Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சன் டிவியை விட்டு வெளியே வர காரணம் இதுதான்! சிலர் செய்த சூழ்ச்சி! நிர்மலா பெரியசாமி ஓப்பன் டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்பு செய்தி வாசிப்பாளர்களில் ஒரு சிலருக்கு மக்கள் மத்தியில் அதிகமாக இப்போதும் இருக்கிறது. அதிலும் 90ஸ் கிட்ஸ்களில் பேவரைட் செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரிய சாமியை பலரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவர் "வணக்க்கம்" என்று சொல்லும் விதம் பலரையும் கவர்ந்தது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து முதல் முறையாக நிர்மலா பெரியசாமி பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அதில் தான் எதனால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்த சன் டிவியில் இருந்து வெளியே வந்தேன் என்பது பற்றி பேசி இருக்கிறார்.

அந்த வகையில் ஒரு காலத்தில் திரைப்பட நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் செய்தி வாசிப்பாளர்களுக்கும் இருந்தது. அதிலும் நிர்மலா பெரியசாமிக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருந்தனர். காரணம் அவர் தினமும் அணியும் புடவையை பார்ப்பதற்காக பெண்கள் கூட்டம் அவருக்காக செய்தியை பார்த்தது.

News Reader Nirmala Periasamy Leaving Sun TV reason to come out

அதோடு நிர்மலா பெரியசாமி சிரித்த முகத்தோடு தமிழ் பேசும் அழகை பார்த்து ரசிப்பதற்காக இளைஞர்கள் கூட்டமும் அவருக்காக டிவி சேனல் முன்பு காத்திருந்தது. அதுபோல பலர் செய்தி வாசிப்பாளராக மாறுவதற்கு முன்னுதாரணமாக நிர்மலா பெரியசாமி இருந்திருக்கிறார். ஆனால் இவர் தொடர்ச்சியாக ஏழு வருடங்களுக்கு மேலாக சன் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று அந்த சேனலை விட்டு வெளியே வந்திருந்தார்.

அது குறித்து பல வருடங்கள் கழித்து முதல் முறையாக நிர்மலா சீதாராமன் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் நான் ஸ்கூல் படிக்கும்போதே நன்றாக படிப்பேன். அப்பா தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்பா வீட்டில் அரசியல் பேசுபவர் அப்பாவோடு நிறைய படித்த நண்பர்கள் உண்டு. அவர்களோடு நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது அரசியல் விவாதிப்பேன்.

அதற்குப் பிறகு எனக்கு இருந்த அரசியல் ஆர்வத்தின் காரணமாகத்தான் நான் செய்தி வாசிப்பாளராக ஆகலாம் என்று சென்னைக்கு வந்த பிறகு முயற்சி செய்தேன். அதில் சில வருடங்கள் கழித்து தான் எனக்கு சன் டிவியில் வாய்ப்பு கிடைத்தது. முதல் வாரத்திலேயே நான் எதிர்பார்க்காத அளவிற்கு மக்கள் மத்தியில் எனக்கு பிரபலம் கிடைத்தது.

News Reader Nirmala Periasamy Leaving Sun TV reason to come out

நான் வணக்கம் சொல்லும்போது அங்கிருப்பவர்கள் அனைவருமே ஒரு நிமிடம் அதை உற்று நோக்கி சிரிப்பார்கள். நான் அப்போது நினைத்தேன் இது மக்கள் மத்தியில் பிரபலமாகும் என்று அது போலவே எனக்கு பிரபலத்தை வாங்கி கொடுத்தது. அது குறித்து பலரும் என்னிடம் கேட்பது நீங்க வணக்கம் சொல்வதற்கு எதுவும் ட்ரைனிங் எடுத்துட்டு வந்து இருக்கீங்களா? என்று கூட என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

அதுபோல நான் சன் டிவியில் இருந்தாலும் அதற்கு எதிரான அரசியல் கட்சி தலைவராக இருந்த எம்ஜிஆர் கூட என்னுடைய பேச்சை பாராட்டி இருந்தார். அது எல்லாம் என்னால் மறக்கவே முடியாது. ஏழு வருடங்களாக சன் டிவியில் என்னுடைய வாழ்க்கை நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது. பிறகு புது டீம் அமைந்ததும் சில சூழ்ச்சிகள் எனக்கு எதிராக நடந்தது. ஒரு சிலர் என்னை பற்றி தவறான தகவல்களை மேல் இடத்திற்கு கொண்டு போய் இருக்கிறார்கள்.

என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் சிலர் நம்மை மட்டம் தட்டுவதற்காக சில வேலைகளை செய்திருந்தார்கள். நாம பல வருஷமாக நல்ல ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால் அதை சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த சூழ்நிலையில் தான் நான் இந்த இடத்தில் இனி இருந்தால் சரிப்பட்டு வராது என்று வெளியே வர நினைத்தேன்.

News Reader Nirmala Periasamy Leaving Sun TV reason to come out

அதுபோல நான் சுதந்திரமாக வேலை செய்வதற்கு உள்ள சூழ்நிலைகளும் அந்த நேரத்தில் அங்கு இல்லை. எனக்கு அந்த இடத்தில் ஒரு சாதகமான சூழ்நிலை நிகழவில்லை அதனால் இதற்கு மேலும் இனி எங்கு இருந்தால் நாம் நாமாக இருக்க மாட்டோம் என்று எனக்குத் தோன்றியதால் நான் வெளியே வந்தேன் என்று அந்த பேட்டியில் நிர்மலா பெரியசாமி பேசியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+