நீயா நானாவில் இப்படி ஒரு பிரச்சனை இதுவரைக்கும் வந்ததே இல்லை? அதிருப்தியில் கோபிநாத்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் நாளை எபிசோட்டுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரம் லவ் பண்ணுடா என்று சொல்லும் பெற்றோர்களும் காதல் அமையாத பிள்ளைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு அம்மா தன்னுடைய மகளுக்கு 23 வயது ஆகுது ஆனாலும் இன்னமும் ஒரு லவ் லெட்டர் கூட வரலையே என்று ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார். அதற்கு கோபிநாத் அதிரடியான பதிலையும் கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சிக்காக அதிகமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த வாரம் எந்த மாதிரி தலைப்பில் விவாதம் தொடங்க போகிறது என்று எதிர்பார்ப்பும் அனைவரிடமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் எபிசோட்டுக்கு முன்பே அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிடும்.

ஆனால் கடந்த சில வாரங்களாக நீயா நானா நிகழ்ச்சி பழைய மாதிரி பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.பொதுவாக நீயா நானா நிகழ்ச்சியில் சமுதாயத்தில் நிலவும் பிரச்சனைகளின் அடிப்படையிலேயே பிரச்சனை விவாதங்கள் நடைபெற்று வரும் அது போல தான் தற்போதும் விவாதிக்கப்பட்டு வந்திருந்தாலும் இதை அதிகமான ரசிகர்கள் ரசிக்கவில்லையா? என்று தான் என்ன தோன்றுகிறது.
இதற்கு முன்பெல்லாம் பிரமோவிற்கு அதிகமான லைக்குகளும் கமெண்ட்களும் குவிந்து கொண்டிருக்கும். ஆனால் இப்போது அது பழைய மாதிரி இல்லை.சரி தற்போது வெளியான வீடியோவை பற்றி பேசலாம் இந்த வார நிகழ்ச்சியில் லவ் பண்ணுடா என்று சொல்லும் பெற்றோர்களும் லவ் எங்களுக்கு அமையவில்லையே என்று சொல்லும் பிள்ளைகளும் தான் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ஒரு அம்மா தன்னுடைய மகளுக்கு 25 வயது ஆகிறது. ஆனால் இப்போது வரைக்கும் யாரையும் லவ் பண்ணவில்லை என்று கோபிநாத்திடம் கம்ப்ளைன்ட் பண்ணுகிறார்.படிச்சு முடிச்சாச்சு, வேலைக்கு போறாங்க ஆனால் யாரையும் லவ் பண்றது இல்ல. நானே என் பொண்ணு கிட்ட வாயைத் திறந்து கேட்டுட்டேன்.
நீ யாரையாவது லவ் பண்றியா டி, பையன் யாராச்சும் இருந்தா சொல்லு என்று கேட்க, அதற்கு பதில் சொல்லவில்லை என்று அந்த அம்மா சொல்ல ,அந்த பொண்ணு சார் எனக்கு "செட்" ஆகவில்லை சார் என்று வெள்ளந்தியாக பேசுகிறார்.அதற்கு கோபிநாத் என்னது லவ்வே செட் ஆகலையா? என்று கேட்க, ஆமா சார் படிச்சது கேர்ள்ஸ் ஸ்கூல்.

காலேஜ் படிச்சதும் கேர்ள்ஸ் காலேஜ், அப்புறம் ரெண்டு வருஷம் கொரோனா வந்து வீட்டிலேயே இருந்தாச்சு. அப்புறம் இப்போ ஒர்க் ப்ரம் ஹோம் தான். அதுவும் வீட்டில தான். இதுல எங்க லவ் பண்றது, வெளியே போறதே கிடையாது என்று தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்கிறார்.
இதைக்கேட்ட அதிர்ச்சியான கோபிநாத் கோவிட் என்னென்ன பிரச்சனை எல்லாம் உருவாக்கி வைத்திருக்கு பாத்தீங்களா? என்று சொல்ல, அதற்கு அந்த பெண்ணுடைய அம்மா சார் பொதுவா ஒரு பையனை பார்க்கும்போது லவ்வோட பாக்கணும். ஆனா ஒரு பையனை பார்த்ததும் அவனை அடிக்க போற மாதிரி பார்த்தா எப்படி லவ் செட் ஆகும்? இதுவரைக்கும் ஒரு லவ் லெட்டர் கூட வந்ததில்லை.. இது அசிங்கம் என்று அந்த அம்மா சொல்ல கோபிநாத் நமட்டு சிரிப்பு சிரித்தபடியே அந்தப் பெண்ணை பார்க்கிறார்.
அதற்கு அந்த பெண் சார் அது ஒரு பயம் சார். கேர்ள்ஸ் ஸ்கூல் படிச்சதால நமக்கு அந்த மாதிரி அமையல என்று சொல்ல, அதற்கு அந்தப் பெண்ணின் அம்மா நானே என் பொண்ண எப்பவும் வீட்டுக்குள்ளே இருக்காதேன்னு சொன்னா, இவ அவ பிரண்ட்ஸ் கூட போவதில்லை என்று அடுத்த குற்றசாட்டையும் வைத்துக் கொண்டிருக்க, கோபிநாத் இதை கேட்டு இதுவரைக்கும் நீயா நானாவில் இப்படி ஒரு பிரச்சனையை சந்தித்ததே இல்லை என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் இந்த பஞ்சாயத்துக்கு கோபிநாத் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
-
"பாரதிராஜாவை போலவே... கடைசி நாட்களில் அமைதியாக வலியை சுமந்த மணிவண்ணன்!" சோக கதை -
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications