என்ன தலைவா நீங்களே உங்களை கலாய்ச்சிகிட்டா நாங்கள் எதுக்கு இருக்கோம்? ரவீந்தரை விடாத நெட்டிசன்கள்
சென்னை: குலதெய்வம் கோயிலுக்கு பிரைவேட் ஜெட்டில் போறீங்களா என ரவீந்தரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
ரவீந்தர்- மகாலட்சுமி கடந்த 1 ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்துகொண்டனர். 10 நாட்களாகியும் அவர்களை விடாமல் கலாய்த்து வருகிறார்கள். எல்லா சேனல்களிலும் ரவீந்தர் மகாலட்சுமி திருமணம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரவீந்தரின் உடல் அமைப்பை கிண்டல் செய்து நெட்டிசன்கள் கமென்ட் போட்டு வருகிறார்கள். இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அவரது வாழ்க்கை கஷ்டமோ நஷ்டமோ அவர்களுடையது இதில் விமர்சனம் செய்ய யாருக்கும் உரிமை இல்லை என்ற கருத்துகளும் வருகின்றன.

இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் இன்றைய தினம் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகாலட்சுமியுடன் விமான நிலையத்தில் இருப்பது போன்று புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். அதற்கு கேப்ஷனாக தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி மகாலட்சுமியுடன் தனி விமானத்தில் ஒரு தீவுக்கு தேனிலவுக்கு செல்கிறார்.

தயவு செஞ்சு வேண்டாம்
தயவு செஞ்சு அப்படி போட்ராதீங்கடா
திருச்சி பக்கத்துல டால்மியாபுரம் அருகே குலதெய்வம் கோயிலுக்குத்தான் போறேன். இந்த புகைப்படத்தை ஸ்கிரிப்ட்டாக செய்துவிடாதீர்கள் என காமெடியாக கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு நெட்டிசன்கள் வாழ்த்து கூறியதுடன் தலைவா நாங்க பேசாமல் இருந்திருப்போம், ஆனால் நீங்களே கன்டென்ட்டை கொடுத்துவிட்டீர்களே என கலாய்க்கிறார்கள்.

குலதெய்வம் கோயிலுக்கு தனி ஜெட்டா
குலதெய்வம் கோயிலுக்கு பிரைவேட் ஜெட்ல போறீங்களா என்கிறார் ஒருநெட்டிசன். அது போல் குசும்பு அண்ணா உனக்கு என்கிறார் மற்றொரு நெட்டிசன். ஸ்கிரிப்ட்டை நீங்கள் கொடுக்கறீங்களே சார், கண்டிப்பா அப்படித்தான் இப்போ செய்திக்கு தலைப்பு அதுவாகத்தான் இருக்கும்.எங்க எங்கன்னு வெயிட் செய்றாங்க என்கிறார் ஒரு நெட்டிசன். நீங்களே கலாய்ச்சுக்கிட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க ஓகே என்ஜாய் என்கிறார் இந்த வலைஞர்.

கமென்ட்டுகள்
கமென்ட்டுகள் பறக்கும் அதே வேளையில் இவற்றை மகாலட்சுமி பார்த்து சிரித்து ரசித்துள்ளார். அவரை விட்டு வைக்காத நெட்டிசன்கள், என்னமா சிரிக்கிற! அவர் உங்க புரொடியூசர்மா என்கிறார்கள். மகாலட்சுமி ரவீந்தர் ஜோடியை மகா ரவி என அழைத்து மகிழ்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications