது யோசித்து இருக்கீங்களா? எங்க அப்பா ஜாதி பார்க்கிறது எனக்கு பிடிக்கல நான் காதல் திருமணம் செய்தால் என்னுடைய அப்பா ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேள்வி கேட்டிருக்கிறார்.
இந்த கடிதத்தை படித்துக் கொண்டிருக்கும் போதே கோபிநாத் சிரித்து விடுகிறார். என்ன பா ரொம்ப நொந்து போய் ஒருத்தன் எழுதி இருக்கிறார். யார் என்று தேடிப் பார்க்க அந்த கடிதத்தை எழுதியவரும் அவருடைய அப்பாவும் பேசுகிறார்கள் அதற்கு அவருடைய அப்பா ஆமாம் நான் சாதி பார்ப்பேன். ஏனென்றால் நான் வாழும் பகுதி அப்படிப்பட்டது. எனக்குன்னு ஒரு கம்பீரமும், மரியாதையும் இருக்குன்னா அந்த இடத்தில் நான் ஜாதி பார்த்து தான் ஆக வேண்டியது இருக்கிறது. என்று சொல்கிறார்.
அதற்கு அவருடைய மகன் எங்க அப்பா ஊரில் ஜாதி பார்க்கிறார். நான் இப்போ சென்னையில் இருக்கிறேன் இங்கே வந்த இடத்தில் எனக்கு வேலை வாங்கி கொடுத்தது ஒருவர், ரூம் கொடுத்தது ஒருவர், எனக்கு உதவி செய்தவர் இன்னொருவர், இவர்கள் எல்லாம் என்ன ஜாதி என்று பார்த்து என்னால் பழக முடியுமா? எங்க அப்பா ஜாதி பார்க்கிறது எனக்கு மட்டுமல்ல என்னை போல இருக்கும் தலைமுறையினருக்கும் பாதிக்கிறது. அவர்கள் மனதிலும் இதுபோன்று சிந்தனை வருகிறது என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அதோடு என்னுடைய அப்பா இப்போதும் எந்த இடத்தில் போனாலும் கம்பீரமாக இருக்கிறார். அவர் போனதும் எல்லோரும் உட்காராமல் எழுந்து நிற்கிறார்கள். ஆனால் எனக்கு 26 வயது ஆகிறது எனக்கு அந்த கம்பீரம் இண்ணமும் வரவில்லை அதனால்தான் என்னைப் பெற்றதற்கு நீங்க வருத்தப்படுறீங்களா என்று கேட்டேன் என்று சொல்ல அதற்கு கோபிநாத் நீ இதற்கு முன்பு அப்பாவிடம் ஜாதி பற்றி பேசினா பாரு அதுதான் உன்னுடைய கம்பீரம்... உங்க அப்பாவுக்கு போல உனக்கு அடுத்தவர்கள் மரியாதை தருவதில் கம்பீரம் கிடையாது என்று சொல்லி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஏமாந்து நிற்கும் சீரியல் நடிகை.. கதறி அழுது வெளியிட்ட வீடியோ! வெளிவந்த ரகசியங்கள் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications