Netflix OTT: அய்யோ நெட்ப்ளிக்ஸ் போச்சா! ‘ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்’ சீரிஸ் வந்த சமயத்தில் பிரச்சனை! ரசிகர்கள் பரிதாபம்!
சென்னை: உலகம் முழுவதும் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்றான நெட்ப்ளிக்ஸ், நேற்று புதன்கிழமை (நவம்பர் 26-ஆம் தேதி) மாலை திடீரென செயலிழந்து இருக்கிறது. சமீபத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் பிரபல தொடரான 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெளியாகும் சமயத்தில் இது நடந்தது தான் ரசிகர்களை மேலும் வருத்தமடையச் செய்தது.

10,000-க்கும் மேற்பட்ட பேர் பாதிப்பு
'டவுன்டிடெக்டர்' என்ற தளத்தின் தகவலின்படி, நெட்ப்ளிக்ஸ் தடைப்பட்ட சமயத்தில் 10,000-க்கும் மேற்பட்ட பயனாளர்கள் சிரமத்தைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. பிரச்சினைகள் குறித்து புகார் அளித்தவர்களில் 51 சதவீதத்தினர் வீடியோ ஸ்ட்ரீமிங்கில் பிரச்சனை என்றும், 41 சதவீதத்தினர் சர்வர் கனெக்ஷனில் பிரச்சனை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த சிரமம் அமெரிக்க நேரப்படி மாலை 5 மணி முதல் தொடங்கியுள்ளது.
ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 தான் காரணமா
இந்த சிரமத்திற்கான உறுதியான காரணம் என்ன என்று நெட்ப்ளிக்ஸ் தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெளியாவதால், ஒரே சமயத்தில் அதிக ரசிகர்கள் இந்த தளத்திற்குள் நுழைய முயன்றதால் ஏற்பட்ட சர்வர் நெரிசல் தான் காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேலியாக பதிவிட்டுள்ளனர்.
ரசிகர்களின் சோகம்
"இவ்வளவு நேரம் காத்திருந்து ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸ் பார்க்கலாம்னு வந்தா நெட்ப்ளிக்ஸ் செயலிழந்து போச்சு" என்று ஒருவர் தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். மற்றொருவர், "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீரிஸில் அதிகமாக பேர் வந்ததாலே நெட்ப்ளிக்ஸ் முடங்கிப் போச்சு" என்று கேலிப் பதிவை வெளியிட்டுள்ளார்.
முன்னர் நடந்த சம்பவம்
இதேபோல், முன்பு ஜூலை 2022-இல், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4-இன்' இறுதி இரண்டு எபிசோட்கள் வெளியானபோதும், நெட்ப்ளிக்ஸ் தளத்தில் சிறுது நேரம் செயலிழப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இவ்வளவு ஆவலுடன் காத்திருந்த 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5-இல்', ஹாக்கின்ஸ் ஹீரோக்கள் மீண்டும் தங்களது ஊருக்குத் திரும்பி, 'வெக்னா' மற்றும் அப்ஸ்ஐட் டவுனைத் தாக்க ஒரு இறுதி சண்டைக்குத் தயாராகிறார்கள்.
முக்கிய கதைக்கரு
இதில் 'எலவன்' தனது பழைய நண்பரான 'ஒன்'/ 'வெக்னா'வுடன் சண்டையிடுவார் என்றும், 'வில்'-லுக்கும் அப்ஸ்ஐட் டவுனுக்கும் உள்ள தொடர்பு மேலும் தெளிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது சீசன் 5-இன் முதல் பகுதி வெளியாகியுள்ளது. இரண்டாம் பகுதி வரும் டிசம்பர் 25 அன்றும் (கிறிஸ்துமஸ்), சீசனின் இறுதி எபிசோட் புத்தாண்டு அன்றும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications