ஜீ தமிழின் "ஜோக்கர் போக்கர்" பாருங்க... மனசு விட்டு சிரிங்க மன அழுத்தம் போகும்
ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர் போக்கர் என்ற காமெடி நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 09.30 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
சென்னை: மன அழுத்தம் நிறைந்த இந்த கால கட்டத்தில் வாய் விட்டு சிரித்தால் மனம் லேசாகும். நோய்கள் நீங்கும். மக்களின் மனங்களைக் கவர்ந்த நகைக்சுவை நிகழ்ச்சி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஜோக்கர் போக்கர் காமெடி நிகழ்ச்சி காமெடி ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கிறது.

ஜீ தமிழ் டிவி துவக்கத்திலிருந்தே தமது நேயர்களுக்கு பொழுதுபோக்கு நிறைந்த பொருத்தமான நிகழ்ச்சிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு துவக்கத்திலிருந்து பல சுவாரஸ்யமான கற்பனை தொடர்களையும், நிஜம் சார்ந்த அற்புதமான நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகிறது.

இந்நிலையில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஜோக்கர் போக்கர் என்ற காமெடி நிகழ்ச்சி ஞாயிறு தோறும் இரவு 09.30 மணிக்கு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியை பப்புவும் சஷ்டிகா ராஜேந்திரனும் தொகுத்து வழங்குகின்றனர். சஷ்டிகா ராஜேந்திரனுக்கு அதிகம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவரது நிகழ்ச்சியை பார்ப்பதெற்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் பல காமெடியன்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பங்கேற்பாளர்களை விளையாட வைக்கின்றனர். ஜூலி, நளினி, பாலாஜி என பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வயிறு குலுங்க சிரித்ததோடு பார்வையாளர்களையும் சிரிக்க வைக்கின்றனர்.
நாளைய தினம் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எபிசோட் சில சுவாரஸ்யங்களை உள்ளடக்கி உள்ளது. முக்கிய பங்கேற்பாளராக நடிகை ரித்விகா பங்கேற்றுள்ளார். சின்னத்திரையில் எத்தனையோ காமெடி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் ஜோக்கர் போக்கர் வாய் விட்டு சிரிக்க வைப்பதோடு உங்களின் மன அழுத்தத்தை போக்கும் என்பது சந்தேகமில்லை என்கின்றனர் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள். இது ஒரு செலிபிரிட்டி காமெடி ஷோ என்று கூறியுள்ளார் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ராஜ்வி குமார்.
கேளிக்கை நிறைந்த இந்த நிகழ்ச்சியில் வெறும் காமெடி மட்டுமல்லாது சில சுவாரஸ்யம் நிறைந்த விளையாட்டுக்களும் உள்ளன. ஒவ்வொரு வாரமும் நான்கு பிரபலங்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். ஒரு மெகா பரிசுத்தொகைக்காக இவர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து மோதுகின்றனர்.
பணத்தை ஊதும் மெஷினுக்குள் காமெடியன்களை அனுப்புவது... யார் நன்றாக சிரிக்க வைப்பார்கள் என பெட் கட்டுவது... ஒரு பெட்டிக்குள் என்ன உள்ளது என்று சொல்வது என பல சுவாரஸ்யங்கள் அடங்கியுள்ளன. இந்த நிகழ்ச்சி குடும்பத்துடன் அனைவரும் பார்த்து ரசித்து சிரிக்கலாம் என்று கூறியுள்ளார் ராஜ்வி குமார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications