Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீயா நானா: பழசை விடுங்க.. கோபிநாத் இப்போ படிப்பு பத்தி சொன்னதை கேட்டீங்களா? அப்போ சம்பவம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் அக்டோபர் 29ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் இந்த வாரத்தில் வாழ்க்கையில் படிப்பு முக்கியம் என்றும் படிப்பு வாழ்க்கைக்கு முக்கியமில்லை என்றும் விவாதிக்கப்படுகிறது.

Neeya Naana Show October 27th Promo and fans reaction

ஏற்கனவே படிப்பு குறித்து பல மேடை நிகழ்ச்சிகளில் கோபிநாத் பல தகவல்களை பேசி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது நீயா நானா அரங்கத்தில் கோபிநாத் சொன்ன வார்த்தை இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அது பற்றி பார்ப்போம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது. அதனாலயே இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ச்சியாக 10 வருடங்களுக்கு மேலாக தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.

இதுவும் இந்த நிகழ்ச்சிக்கு வெற்றியாக இருக்கிறது. இந்த நிலையில் ஒவ்வொரு வாரமும் என்ன தலைப்பில் விவாதம் நடைபெறுகிறது என்று காத்திருக்கும் ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் இந்த வாரம் ரசிகர்கள் சில வாரங்களாகவே பேசிக் கொண்டிருந்த வாழ்க்கையில் படிப்பு மிகவும் முக்கியம் என்றும் வாழ்க்கையில் படிப்பு முக்கியம் இல்லை என்றும் விவாதம் நடைபெறுகிறது.

Neeya Naana Show October 27th Promo and fans reaction

ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை வனிதாவின் மகளான ஜோவிகா படிப்பு பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது கோபிநாத் ஏற்கனவே படிப்பு குறித்து அட்வைஸ் சொன்ன வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வந்தது. இந்த நிலையில் இப்போது அதைப் பற்றியே ஒரு ஷோவாக கொண்டு வந்திருக்கும் நிலையில் இது பற்றி அதிகமாக இந்த வாரம் விவாதிக்கப்பட இருக்கிறது.

அந்த வகையில் இந்த வார எபிசோட்டுக்கான நான்கு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முதல் ப்ரோமோவில் ஒரு நபர் என்னுடைய சர்டிபிகேட் வந்து வெறும் என்ட்ரி கார்டாக மட்டும்தான் யூஸ் ஆச்சு என்று நான் ஸ்ட்ராங்கா சொல்லுவேன் என்று அந்த நபர் சொல்கிறார். அதைத்தொடர்ந்து ஒரு கண்ணாடி போட்ட நபர் படித்த படிப்பு எங்களுடைய வாழ்க்கையை சொல்லித் தரவில்லை என்று தான் நாங்க சொல்லணும் என்று சொல்கிறார்.

அதை தொடர்ந்து இன்னொரு நபர் கம்மியா படிச்சா நிறைய வேலை செய்யணும், கம்மி சம்பளம். நிறைய படிச்சா அளவா வேலை செய்யணும், நிறைய சம்பளம் என்று விளக்கம் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து கோபிநாத் பேசுகையில் ரிஷப்ஷனில் ஒரு ரெஸ்யூம் கேட்பான். அப்பவும் குறைந்தபட்சம் ஒரு டிகிரி இல்லன்னா உங்க ரிப்போர்ட்ட கூட இன்டர்வியூக்கு போற இடத்தில் எடுக்க மாட்டானே என்று அதிரடியாக பேசுகிறார்.

அதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோவில் இன்னொரு நபர் படிச்சதுக்கும் நம்ம செய்ய போற வேலைக்கும் எந்த ஒரு சோசியல் ஸ்ட்ரக்ஷரும் இல்லாமல் இருக்குது என்பதை நாம இன்னைக்கு வரைக்கும் பாத்துட்டு இருக்கிறோம் என்று சொல்கிறார். அதைத்தொடர்ந்து இன்னொரு நபர் வேலைக்கு உள்ள அனுபவத்தை ஸ்கூலோ, காலேஜோ தரல என்று சொல்ற அந்த கொஸ்டின் ரொம்ப தப்பு என்று கூறுகிறார்.

அதே நேரத்தில் படிப்பு முக்கியம் என்ற அணியில் இருந்து தரம் கம்மியா இருக்குன்னா அந்த தரத்தை எப்படி உயர்த்துவது என்று நாம பார்க்கணுமே தவிர அது தேவையே இல்லைன்னு எப்படி சொல்றது? என்று கேள்வி கேட்க அதற்கு எதிர் தரப்பில் இருக்கும் ஆண் கல்வி தரத்த உயர்த்திட்டிங்கன்னா நாங்க சந்தோஷமா அதை ஏற்றுக் கொள்கிறோமே என்று கூறுகிறார்.

Neeya Naana Show October 27th Promo and fans reaction

இப்படியாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் அடுத்த மூன்றாவது ப்ரோமோவில் ஒரு பெண் என்னோட வீட்டு குழந்தைக்கு படிப்பு வரல அதே நேரத்துல பெயிண்டிங்கிலையோ, கிட்டாரிலோ ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கு அதற்கான ஸ்பேஸ் கொடுங்கன்னு தான் நாங்க சொல்றோம் என்று அந்த பெண் சொல்ல, அதற்கு படிப்பு முக்கியம் என்ற அணியில் இருந்து ஒரு நபர் உங்க வீட்டில ஒரு இன்ஜினியர் இருக்காரு, ஒரு டாக்டர் இருக்காரு அதனால உங்க வீட்டு பிள்ளையை நீங்க நடிக்க அனுப்பலாம்.

அது கவலை இல்லை, ஆனால் எங்க வீட்டுல ஒரு கவர்மெண்ட் ஆபீஸர் கட்டாயம் வேண்டும். அதற்கு பிறகு எங்க பிள்ளையை ஆட வைக்கிறோம் பாட வைக்கிறோம் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இப்படியாக ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் இது பற்றி கோபிநாத் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

அதே நேரத்தில் இது வனிதாவுக்கு ஏற்ற ஷோ என்று சில ரசிகர்கள் கமெண்ட்களில் கலாய்க்க, அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தின் போது கோபிநாத் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது அதை வைத்தே நீயா நானா நிகழ்ச்சியை டிஆர்பிக்காக இப்படி பிளான் போட்டு இருக்கிறார்கள் என்று சிலர் ரகசியத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+