வாழவே முடியாம சாக சொல்றீங்களா? நீயா நானாவில் கொந்தளித்த நபர்.. கோபிநாத்தை மீறி கடும் வாக்குவாதம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் வரவு எட்டணா செலவு பத்தணாவிற்கு என்ன காரணம்? தனிநபரின் வீண் செலவுகளா விலையேற்ற சூழலா என்று தலைப்பில் விவாதம் நடக்கிறது.

அதில் தனிநபர் ஒருவர் வீண் செலவுகள் குறித்து பேசிய நபரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளின் அடிப்படையிலே விவாதங்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரமும் சமுதாயத்தில் கொரோனா காலகட்டத்திற்கு பிறகு அதிகமான மக்கள் சந்திக்கும் அடிப்படை செலவுகளான வருமானம் மற்றும் விலையேற்றம் காரணம் குறித்து தான் விவாதம் நடைபெறுகிறது.
அந்த வகையில் தற்போதைய விலையேற்ற உயர்வு காரணமாக நடுத்தர வர்க்கத்தினரும் அடிமட்டத்தில் இருக்கும் ஏழைகளும் அதிகமாக பாதிப்பு அடைந்திருக்கின்றனர். விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே போகிறது. அடிப்படை பொருள்கள் கூட வாங்க முடியாத சூழலில் பல குடும்பங்களில் இருக்கிறது. அது குறித்து நீயா நானா நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட பலர் கேள்வி எழுப்புகளில் ஒரு சிலர் "ஐடியா" என்று கொடுத்தது ரசிகர்களை மட்டும் அல்லாமல் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களையும் கடுப்பாக்கி இருந்தது.
அதற்கு ஒரு நபர் விலையேற்ற சூழலை சமாளிப்பதற்காக அவங்க என்ன தொழில் செய்றாங்களோ? அதிலே விரிவுபடுத்தி செய்தால்தான் முடியும் என்று சொல்ல, அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் பெண் அவர் சொல்ற மாதிரி வருமானம் அதிகரிப்பதற்காக நான் எல்லாமே செஞ்சேன் என்று சொல்ல, அதே அணியில் இருக்கும் இன்னொரு நபர் "எக்ஸ்ட்ரா வருமானம் அதிகரிப்பது என்பது ரோட்டில் கூறு போட்டு வித்துக்கிட்டு இருக்காங்களா? என்னால வாழ முடியலன்னு சொல்லிகிட்டு இருக்காங்க, அதுல விரிவுபடுத்துங்கன்னா என்ன பண்றது...?"
"ஏற்கனவே 10 மணி நேரம் வேலை பார்க்கிறவன் இன்னும் நாலு மணி நேரம் வண்டி ஓட்டு, ஆக்ஸிடெண்ட் ஆகி செத்துப் போ என்கிற ரேஞ்சில தான் இவர் சொல்ற அறிவுரை இருக்கு" என்று கோபமாக கேள்வி கேட்க, அதற்கு கோபிநாத் பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். இப்படியாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இப்போது இருக்கும் சூழ்நிலையில் எப்படி வெளியேற்றத்தை குறைக்கலாம் என்று யோசிப்பதை விட்டு விட்டு இப்படி இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என்று சொல்லி மனிதர்களை மிஷின் போல மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இது மேல் தட்டு வர்க்கத்தின் திமிர் பேச்சு தான் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications