பணம் இருந்தா இப்படி பேசலாமா? அதுவும் மருந்து விஷயத்தில்.. நீயா நானா பிரபலத்தால் கோபத்தில் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வார எபிசோட்டில் வரவுக்கு மீறி செலவு அதிகரிப்பதற்கு காரணம் தனிநபரின் வீண் செலவுகளா? அல்லது விலையற்ற சூழலா? என்ற விவாதம் நடைபெறுகிறது.

அதில் மருத்துவ செலவுகளை மக்கள் எதிர்கொள்வதற்கு எத்தனையோ சீப்பான மாத்திரைகள் வந்துவிட்டது என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் இந்த வார்த்தை இப்போது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.
சமூகத்தில் தற்போது நிலவும் விலைவாசி உயர்வு காரணமாக ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அடிப்படை தேவை பொருட்களை கூட வாங்குவதற்கு முடியவில்லை. போன வாரம் பத்து ரூபாய்க்கு வாங்கிய பொருள் கூட இன்று 100 ரூபாயை தாண்டி விட்டது.
ஆனால் வருமானம் இன்னும் அதே நிலையில் தான் இருக்கிறது. பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். அதே நேரத்தில் ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். தொடரும் விலையற்றம் காரணமாக தனிநபர் எப்படி அதை எதிர்கொள்வது என்பது விதமான இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சிக்கு வரவு எட்டணா செலவு பத்தணா ஆகுவதற்கு என்ன காரணம் அதற்கு தனிநபரின் செலவுகளா? அல்லது விலை ஏற்ற சூழலா? என்று விவாதிக்கப்படுகிறது. அந்த எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு பெண் எங்களுக்கு நூறு ரூபாய் வருமானம் வருதுன்னா. அதுக்கு அதில் 105 ரூபாயாக செலவு தான் வருது சார் என்று சொல்கிறார்.
அதற்கு எதிரணியில் இருக்கும் நபர் நீங்க 100 ரூபாய்க்கு உள்ள வாழ பழகிக்கணும் என்று சொல்கிறார். அதற்கு இன்னொரு நபர் அடிப்படை தேவையான மருத்துவ செலவிருக்கு என்ன மாற்று வழி இருக்கிறது என்று கேள்வி கேட்க, அதற்கு ஏற்கனவே பதில் சொன்ன நபர் சீப்பான மெடிசின் எல்லாம் இப்போ ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க அதை பயன்படுத்திக் கொள்ளனும் என்று கூறியிருக்கிறார்.

இந்த நபரின் கருத்தை கேட்ட கோபிநாத் அரங்கத்தில் இருந்தவரிடம் இந்த நபரின் கருத்தை நீங்க எந்த மாதிரி பாக்குறீங்க என்று கேட்கிறார். அதற்கு இன்னொரு நபர் இது மேல் தட்டு வர்க்கத்தினுடைய பார்வை தான் என்று கூறுகிறார். இப்படியாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் இவர்களைப் போன்ற மேல் தட்டு வர்க்கத்தினரால்தான் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அதோடு இவரை பார்க்கும்போது ஆம்பள நிர்மலா சீதாராமன் மாதிரி இருக்கிறது என்றும் கருத்துக்கள் குவிகிறது.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
மாஸ்டர் மகேந்திரனின் ஷாக்கடித்த கரண்ட் பேச்சு.. அசிங்கமா திட்டறாங்க.. விஜய் கிட்ட நல்ல பேர் வாங்கவா -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications