1 நாள் வச்ச குழம்பை 3 நாள் சூடு பண்ணி சாப்பிடுறோம்.. நீயா நானாவில் பெண் சொன்ன பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் ஒரு குழந்தை போதும் என்பவர்களும் ஒரு குழந்தை போக்கு சரி இல்லை என்பவர்களும் கலந்து கொண்டு விவாதித்தனர்.
அதில் ஒரு தம்பதியினர் நாங்கள் ஒரு குழந்தையை வளர்த்து எடுப்பதற்கு ஒரு நாள் வைத்த குழம்பை மூன்று நாட்கள் சூடு பண்ணி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் எங்க இன்னொரு குழந்தை என்று கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அதில் ஒரு டாக்டர் தன்னால் ஒரு குழந்தைக்கு பீஸ் கட்ட முடியவில்லை இதில் எங்கே இன்னொரு குழந்தை என்று கேள்வி எழுப்பி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி உயர்வு காரணமாக அன்றாட நாட்களை கழிப்பதற்கே பலர் அல்லல் பட வேண்டியது இருக்கு. அதுவும் நடுத்தர மக்களின் நிலைமையை சொல்லவே வேண்டாம் மாத சம்பளம் வாங்குபவர்களுக்கு முதல் சில வாரங்களில் சம்பளம் காலி ஆகி போக கடைசி வாரங்களில் கடனில் தத்தளிக்க வேண்டிய நிலைமையில் தான் இருக்கிறது.

அடிப்படை செலவுகளுக்கே அல்லல்பட்டு கொண்டிருக்கும் போது குழந்தைகளின் கல்வி சுகாதாரம் என்று அவர்களுடைய அடிப்படை நல்லதை கவனித்துக் கொள்வதிலும் அதிகமான செலவு ஆகிறது. அதனாலயே இப்போது உள்ள சூழ்நிலையில் ஒரு குழந்தை போதும் என்று பலர் முடிவெடுத்து விட்டனர். இந்த நிலையில் இந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு குழந்தை போக்கு சரி என்றும் அது சரி இல்லை என்றும் விவாதம் நடைபெற்றது.
அதில் ஒரு குழந்தையை பெற்றெடுப்பதற்குள் படாத பாடுபட்டாச்சு இனி இன்னொரு குழந்தையை பெற்றெடுப்பதற்கு அதே வேதனையை பட முடியாது என்று பலர் கூறி வந்தனர். அதுபோல இன்னும் ஒரு சிலர் பலரும் தற்போதைய சூழ்நிலையில் சந்தித்துக் கொண்டிருக்கும் பணப்பிரச்சனையால் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள தோணவில்லை என்று கூறி இருந்தனர்.

அதில் ஒரு டாக்டர் எனக்கு ஒரு குழந்தை போதும் என்று சொல்வதற்கு இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று மாமனார் மாமியார் தூரமா இருக்காங்க. அம்மா அப்பா உடல் நலம் குறைவாக இருக்காங்க. அதனால இன்னொரு குழந்தை வந்தால் அவங்களால பார்த்துக் கொள்ள முடியுமான்னு தெரியல. அதேபோல இன்னொரு விஷயம் பைனான்ஸ் தான். இப்போ எல்கேஜி யுகேஜி பீஸ் கட்டுவதற்காக முடியல என்று ஒரு டாக்டர் சொல்லி இருப்பது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் கோபிநாத்துக்கும் அதிர்ச்சி தான்.

அதைத் தொடர்ந்து இன்னொரு பெண் எங்களுக்கு கல்யாணத்துக்கு பிறகு எங்களுடைய வருமானமே 15000 தான். அந்த 15 ஆயிரம் ரூபாய்க்குள் தான் நாங்கள் எல்லாமே பார்த்துக்க வேண்டியது இருக்கு. ஒரு குழந்தையை வளர்த்துக் கொள்வதற்காகவே நாங்க ஒரு நாள் வைத்த குழம்பை மூன்று நாளைக்கு சூடு பண்ணி சாப்பிட்டு இருக்கோம். இதுல இன்னொரு குழந்தையை பெற்றுக்கொள்ள எங்களுக்கு தோணல என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications