எந்த நாயாவது அப்படி சொல்லுமா?! நீயா நானா கோபிநாத், படவா கோபி, அம்முவுக்கு குட்டு வைத்த எஸ்.வி.சேகர்!
சென்னை: இரவு 9 மணிக்கு மேல நாய் இருக்கம் தெருவுல போகாதீங்கன்னு சொன்னா அவங்கவங்க தெருவுக்கே போக முடியாது என்றும் நாய் கிட்ட ஆதார் கார்டையா காட்ட முடியும்? என்றும் எஸ்.வி.சேகர் கேள்வி எழுப்பியுள்ளார். விஜய் டிவியில் நீயா நானா ஷோவில் தெரு நாய்கள் குறித்த பேச்சு குறித்து இவர் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.சேகர் கூறியிருப்பதாவது: அண்மையில் வெளியான "நீயா நானா" ஷோவில் தெருநாய்கள் குறித்த நிகழ்ச்சியை பார்த்தேன். அதில் தெருநாய்களை ஆதரிப்பவர்களும், தெருநாய்களே நகரில் வேண்டாம் என்பவர்களும் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து உச்சநீதிமன்றம் ஒரு உத்தரவை போட்டுள்ளது. நாய்கள் மீது அன்பு செலுத்துவர்களும், அவர்களுக்கு எதிரியாக இன்னொரு டீமை உட்கார வைத்து பார்த்தது போல் இருந்தது. ரெக்கார்டட் ஷோ எல்லாமே ஸ்கிரிப்ட் ஷோதான்.
45 நிமிடம்
8 மணி நேரம் நிகழ்ச்சியை 45 நிமிடங்கள் மட்டுமே காட்டினார்கள் என சொல்கிறார்கள். அதற்காக இந்த நிகழ்ச்சியை 8 மணி நேரம் போட வேண்டும் என நினைப்பது நிகழ்ச்சி குறித்து புரிதல் இல்லை என்றுதான் அர்த்தம். லைவ் ஷோ என்பது வேறு, ரெக்கார்டட் ஷோ என்பது வேறு. ரெக்கார்டில் அந்த சேனல் எதை விரும்புகிறதோ அதைத்தான் போடுவார்கள்.
அன்பு செலுத்துவோர் மீது ராகிங்
தெரு நாய்கள் மீது அன்பு செலுத்துவோரை ராகிங் செய்வது போன்ற பெருமை கோபிநாத்தையே சேரும். இரவு 9 மணியாச்சுன்னா யாரும் நாய் இருக்கிற தெரு பக்கம் போகாதீங்க என சொன்னால், யாருமே அவர்களின் தெருவுக்குள் செல்ல முடியாது.
ஆதார் கார்டு
நாய் கிட்ட நான் இந்த தெருன்னு ஆதார் கார்டை காமிச்சா, சரி நீ போ நான் குரைக்க மாட்டேன்னு எந்த நாயாவது அப்படி சொல்லுமா? சொல்லாது, நாமே என்ன சொல்வோம், ஒரு நாயும் நம் பேச்சை கேட்டதில்லை. நாய் எப்படி கத்தும் என சொல்ல வைத்து அதை கேலி பொருளாக்கியது எல்லாம் மிகவும் தப்பான விஷயம் கோபிநாத்!
கருத்தடை செய்தால்
கருத்தடை செய்தால் நாய் கடிக்காது என யார் சொன்னது, என்ன இருந்தாலும் அது ஒரு மிருகம்! பணக்கார தெருவில் நாய்கள் கடித்ததில்லை என்கிறார்கள். அது நல்ல விஷயம், ஆனால் அவர்கள் காரிலேயே போய் காரிலேயே வருவார்கள். அப்படி இருக்கும் போது எப்படி கடிக்கும். நானே 45 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நாய்களை பார்த்தால் காலை தூக்கி வண்டி மீது வைத்துக் கொள்வேன். எங்கே காலை கடித்து வைத்துவிடுமோ என்ற பயம்தான்.
இது என் ஏரியா
இது என் ஏரியா, நீ உள்ளே வராதே என்கிறது. நீயா நானாவில் மாநகராட்சி அதிகாரியையோ தமிழக அரசு அதிகாரியையோ அழைத்து நாய்கள் பிரச்சனைக்கு என்ன தீர்வு காண போகிறீர்கள் என கேட்டிருந்தால் இந்த நிகழ்ச்சி நன்றாக இருந்திருக்கும்.
குழந்தையை கடித்துவிட்டால்
விலங்குகளின் மீது பாசத்தை செலுத்த கூடியவர்களை தாக்க கூடிய நிகழ்ச்சியாகவும் கேலி செய்யக் கூடிய நிகழ்வாகவும் இது மாறிவிட்டது. நம் வீட்டிலேயே ஒரு நாய் நம் வீட்டு குழந்தையை கடித்துவிட்டால் நாயை தூக்கி வெளியே வீச மாட்டோமா? அது விட்டுவிட்டு நாய் வாயில் ஏன்டா காலை விட்டேனு குழந்தையையா கோபித்துக் கொள்வோம்? நாயை விட மனித உயிர்கள்தான் நமக்கு முக்கியம். இவ்வாறு நாய் பிரியர்களுக்கும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிகழ்ச்சியை நடத்தியவர்களுக்கும் அறிவுரை கூறும் வகையில் எஸ்.வி.சேகர் பேசியிருந்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications