நீயா நானாவா இல்லை சொல்வதெல்லாம் உண்மையின் சாயலா? ஏன் இப்படி? கோபிநாத்துக்கு குவியும் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் இப்போது சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியில் நடக்கப்படும் விவாதங்கள் மற்றும் பேசப்படும் வார்த்தைகள் இது பழைய நீயா நானா நிகழ்ச்சி போல இல்லை ஜீ தமிழில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியின் சாயல் போல மாறிக்கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விஜய் நீயா நானா நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை பல வருடங்களாக கோபிநாத் தான் தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியை மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலேயே இருந்து வந்தது.

Neeya Naana show is solluvathu allam ummai show copy discussions

ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சி ஜீ தமிழில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் நிகழ்ச்சி போன்று மாறிக்கொண்டிருக்கிறது என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. அதற்கு சில காரணங்களும் இருக்கிறது. கடந்த வாரத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் கணவன் மற்றும் மனைவிகள் கலந்து கொண்டனர்.

அதில் "மனைவிமார்கள் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை சொல்லாமலேயே கணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும், அதற்கு கணவர்கள் அது ரொம்ப கஷ்டம்" என்றும் விவாதம் நடைபெற்றது. அப்போது கூட ஒரு பெண் என்னுடைய கணவர் எனக்கு வேலையில் இருந்து வந்து காபி போட்டு தந்தால் தான் நான் குடிப்பேன் என்று சொல்லி இருந்தார். அது இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.

ஒரு கணவர் எப்படி வேலையில் இருந்து வந்து வீட்டில் இருக்கும் மனைவிக்கு காபி போட்டு கொடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு செல்ல முடியும் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர். அது குறித்து அந்த பெண் நிகழ்ச்சிக்குப் பிறகு கூறுகையில் நானும் வீட்டிலிருந்தே பிசினஸ் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கணவர் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் அங்கு எதையுமே சாப்பிட மாட்டார்.

அதனால் எனக்கு அவர் காபி போட்டு தர வேண்டும் இல்லையென்றால் நான் குடிக்கவில்லை என்று சொன்னால் தான் இடையில் ஒரு முறை எனக்கு வந்து காபி போட்டு தருவார். அதை நானும் அவரும் சேர்ந்து குடிப்போம். பிறகு அவர் வேலையை அவரே பார்த்துக் கொள்வார் என்று சொல்லி விளக்கம் கொடுத்திருக்கிறார்.

அதுபோல அதே எபிசோட்டில் இன்னொரு பெண் என்னுடைய கணவரும் நானும் ஸ்கூல் காலேஜ் எல்லாமே ஒன்றாக படித்தோம் பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இப்போது இருவரும் ஒன்றாக ஒரே ஆபீசில் வேலை பார்க்கிறோம். அதனால் என்னுடைய கணவர் உன்னோடுதான் நான் அதிகமாக நேரம் இருக்கிறேன். என்று சொல்லி வீட்டிற்கு வந்து இரவு 2 மணி 3 மணி வரைக்கும் நண்பர்களோடு பப்ஜி விளையாடுகிறார்.

என்னோடு எட்டு மாதமாக தூங்குவதற்கு கூட வரவில்லை. எங்களுக்கு குழந்தை இல்லை என்று பேச அதைக் கேட்டு கோபிநாத்தே ஒரு நிமிடம் என்ன பேச என்று சங்கடப்பட்டு பிறகு அந்த கணவருக்கு அறிவுரை கூறியிருந்தார். அதுபோல நேற்று அதாவது மே 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் வேலைக்கு போக சங்கடப்படும் இளைஞர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர் கலந்து கொண்டிருந்தனர்.

அதில் ஒரு இளைஞர் காலேஜ் முடித்ததும் கேம்பஸ் இன்டர்வியூவில் கிடைத்த வேலையில் இரண்டு மாதம் பார்த்துவிட்டு இந்த வேலை எனக்கு பிடித்திருக்கிறது அந்த கம்பெனியை வைத்து கொடுங்கள் என்று தன்னுடைய தந்தை மற்றும் அம்மாவிடம் கேட்டு வேலைக்கு போகாமல் இருக்கிறார் என்று அந்த இளைஞரின் அம்மா சொல்லியிருந்தார்.

அதோடு தன்னுடைய மகன் இரண்டு லட்சத்திற்கு ஐபோன் வாங்கி வைத்திருக்கிறார். அது வாங்கிக் கொடுக்கவில்லை என்றால் வீட்டில் அடம்பிடித்து சாப்பிடாமல் இருக்கிறார். அதுபோல இப்போது கார் வாங்கி கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார். இப்போது உள்ள நீயா நானா தலைப்புகளில் அதிகமாக எளிய மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை பணமாக்குவதாகவே இருந்து வருகிறது.

இது ஏற்கனவே சொல்வதெல்லாம் நிகழ்ச்சியில் செய்த வேலையை போலவே இப்போது நீயா நானா நிகழ்ச்சியும் செய்ய தொடங்கி விட்டார்கள். என்று சிலர் குற்றச்சாட்டு வைத்து வருகிறார்கள். அதுபோல கடந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் நடந்த விவாதத்தில் இளைஞர்கள் பலர் நாங்கள் வேலைக்கு போகாத காரணம் என்று சொன்னது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதாவது எங்களுக்கு ஒன்பது மணி முதல் 6 மணி வரை வேலை பார்க்க வேலை பிடிக்கவில்லை. அதுபோல இன்னொருத்தரிடம் நாங்கள் அடிமையாக வேலை செய்ய முடியாது. நாங்கள் பிசினஸ் தொடங்க வேண்டும். எங்களுக்கு பிடித்த வேலையைத்தான் நாங்கள் செய்ய முடியும் என்று பலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை.

இது சோம்பேறி தனத்தின் உச்சம் என்று தான் தெரிகிறது. தனக்கு பிடித்த வேலையை தான் தான் செய்வேன் என்றால் தானாக தன்னுடைய பிசினஸ் அல்லது வேலையை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆனால் பல இளைஞர்கள் அதை செய்வது கிடையாது.. பெற்றோரிடம் எனக்கு பிசினஸ் தொடங்க வேண்டும் பணம் தாருங்கள் என்று மிரட்டுகிறார்கள்.

அவர்களாக எதையும் சம்பாதித்து செய்ய வேண்டும் என்று நினைப்பதில்லை. அதுபோல 9 மணி முதல் 6:00 மணி வரைக்கும் வேலை பார்ப்பதற்கு அசிங்கம் என்ற ஒரு மனநிலை இப்போது பலருக்கும் இருக்கிறது. அப்படி பார்த்தால் இவர்கள் பேசுவது ஒன்பது மணி முதல் ஆறு மணி வேலை பார்ப்பவர்களை இழிவுபடுத்துவது போல தான் இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடில் கலந்து கொண்ட இளைஞர்களில் பலர் காலேஜில் ஏனோ தானோ என்று படித்தவர்களாகவும் தான் என்ன பிசினஸ் செய்யப் போகிறோம் என்பதையே தெளிவான மனநிலையில் இல்லாதவர்களாக தான் இருந்ததாக தெரிகிறது.

எதிர் தரப்பில் இருந்த பெற்றோரில் பலர் காய்கறி கடை வைத்திருப்பவர், மேஸ்திரி வேலை பார்ப்பவர் என்று நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெற்றோர்களிடம் இளைஞர்கள் தாங்கள் பிசினஸ் செய்யப் போறோம் என்று அவர்களை நச்சரித்துக் கொண்டிருப்பது நீயா நானா நிகழ்ச்சியில் காட்டாமல் தவிர்த்து இருக்கலாம் என்றும் பலர் கூறி வருகிறார்கள்.

படித்து சாதித்து அல்லது கஷ்டப்பட்டு தங்களுடைய சொந்த உழைப்பில் சாதித்தவர்களை நீயா நானா நிகழ்ச்சிக்கு அழைத்து விவாதத்திற்கு கூப்பிட்டு இருக்கலாம். இப்படி அம்மா தரணும் அப்பா பணம் தரணும் என்று மிரட்டி கொண்டிருப்பவர்களை இந்த நிகழ்ச்சிக்கு கூட்டிக்கொண்டு வந்து விவாதம் செய்வதால் இது போலவே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களின் மனநிலையும் மாறக்கூடும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+