அபிஷேக் இடத்தை நிரப்புகிறாரா??தாமரைச்செல்வி...குதர்க்கமாக கிளப்பிவிடும் நெட்டிசன்கள்
சென்னை: தற்போது ப்ரமோக்களில் அதிகமாக இடம் பிடிக்கும் தாமரைச்செல்வியை நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கிவிட்டனர்.
இதுவரைக்கும் அபிஷேக் செய்த வேலையை தற்போது தாமரைச்செல்வி தான் சிறப்பாக செய்து வருகிறார் என ரசிகர்கள் கொளுத்திப் போட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே நடந்த பிரச்சனைக்கு விடை தெரியாத நிலையில் தினமும் ஒரு பிரச்சனையா?? என்று பலர் அலுத்துப்போய் கூறியிருக்கின்றனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்டென்டுக்கு பஞ்சமில்லாமல் தினமும் ப்ரமோக்களில் இடம் பிடித்துக்கொண்டிருந்த அபிஷேக்கை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து கொண்டிருந்தனர். அவருக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டிருந்தாலும், ரசிகர்களுக்கு அவர் மீது சில மனஸ்தாபங்களாலும் அவருக்கு அதிகமாக வாக்கு கிடைக்காமல் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே சென்றுவிட்டார். ஆனால் அவருக்கு பிறகு யார் தண்டனை கொடுப்பார்கள் என்று ரசிகர்கள் பலர் பீல் பண்ணி வந்தனர். தற்போது ரசிகர்களின் பீலிங்கை குறைத்திருக்கிறார் தாமரைச்செல்வி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

ப்ரமோவில் மிரட்டும் தாமரை
அபிஷேக் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய பிறகு திங்கள் முதல் வெளியாகும் அனைத்து ப்ரமோக்களிலும் தவறாமல் தாமரைச்செல்வி இடம்பிடித்து வருகிறார். இதனால் இப்போ நெட்டிசன்கள் பார்வை தாமரைச் செல்வியின் பக்கம் திரும்பியிருக்கிறது. இவர் மீது தவறு இருக்கிறதோ இல்லையோ இவரே தினமும் ப்ரமோவில் வந்துவிடுவதால் அபிஷேக்கின் இடத்தை தாமரைச்செல்வி நிரப்பி வருகிறார் என்று சிலர் கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விளையாட்டை பற்றி தெரிந்து கொண்டுதான் தாமரைச்செல்வி வந்திருக்கிறாரா??அல்லது தெரியாமல் இப்படி நடந்து கொண்டிருக்கிறதா??என்று பலர் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

ரசிகர்களின் கருத்து
தாமரை தன்னுடைய கிராமத்து துடுக்குத்தனமான பேச்சால் அனைவரின் மனதிலும் இடத்தை பிடித்து இருந்தாலும், தற்போது நடக்கும் பிரச்சினைகளால் சிலருடைய முகச்சுளிப்புக்கு ஆளாக்கி இருக்கிறார். நிஜத்தில் இவருடைய கேரக்டர் இப்படி தானா?? அல்லது இவருடைய உணர்வுகளை தூண்டி இப்படி பேச வைத்து வருகிறார்கள். என்றும் இவருடைய கேரக்டரை மாற்றி காட்டிவிட வேண்டும் என்று போட்டியாளர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் ப்ரமோ விடுவதை யாரும் நம்பி ஒருவர் மீது தவறான அபிப்பிராயங்களை வைத்துவிடக்கூடாது, ஆனால் எப்போதுமே எபிசோட்டில் வேற மாதிரி இருக்கிறது என்று தாமரையின் ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

வருத்தத்தில் தாமரை
மனதில் இருக்கும் கோவத்தை மறைத்துக்கொண்டு விளையாட்டுத்தனமாக ஜாலியாக இருந்து கொண்டிருக்கும் தாமரைச்செல்வி தற்போது அடிக்கடி என்னை வீட்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லி வருவது அவருடைய ரசிகர்களுக்கு வெறுப்பாகத்தான் இருந்துவருகிறது ஆரம்பத்தில் இவர் தான் இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன் என்று கூறியவர். இப்போது இப்படி கூறுவதற்கு காரணம் சக போட்டியாளர்கள் தானா?? என்று ஒருபக்கமாக ரசிகர்கள் கூறி வந்தாலும் நிகழ்ச்சியை பார்க்காமல் ப்ரமோ மட்டும் பார்த்து வரும் ஒரு சில நெட்டிசன்கள் இவருக்கு எதிராக தொடர்ந்து கமெண்ட்களை அனுப்பி வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications