அரங்கத்தில் பெண் சொன்ன வார்த்தை..கொதித்தெழுந்த கோபிநாத்..உணர்ச்சிகரமான தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் தன்னுடைய கணவர் இறந்து தான் விதவையாக மாறியதால் தன்னுடைய தங்கையின் மகள் பங்க்ஷனில் கலந்து கொள்ளவில்லை என்று கூறிய காரணத்தை கேட்டு கோபிநாத் திட்டி இருக்கிறார்.

இப்பவும் சமுதாயத்தில் இந்த மாதிரி ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறதா என்று கேட்டு கோபிநாத் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் சமுதாயத்தில் இந்த மாதிரி யாரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Neeya Naana Show 2023 May 21th Episode Highlights Gopinath was angry after hearing what the widow said

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களை பற்றியதாகவே பொதுவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் ஒரே வீட்டில் பிறந்த அக்கா தங்கைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் திருமணம் செய்த பிறகு அவர்களுடைய நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.

அதில் பலர் தங்களுடைய நிறை குறைகளை கூறிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு சகோதரி தன்னுடைய அக்காவை பற்றி பேசிய வார்த்தை தான் பலரையும் நெருட வைத்திருக்கிறது. அப்படி என்னதான் அவர் பேசிவிட்டார் என்று நீங்கள் நினைத்தால் அவர் தன்னுடைய அக்கா மீது வைத்திருக்கும் பாசம் மட்டுமல்லாமல் அக்கா செய்த செயலால் தன்னுடைய மனது ரொம்பவே வலித்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.

Neeya Naana Show 2023 May 21th Episode Highlights Gopinath was angry after hearing what the widow said

அந்த வகையில் ஒரு தங்கையை, அவருடைய அக்கா தான் வளர்த்து திருமணமும் செய்து கொடுத்தாராம். அக்காவுக்கு குழந்தை இல்லாமல் ஆரம்பத்தில் இருந்தபோது தன்னுடைய குழந்தையை தான் குழந்தையாக நினைத்துக் கொண்டிருந்தார். பிறகு அக்காவுடைய கணவர் இறந்த பிறகு எல்லா பங்க்ஷனுக்குமே அவர் ஒதுங்கி நிற்கிறார். குறிப்பாக என்னுடைய மகளின் ஃபங்ஷனுக்கு கூட எங்க அக்கா ஒதுங்கியிருந்தார். அது எனக்கு ரொம்பவே வருத்தமாக இருந்தது.

என்னுடைய மகளின் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தது அக்கா தான். ஆனால் கடைசி நேரத்தில் மேடையில் என் மகள் பக்கத்தில் நிற்காமல் ஒதுங்கி போய் நின்று கொண்டார். நான் எவ்வளவோ சொல்லியும் பக்கத்தில் வரவே இல்லை என்று சொல்ல கோபிநாத் ஏன் அப்படி செய்தீர்கள்? என்று அந்த பெண்ணின் அக்காவிடம் கேட்க இல்லை என்னுடைய புருஷன் இப்போது இல்லை, அதனால் நான் இந்த நிலைமையில் இருக்கும் போது யாராவது வந்து நீயா ஒதுங்கி நிக்கணும் இப்படி மேடையில் நிற்கக்கூடாது என்று சொல்லிவிட்டால் என்னால் தாங்க முடியாது. அதனால் தான் நானே ஒதுங்கி நின்று கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.

Neeya Naana Show 2023 May 21th Episode Highlights Gopinath was angry after hearing what the widow said

அதைக் கேட்டு கடுப்பான கோபிநாத் யாருக்காக நீங்க போனீங்க என்று கேட்க, நான் என்னுடைய தங்கச்சிக்காக தான் போனேன் என்று சொல்ல, அங்கே எத்தனை பேர் வந்தாங்க என்று கோபிநாத் கேட்க? 100க்கு மேற்பட்டோர் வந்திருந்தாங்க என்று சொல்ல, அத்தனை பேரில் உங்க தங்கச்சி தானே உங்களுக்கு முக்கியம் ஆனால் உங்க தங்கச்சியோட சந்தோஷத்துக்காக ஏன் நீங்க மேடையில் நிற்கவில்லை. அதுதானே செய்து இருக்கணும்? என்று கேட்க மீண்டும் அந்தப் பெண் யாராவது ஏதாவது சொல்லிடுவாங்க என்று சொல்கிறார்.

கோபிநாத் அப்படி சொல்லி இருந்தா நீங்க என்ன பண்ணுவீங்க என்று அந்த தங்கையிடம் கேட்க, அப்படி யாராவது சொன்னா நான் அவங்க கிட்ட சண்டைக்கு போயிருப்பேன் என்று சொல்ல, கண்டிப்பா சண்டை போடணும், அப்பத்தான் நீங்க கேட்கும் போது நாலு பேர் கண்டிப்பா அந்த மண்டபத்தில் இருந்து உங்களுக்கு சப்போர்ட்டா கேப்பாங்க, இப்படி நீங்களே ஒதுங்கி கிட்ட எப்படி பல பேர் வெளிய வர முடியும். நீங்க முன்னாடி வந்தாதான் கேள்வி கேட்கிறவங்க பின்னாடி போக முடியும் என்று சொல்ல அந்தப் பெண் அழுதபடியே நன்றி கூறுகிறார்.

Neeya Naana Show 2023 May 21th Episode Highlights Gopinath was angry after hearing what the widow said

இதற்கு எனக்கு வெட்கமாக தான் இருக்கிறது. இன்னமும் சமூகம் இப்படி எல்லாம் இருக்கிறதே என்று, நீங்கள் இப்படி நன்றி எல்லாம் கூற வேண்டாம். இது அடிப்படையாக எல்லோருக்கும் இருக்க வேண்டிய கடமை. கணவரை இழந்து விட்டால் நல்ல காரியங்களில் முன்னாடி நிற்க கூடாது என்று யாரும் சொல்ல கூடாது. அப்படி சொல்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த எபிசோட்டை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+