கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் போச்சு.. கலங்கும் கணவர்.. மனைவி சொன்ன பதில்..கோபிநாத் கேட்ட நறுக் கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் "அடிக்கடி நகை வாங்கும் குடும்ப தலைவிகள் மற்றும் நகை வாங்குவதை கேள்வி கேட்கும் குடும்ப தலைவர்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடக்கிறது.
அதில் ஒரு கணவர் நான் வெளிநாட்டில் கார்பெண்டர் வேலை பார்த்து வாங்கிய நகையை புதியதாக மாற்றுகிறேன் என்று சொல்லி என்னுடைய மனைவி இரண்டு அரை பவுன் நட்டம் பண்ணிவிட்டார் என்று வேதனையை தெரிவித்திருக்கிறார்.
அதற்கு கோபிநாத் கேட்ட கேள்வி மற்றும் அந்த நபருடைய மனைவி சொன்ன பதில் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு ஒரு தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வாரம் "அடிக்கடி நகை வாங்கும் குடும்ப தலைவிகள் அதை வேண்டாம் என்று சொல்லும் குடும்ப தலைவர்கள்" என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் அனைத்து பெண்களும் விதவிதமான தங்க நகைகளை அணிந்து ஜோராக வந்து அமர்ந்திருக்கின்றனர்.
அவர்களால் பாதிக்கப்பட்ட கணவன்மார்கள் அமைதியாக இன்னொரு பக்கம் அமர்ந்திருக்க அவர்களிடம் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது ஒரு கணவர்," என்னுடைய மனைவி போட்டு இருக்காங்களே இந்த ஆரம் அஞ்சு பவுனு. ஆனா அது வாங்குறதுக்காக நான் வெளிநாட்டில் இருந்து வாங்கிட்டு வந்த பழைய நகை எல்லாம் சேர்த்து ஏழு அரை பவுன் கொடுத்துட்டு இந்த அஞ்சு பவுன் வாங்கிட்டு வந்து இருக்காங்க..."

"இப்போ உள்ள லேட்டஸ்ட் மாடல் வேண்டும் என்பதற்காக ஏழு அரை பவுன் நகையை கொடுத்துட்டு அஞ்சு பவுன் வாங்கி இருக்காங்க" என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சியான கோபிநாத், "என்னது ஏழரை பவுனுக்கு அஞ்சரை பவுனு தானா? என்ன சொல்றீங்கன்னு கேள்வி கேட்க, அதற்கு அந்த கணவருடைய மனைவி "இது புது தங்கம். அதனால அந்த ரேட்டுக்கு தான் எடுப்பாங்க" என்று சொல்கிறார்.
அதற்கு கோபிநாத், "அப்போ உங்களுக்கு இரண்டரை பவுன் போயிடுச்சே? அது நட்டம் தானே" என்று கேட்க, அதற்கு அந்தப் பெண் கூலாக அந்த பழைய நகையை போட முடியாமல் இருந்தது. இப்போ அஞ்சு பவுன் எடுத்து நான் பார்வையா போட்டுக்கிறேன். இதை எல்லாரும் பாக்குறாங்க. அந்த ஏழரை பவுன் இருந்தும் என்னால போட முடியலையே என்று சொல்கிறார். அத்தோடு விடாமல்," நான் இப்படி நகை போட்டு இருப்பது என்னுடைய கணவருக்கும் பெருமை தானே" என்று சொல்ல அரங்கத்தில் அனைவரும் சிரிக்கின்றனர்.

அதற்கு அந்த கணவர், "அது சரிதான் ஆனா இப்போ என்னோட இருப்பு குறைஞ்சு போச்சு" என்று சொல்ல, அந்தப் பெண் விடாப்படியாக நான் என் கணவரோடு போனால் இது அவர்தான் வாங்கி போட்டிருக்கிறார்.. பொண்டாட்டியை நல்லா வச்சிருக்காருன்னு பாக்குறவங்க சொல்லுவாங்கல்ல என்று சொல்ல, அதற்கு அந்த கணவர், இங்க ஒண்ணுமே இல்லையே. இப்படித்தான் எல்லாம் போகுது. நல்ல நகை எல்லாம் இப்படி போயிட்டு செம்பு கலந்த நகை தான் வீட்டுக்குள்ள வந்து இருக்கு என்று சொல்கிறார்.
அதற்கு அந்த பெண் இந்த நகையை நான் போட்டிருக்கும் போது இது நல்லா இருக்குன்னு நாலு பேரு பாத்து சொல்லும்போது அந்த ஒரு லட்ச ரூபா போனது எனக்கு பெருசா தெரியல என்று சொல்ல, கோபிநாத் அந்த பெண்ணின் கணவரிடம்" அவங்க என்ன சொல்றாங்கன்னா, பெட்டிக்குள்ள இவ்வளவு நாளா அந்த நகை தூங்கிட்டு இருந்துச்சு. ஆனா இப்போ அதை நான் போட்டிருக்கேன். அதை பார்த்து நாலு பேரு நல்லா இருக்குன்னு சொல்றாங்க. அது எனக்கு அதற்க்கு ஒரு லட்ச ரூபா போனது ஓகே தான்" என்று சொல்றாங்க என எடுத்து கொடுத்து பேசுகிறார்.
அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதைத்தான் கொரோனா காலகட்டத்தில் பேங்கில் கொண்டு வச்சோம். இதை வச்சா அவ்வளவு பணம் வாங்க முடியாதுல்ல என்று சொல்ல, அதற்கு அந்தப் கணவரின் மனைவி," நீங்க நகைக் கடைக்கு போனாலே அழுகுறீங்கப்பா. ஒரு மூக்குத்தி வாங்கி கொடுக்க சொன்னா மூக்கால அழுகுறீங்க" என்று அந்தப் பெண் பேசுகிறார்.
அதற்கு அந்தப் பெண்ணின் கணவர் நான் வெளிநாட்டில் வெயிலில் கார்பெண்டர் வேலை பார்த்து கஷ்டப்பட்டு வாங்கின நகை. ஆனா இப்போ அதை ஈஸியா இவங்க இப்படி மாத்துறாங்க என்று சொல்லி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இந்த கணவருக்கு ஆதரவாக கமெண்ட்களும் குவிகிறது.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications