10 லட்சம் சம்பளத்தை விட்டுட்டு விவசாயம்.. பெருமை பேசலாமா? பிரபலம் கேள்விக்கு கோபிநாத் பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்தவர்கள் அதை விட்டு வெளியே வந்து சிறு தொழில் மற்றும் விவசாயம் செய்து வருவது குறித்து பேசி இருந்தனர். மற்றொரு அணியினர் இவர்கள் எடுத்த முடிவு தவறு என்று பேசியிருந்தனர். இவர்கள் இருவருக்கும் விவாதம் நடைபெற்று வந்தது. அது பலருக்கு அனுபவ பாடத்தையும் கொடுத்திருந்தது.
சமுதாயத்தில் ஆரம்பத்தில் எல்லோருமே வேலை கிடைக்க வேண்டும் வருமான வேண்டும் என்று தான் போட்டி நிறைந்த வாழ்க்கையில் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த வேலையாலயே ஒருவித அழுத்தமும் உடல் ரீதியான பிரச்சனைகளும், மனரீதியான பிரச்சனைகளும் நிம்மதி இல்லாமல் பலருக்கு போகிறது. தனியார் வேலை என்பது அவ்வளவு எளிதானது கிடையாது.

அங்கே மகிழ்ச்சி மட்டுமே இருக்கும் என்று நம்ப முடியாது. எப்போது வேண்டுமென்றாலும் அந்த வேலை பிடுங்கப்படலாம் அல்லது வேலையில் இருந்து வெளியே அனுப்பப்படலாம் என்று ஒரு பயத்திலேயே இருப்பதுதான். என்னதான் திறமை இருந்தாலும் அங்கே உழைப்பு சுரண்டல், அடுத்தவர்களின் பொறாமை என எல்லாமே இருக்கத்தான் செய்கிறது.
அது தனியார் வேலையில் மட்டுமல்லாமல் கவர்மெண்ட் வேலைகளிலும் இருந்தாலும் தனியார் வேலையில் வேலை எப்ப வேண்டும் என்றாலும் போய்விடும் என்ற ஒரு பயம் அதிகமாக இருக்கிறது. இதே நேரத்தில் இந்த வார நீயா நானா எபிசோட்டில் அதிக அளவில் சம்பளம் வாங்கிக் கொண்டு உயர்பதவியில் ஐடி நிறுவனத்தில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் தங்களுக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்று அதிலிருந்து வெளியே வந்து சுய தொழில் அல்லது விவசாயம் செய்து கொண்டிருப்பவர்களும் இவர்கள் எடுத்த இந்த முடிவு தவறு என்றும் விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அதில் பல விஷயங்களை கூர்ந்து கவனிக்க முடிந்தது. அதில் ஒருவர் நான் பத்து லட்சத்துக்கு மேலே மாசம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் எனக்கு அந்த வேலை மன அழுத்தத்தையும் அதனால் குடும்பத்திற்கு பிரச்சனையும் கொடுக்க, அந்த வேலையை விட்டு வெளியே வந்து நான் இப்போது நிம்மதியாக விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
இது அவருடைய வாழ்க்கைக்கு சரி ஆனால் அதையே எல்லோரும் ஃபாலோ பண்ணினால் கஷ்டம் தான். காரணம் அவர் பத்து லட்சம் சம்பளம் வாங்கி இருக்கிறார் என்றால் கோடி கணக்கில் வருடத்தில் சம்பளம் வாங்கியிருப்பார். அதில் அவருடைய செலவு போக மீதம் இருப்பு ஓரளவுக்கு அவரிடம் இருக்கும். அதனால் அவர் தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து விவசாய நிலங்கள் வாங்கி விவசாயம் செய்யலாம்.
அதில் இவர் இறங்கி தான் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை. கையில் பணம் இருந்தால் எத்தனை ஆட்களை வைத்து கூட வேலை செய்துவிடலாம். ஆனால் கடைநிலை ஊழியரோ அல்லது இரண்டு இலக்கங்களில் சம்பளம் வாங்குபவர்களோ இந்த மாதிரி வேலையை விட்டுவிட்டு எளிமையாக வெளியே வந்து விவசாயத்தை செய்து விட முடியாது.
ஆனால் இவர்கள் பெருமையாக பேசுவதை பார்த்து பல பேர் தாங்கள் செய்து கொண்டிருக்கிற வேலையையும் விட்டுவிடத் தோன்றுகிற நிலைமைதான் ஏற்படும் இதுகுறித்து நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு நபர் தெளிவாக பேசி இருந்தார். அதாவது அவரது பேசுகையில் நீங்கள் ஐடி வேலையை விட்டுவிட்டு விவசாயத்துக்கு வந்து விட்டோம் என்று சொல்கிறீர்கள். ஆனால் அந்த விவசாயத்தில் என்னவெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்பதை சொல்லவே மறுத்து விடுகிறீர்கள்.
அதனால் உங்கள் பேச்சில் இன்ஸ்பிரேஷன் ஆகி பல இளைஞர்கள் கஷ்டப்பட வேண்டிய நிலைமை இருக்கும். அதனால் நீங்கள் நாங்கள் விவசாயத்துக்கு வந்து விட்டோம் என்று பெருமை பேசுவது பிரச்சனை கிடையாது, அதில் இருக்கும் கஷ்டங்களையும் லாப நட்டங்களை எல்லாவற்றையும் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இது பலருடைய பாராட்டுகளை பெற்று வருகிறது அதேபோல ஒரு சிலர் எங்களுக்கு எங்களுக்கு சம் அடுத்தவர்களிடம் சம்பளம் வாங்கும் நிலைமையில் இருக்கக்கூடாது நாம சம்பளம் கொடுக்க வேண்டிய நிலைமையில் இருக்க வேண்டும் என்று எண்ணம் வந்தபோது நாங்கள் ஐடி வேலையில் இருந்து வெளியே வந்தோம்.
இப்போ எங்களிடம் பல பேர் வேலை பார்க்கிறார்கள் என்று பெருமையாக பேசி இருந்தார்கள். அது நாங்கள் முன்னேற வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்களா? அல்லது எங்களுக்கு கீழே சிலர் அடிமைகளாக வேலைகளை செய்கிறார்கள் என்று இவர்கள் பெருமை பேசிக்கொள்கிறார்களா? என்று குழப்பத்தை ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications