நீயா நானா: பெண் கேட்ட "அந்த” கேள்வி.. இதை நானே எதிர்பார்க்கல.. அதிர்ச்சியில் கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் ஆறாம் தேதிக்கான மூன்றாவது பிரமோ வெளியாகி இருக்கிறது.
அதில் அதிக அக்கறை காட்டும் ஆண் நண்பர்கள் VS அதிக அக்கறை எரிச்சலாக உள்ளது என சொல்லும் பெண்கள் என இரண்டு அணியாக கலந்து கொண்டு இருக்கின்றனர்.

அதில் ஒரு பெண் சொன்ன வார்த்தையை கேட்டு கோபிநாத் இதை நான் எதிர்பார்க்கலையே என்று அதிர்ச்சி அடைந்திருக்கிறார். அந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் இந்த வாரம் அதிக அக்கறை காட்டும் ஆண் நண்பர்களும், அவர்களுடைய அதிக அக்கறை எங்களுக்கு எரிச்சலாக உள்ளது என்று சொல்லும் பெண்களும் இரு வேறு அணியாக கலந்து கொண்டு விவாதிக்கின்றனர்.

அந்த வகையில் ஆண் நண்பர்கள் நாங்கள் எதற்காக பெண்கள் மீது அதிக அக்கறை காட்டுகிறோம் என்று அழகாக எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். அதே நேரத்தில் பெண்களும் இவர்கள் காட்டும் அக்கறை எங்களுக்கு பல நேரங்களில் நெருக்கடிக்குள் ஆளாக்குகிறது என்று அதற்கான எடுத்துக்காட்டுகளையும் கூறியிருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த எபிசோடு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்காக மூன்று பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு ப்ரோமோவில் அதிக அக்கறை காட்டுற ஆண்கள் மீது உங்களுக்கு வர எரிச்சல் என்ன என்று கோபிநாத் பெண்களிடம் கேட்க, பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் எங்களிடம் ரூட் பண்ற மாதிரி பண்றாங்க என்று ஒரு பெண் கூறுகிறார்.

அதைத்தொடர்ந்து இன்னொரு பெண்ணும் எங்களை அவர்கள் ரொம்பவே கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள் என்று சொல்ல, அதற்கு கோபிநாத் ஆண்களிடம் என்னடா இப்படி இருக்கீங்க என்று கேட்க, அதற்கு ஆண்கள் தரப்பில் இருந்து ஒரு நபர் "நம்ம கூட இருக்கிற பெண்களையும் நம்ம அக்கா தங்கச்சி என்கிற அர்த்தத்தில் தான் நாம பார்ப்போம்" என்று சொல்கிறார்.

அதற்கு பெண்கள் தரப்பில் இருந்து இன்னொரு பெண் இன்னைக்கு நீங்க இருக்கீங்க, நீங்க பார்ப்பீங்க. நாளைக்கு உங்களுக்குன்னு ஒரு லைஃப்ன்னு வந்ததும் நீங்க பாத்துட்டு போயிருவீங்க என்று சொல்ல, அதற்கு அந்த ஆண் மீண்டும் அப்போ உங்களுக்கு ஹஸ்பண்ட் என்று ஒருத்தர் இருப்பாருல என்று கேட்க அதற்கு அந்தப் பெண் சற்று யோசிக்காமல்," நாங்க கல்யாணம் பண்ணிக்கல அப்ப என்ன பண்ணுவீங்க" என்று கேட்க அதை கேட்டு கோபிநாத்," இதை நானே எதிர்பார்க்கலை" என்று சிரிக்கிறார். மொத்த அரங்கமும் சிரிக்கின்றது. இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த வாரம் நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications