Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானா: நான் என்ன உனக்கு அடிமையா? சீறிய பெண்.. பதறிப்போன கோபிநாத்.. இது கவனிக்க வேண்டிய விஷயம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் வரும் நவம்பர் 19ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இதில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் சங்க நிர்வாகிகளும் இரண்டு அணியாக கலந்து கொண்டிருக்கின்றனர்.

 Neeya Naana Show November 19th Promo and fans reaction

அதில் அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளில் ஒரு பெண் கேட்ட கேள்வியை கேட்டு கோபிநாத் அதிர்ச்சியாகி இருக்கிறார். அப்படி என்னதான் நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவே இந்த நிகழ்ச்சிக்கு பெரிய அளவில் வெற்றி தான். இந்த நிகழ்ச்சியில் மக்களின் அடித்தட்டு பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களும் சங்க நிர்வாகிகளும் இரண்டு அணியாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் தங்களுக்கு இந்த சங்க நிர்வாகிகளால் ஏற்படும் கஷ்டங்கள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

 Neeya Naana Show November 19th Promo and fans reaction

அப்போது பல குடியிருப்பு வாசிகள் சங்க நிர்வாகிகள் அனுமதி இல்லாமல் மீன், சிக்கன் கூட யாரும் உள்ளே கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் சங்க நிர்வாகிகளுக்கு கமிஷன் கொடுத்தவர்களால் மட்டும் உள்ளே கொண்டு வர முடிகிறது. அவர்கள் சொன்ன விலைக்கு தான் நாங்கள் பொருட்களை வாங்க வேண்டிய நிலைமையில் இருக்கிறோம் என்று தங்களுடைய கஷ்டத்தை சொல்லி இருக்கிறார்கள்.

அதோடு சில சங்க நிர்வாகிகள் எங்களுடைய குடியிருப்புக்குள் பேச்சிலர்களுக்கு இடம் கிடையாது. அதுபோல மொட்டை மாடியை யாரும் பயன்படுத்தக்கூடாது. காரணம் அங்கே சிலர் குடித்து விடுவார்கள் என்றும், அது போல குழந்தைகளின் சண்டைகளில் பெற்றோர் கேள்வி கேட்கக் கூடாது என்றெல்லாம் நாங்கள் விதிமுறைகள் வைத்திருக்கும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியாக பலர் தங்கள் கருத்துக்களை பேசி இருக்கின்றனர். இந்த நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 17ஆம் தேதிக்கான எபிசோடின் நான்காவது ப்ரோமோவில் அப்பார்ட்மெண்ட் சங்கத்தினர் தங்களுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கின்றனர். அதில் சங்க நிர்வாகிகளில் ஒரு பெண் நான் என்ன உனக்கு வேலை செய்றனா? நான் என்ன உனக்கு அடிமையா? யாருமே எங்க கிட்ட எதையும் ரிக்வெஸ்டா கேக்க மாட்டாங்க என்று கஷ்டத்தை சொல்கிறார்.

 Neeya Naana Show November 19th Promo and fans reaction

அதற்கு கோபிநாத் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களிடம் நீங்க ஏன் இவ்வளவு கோபமா நடக்குறீங்க. நீங்க எந்த வேலையும் செய்யறது கிடையாது, செய்ற இடத்தில் இருக்கவர்களிடம் ஏன் ஒரு வேலை ஏவுகிற மாதிரி தோற்றத்தில் பேசுறீங்க என்று கேட்கிறார். அதற்கு குடியிருப்பு வாசிகளில் ஒரு பெண் நாங்க சரின்னு சொல்லலையே தப்புதான் என்று சொல்கிறார்.

அதற்கு அதை தொடர்ந்து இன்னொரு குடியிருப்பு வாசியான பெண் ஒருவர் நாங்கள் ஒரு வேலையை செய்ய சொன்னால் அதை அவர்கள் பர்சனலா எடுத்துக்கிறாங்க என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து இன்னொரு குடியிருப்பு வாசி பெண், இமெயில் போட்டாச்சு எதுக்குமே ரிப்ளை வரலன போது, இதே டோன்ல தான் நான் ரிப்ளை போட்டேன் என்று கறாராக பேசுகிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த வாரம் பெரும் பஞ்சாயத்து நீயா நானா நிகழ்ச்சியில் இருக்கப் போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+